சரிந்த ரப்பர் உற்பத்தி, துடிக்கும் டயர் தயாரிப்பாளர்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : 2018 - 19 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 ஜனவரி) இயற்கை ரப்பர் உற்பத்தி 7 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது என இந்திய ரப்பர் வாரியம் சொல்லி இருக்கிறது.

 

சர்வதேச அளவில் ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தோனேஷியா, மலேஷியா, வியட்நாம், சீனா ஆகிய நாடுகள் முறையே இரண்டு முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். நம் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியாவில் ரப்பர் உற்பத்தி குறைந்திருக்கிறது குறிப்பாக இயற்கை ரப்பர் உற்பத்தி கு
றைந்திருப்பதால், இந்திய டயர் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

குறையும் முதலீடுகள்.. சரியும் பொருளாதாரம்.. மோடி ஆட்சியில் நடப்பது என்ன?- பரபர புள்ளி விவரம்

வணிக அமைச்சகத்திடம்

வணிக அமைச்சகத்திடம்

இந்த இயற்கை ரப்பர் பற்றாக்குறை குறித்தும், தங்களுக்கு இயற்கை ரப்பர் கிடைப்பதை உறுதி செய்யும் படியும் டயர் உற்பத்தியாளர்கள் மத்திய வணிக அமைச்சகத்திடம் பேசி இருக்கிறார்களாம்.

10 மாத கணக்கு

10 மாத கணக்கு

கடந்த 10 மாதங்களில் (ஏப்ரல் 2018 - ஜனவரி 2019) இயற்கை ரப்பர் நுகர்வு 12% ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் இயற்கை ரப்பர் உற்பத்தியோ 7% குறைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் (Automotive Tyre Manufacturers Association - ATMA).

முந்தைய நிதி ஆண்டில்
 

முந்தைய நிதி ஆண்டில்

கடந்த ஏப்ரல் 2017 - ஜனவரி 2018 காலத்திலும் இதே போல ரப்பர் உற்பத்திக்கும், நுகர்வுக்குமான இடைவெளி 3.16 லட்சம் டன்னாக இருந்தது. இப்போதும் இந்த நிதி ஆண்டில் (2018 - 19-ல்) 4.63 லட்சம் டன்னாக இருக்கிறது.

ரப்பர் போர்ட்

ரப்பர் போர்ட்

இதைக்குறித்து ரப்பர் போர்ட் அதிகாரிகளிடம் கேட்ட போது "தற்போது விவசாயிகள் ரப்பர் விளைச்சலுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். அதோடு கடுமையான வெப்பம் மற்றும் வறாட்சி நிலவியதும் ரப்பர் விளைச்சல் குறைய காரணமாக இருக்கிறது. ரப்பர் உற்பத்தி குறைந்திருப்பதால் விலை அதிகரித்துவிடும் என அச்சப்பட வேண்டாம். மீண்டும் ரப்பர் விளைச்சல் சர்வதேச அளவில் சீராகி வருகிறது" எனக் கூறினார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

rubber production is going lower and lower but rubber consumption is going higher and higher

rubber production is going lower and lower but rubber consumption is going higher and higher
Story first published: Friday, March 15, 2019, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X