பேஸ்ட், ஷாம்பு, பெட் பாட்டில்களால் பூமியில் குவியும் பிளாஷ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: பிளாஷ்டிக் பை உபயோகிக்க சட்டம் போட்டாலும், பேஸ்ட், ஷாம்பு ஷாசேக்கள், பெட் பாட்டில்கள் வடிவில் பிளாஷ்டிக் பொருட்கள் பூமியில் குவிந்து மண்ணை மாசுபடுத்தி வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் நிறுவனங்களில் கோக-கோலா முன்னணியில் உள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சுமார் 10800 கோடி பெட் பாட்டில்கள் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.

 

உலக அளவில் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் சுமார் 5ல் ஒரு பங்கை கோக-கோலா நிறுவனமே உபயோகிக்கிறது. 1 நிமிடத்திற்கு சராசரியாக 2 லட்சம் பெட் பாட்டில்களையும் நாள் 1க்கு 28 கோடி பெட் பாட்டில்களையும் இந்நிறுவனம் தயாரிப்பது தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் 150 முன்னணி நிறுவனங்களில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பொடி ஆகியவற்றை தயாரிக்கும் கோல்கேட்-பாமோலிவ், நெஸ்லே, யூனிலிவர் போன்றவைகளும் உள்ளன.

எல்லாமே பிளாஸ்டிக்

எல்லாமே பிளாஸ்டிக்

ஒரு காலத்தில் நாம் தினசரி பயன்பாட்டிற்காக பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட துணிப்பைகளை பயன்படுத்தி வந்தோம். பிளாஸ்டிக் உபயோகிக்கும் பழக்கம் நுழைந்த உடனே, துணிப்பைகளை பயன்படுத்துவதை சுத்தமாக மறந்து விட்டோம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை ஏதோ தெய்வ குற்றம் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய பின்பு, நாம் காய்கறி வாங்கவோ மளிகை சாமான்கள் வாங்கவோ தப்பித்தவறி துணிப்பையை கொண்டுபோனால் நம்மை ஏளனமாக பார்த்து சிரிப்பதும் நடந்ததுண்டு. பிளாஸ்டிக் பொருட்களையும் பிளாஸ்டிக் பை வைத்திருப்பவர்களை மரியாதையோடு நடத்துவதும் துணிப்பைகளை வைத்திருப்பவர்களை கண்டு கொள்ளாமல் போவதும் உண்டு.

ஓசோன் படலத்தில் ஓட்டை

ஓசோன் படலத்தில் ஓட்டை

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இதனால் பலவிதமான நோய்களும் பரவும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் வேண்டாம்
 

பிளாஸ்டிக் வேண்டாம்

பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கும் பைகளை நாம் வாங்கி உபயோகித்து தூக்கிப்போட்டுவிடுவதால், அதை உண்ணும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும், முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர.

இந்நிலையில், எலென் மாக்ஆர்தர் (Ellen Macarthur) என்னும் சமூக ஆர்வலர், தான் நடத்தி வரும் Ellen Macarthur Foundation என்ற அறக்கட்டளை மூலமாக முன்னணி நிறுவனங்கள் தாங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் அளவை தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுவந்தார்.

கோக-கோலா

கோக-கோலா

சமூக ஆர்வலர்கள் சொல்லும் எதையும் முன்னணி நிறுவனங்கள் கண்டு கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோக-கோலா ஆண்டு தோறும் சராசரியாக 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

28800 கோடி பெட் பாட்டில்

28800 கோடி பெட் பாட்டில்

கோக-கோலா நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் குளிர்பானங்களை அடைக்கும் பெட் பாட்டில்களை தயாரிப்பதற்காக சுமார் 30 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. 30 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு 1 நிமிடத்திற்கு சுமார் 2 லட்சம் பெட் பாட்டில்களையும், ஒரு நாளைக்கு 28 கோடி பெட் பாட்டில்களை ஆண்டுக்கு சுமார் 10800 கோடி பெட் பாட்டில்களையும் தயாரிப்பதாக அந்நிறவனம் தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

குவியும் பிளாஷ்டிக்

குவியும் பிளாஷ்டிக்

கோக-கோலா நிறுவனத்தைப் போலவே பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை(Tooth Paste) காஃபி பவுடர், டீ தூள் பாக்கெட் போன்றவற்றை தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்களும் கனிசமான அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக மாக்ஆர்தர் தெரிவித்துள்ளார்.

 முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

கோக-கோலா நிறுவனத்தப் போலவே உலகின் முன்னணி நிறுவனங்களில் 150 நிறுவனங்கள் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரிவிதுள்ளன. ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்படுகின்றன என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டன.

கோல்கேட் பாமோலிவ்

கோல்கேட் பாமோலிவ்

இந்நிறுவனத்தைப் போலவே பல முன்னணி நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவுகளை தெரிவித்துள்ளன. யூனிலிவர் 610000 டன், கோல்கேட்-பாமோலிவ் சுமார் 287000 டன், டான்ஒன்(பிரான்ஸ்) சுமார் 750000 டன், மார்ஸ் இன்க் 129000 டன், நெஸ்லே 170000 டன் மற்றும் எஸ்சி ஜான்சன் 90000 டன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக எலென் மாக்ஆர்தர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coca-Cola using 30 lakh ton plastics for pet bottles a year

Coca-Cola Co. used 3 million ton of plastic packaging in 2017, a number that equals 200,000 PET bottles per minute or 108 billion bottles per year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X