இனி தீவிரவாத எதிர்ப்பும் BRICS நாடுகளின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

uritiba: மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில், பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் (BRICS Brazil-Russia-India-China-South Africa) மாநாட்டில் தீவிரவாதத்தை எதிர்ப்பதும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் முக்கிய வேலைகளில் ஒன்று என உரக்கச் சொல்லி இருக்கிறது இந்தியா.

 

இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருலாதார விவகாரத் துறை செயலர் டி.எஸ்.திருமூர்த்தி பேசினார்.

இனி தீவிரவாத எதிர்ப்பும் BRICS நாடுகளின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாம்..!

"பிரேசில் தன் முக்கிய குறிக் கோள்களாக அறிவியல் அறிவு பகிர்வு, தொழில்நுட்பப் பகிரு, கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் பொருளாதாரம், புதிய மேம்பாட்டு வங்கிகள் மற்றும் பிரிக்ஸ் பிசினஸ் கவுன்சில் போன்ற விஷயங்களோடு தீவிரவாதத்தையும் சேர்த்திருக்கிறது இங்கு தனியாக குறிப்பிடப் பட வேண்டியது" எனப் பேசி இருக்கிறார் திருமூர்த்தி.

பிரேசில் தேர்ந்தெடுத்திருக்கும் முக்கியக் குறிக் கோள்களை இந்தியா ஆதரிக்கிறது. குறிப்பாக தீவிரவாதத்துக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை அழுத்தமாகவும், அர்த்தமுள்ளதாகவும் உருப்பு நாடுகளோடு எடுத்துச் செல்வோம் எனவும் சொல்லி இருக்கிறார்.

அதோடு சுகாதாரம் மற்றும் பழங்காலத்து மருத்துவம் போன்றவைகளையும் முக்கியக் குறிக்கோள்களாக எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அடிக் கோடிட்டு காட்டி இருக்கிறதாம் இந்தியா.

ஆக சுற்றி வளைத்து பாகிஸ்தானைத் தான் கட்டம் கட்டி இருக்கிறது இந்தியா. அதற்கு ஏறத்தாள பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் ஓகே சொல்லி இருக்கின்றன. சீனா மட்டும் இதைக் குறித்து வாய் திறக்கவே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

counter terrorim is also an important thing to all brics countries

counter terrorim is also an important thing to all brics countries
Story first published: Saturday, March 16, 2019, 19:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X