5000 பேரை விட்டுக்கு அனுப்பும் Ford Motor..! 7000 பேரை வீட்டுக்கு அனுப்பும் Volkswagen..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dearborn: உலகின் முன்னனி கார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஃபோர்ட் மோட்டார்ஸ் ஒரு பெரிய அளவிலான ஊழியர்களை வீட்டுக்க் அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

ஃபோர்ட் மோட்டார்ஸின் ஆலைகளில் சுமார் 54,000 பேர் வேலை செய்கிறார்களாம். இவர்களில் ஜெர்மனியின் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் இருந்து 5,000 ஜெர்மானியர்களையும், ஒரு கணிசமான எண்ணிக்கையில் பிரிட்டன் நாட்டு ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்க இருக்கிறார்களாம்.

உலகம் முழுவதும் வியாபாரக் கொடி நட்ட ஃபோர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்று வரை தன் வர்த்தகத்தை நிலை நிறுத்த முடியவில்லையாம்.

2019-ல் இந்தியாவில் டெஸ்லா..! எலான் மஸ்க் உறுதி..!

மூடு விழா

மூடு விழா

தேவை இல்லாத உற்பத்தி ஆலைகளை மூடுவது, அதிகம் விற்பனை ஆகாத நஷ்டத்தைத் தரக் கூடிய கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்துவது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடு பட இருப்பதால் தான் இத்தனை பேரின் வேலை பறி போய் இருக்கிறது.

வருவாய் குறைவு

வருவாய் குறைவு

தொடர்ந்து கார் விற்பனையில் தன் சந்தையை இழந்து வருவதால் ஃபோர்ட் மோட்டார்ஸுக்கு தொடர்ந்து வருவாய் சரிந்து வருகிறதாம். இதனால் ஒரு கட்டத்தில் அன்றாட செலவுகளைச் செய்யக் கூட தடுமாறும் சூழல் வந்துவிடுமோ என பயப்படுகிறார்களாம்.

செலவு அதிகம்
 

செலவு அதிகம்

தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் புதிய புதிய டெக்னாலஜிகள் மாறி வருவதால் நிறுவனம் தன்னை சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ளவே அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கிறதாம். அதனால் இந்த லே ஆஃப்-ஐ முடிவை எடுத்து இருக்கிறார்களாம்.

Volkswagen லே ஆஃப்..?

Volkswagen லே ஆஃப்..?

ஃபோர்ட் மோட்டார்ஸைப் போலவே Volkswagen நிறுவனமும் 7000 பேரை வேலையில் இருந்து நீக்க இருக்கிறார்களாம். Volkswagen நிறுவனத்துக்கு ஆகும் செலவுகளில் 6.7 பில்லியன் டாலர் செலவைக்குறைக்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த 7000 பேரை வேலையில் இருந்து நீக்க இருக்கிறார்களாம். கூடுமான வரை பதவி இறக்கம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ford is laying off its 5000 employees and Volkswagen is demoting and laying off its 7000 employees

ford is laying off its 5000 employees and Volkswagen is demoting and laying off its 7000 employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X