மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கு அயர்ன் மேன் சூட்..! Patent வாங்கிவிட்டார்களாம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன்: மார்வெல் ஸ்டூடியோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று இந்த அயர்ன் மேன் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரம், ஒரு பிரமாண்ட இரும்பு கவச ஆடையை அணிந்து கொண்டு பல சாகசங்களைச் செய்யும்.

 

அந்த சாகசங்களுக்கு அதிமுக்கியமாக இருப்பது அந்த இரும்பு ஆடை தான். இப்போது அப்படி ஒரு ஆடையை, தான் கண்டு பிடித்துவிட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் சொல்கிறது.

 
மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கு அயர்ன் மேன் சூட்..! Patent வாங்கிவிட்டார்களாம்..!

Gravity Industries என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் கண்டு பிடித்த, புதிய அயர்ன் மேன் சூட்டுக்கு ஜெட் சூட் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த ஜெட் சூட்டில் பல்வேறு டர்பைன் இன்ஜின்களைப் பொறுத்தி இருக்கிறார்கள். இந்த இன்ஜின்களால் சுமார் 1000 குதிரைத் திறன் வரை சக்தியை உற்பத்தி செய்ய முடியுமாம். இந்த ஜெட் சூட்டை அணிந்து கொண்டு அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாமாம். இந்த சூட் தான் உலகிலேயே ஒரு தனி மனிதனால் கட்டுப்படுத்தப் படக் கூடிய ஜெட் பவர் சூட் என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறதாம்.

இந்த ஜெட் பவர் சூட்டை Gravity industries-ன் நிறுவனர் ரிச்சர்ட் ப்ரவுனிங் தன் பெயரில் patent வாங்கி இருக்கிறார். இந்த ஆண்டின் முடிவுக்குள் தன் ஜெட் சூட்டை அணிந்து கொண்டு பறக்கும் ஒரு ரேஸை நடத்தி தன் இயந்திரத்தை பிரபலப் படுத்தப் போகிறாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: patent
English summary

new iron man suit patent applied by gravity industries founder richard browning

new iron man suit patent applied by gravity industries founder richard browning
Story first published: Saturday, March 16, 2019, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X