இல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்துவிட்டு காத்திருந்த காலம் போய் இனிமேல் நமக்கு வசதியான நேரத்தில் சிலிண்டர் டெலிவரி பெறும் சேவையை மத்திய அரசு எளிமையாக்கி உள்ளது. சிலிண்டர் புக் செய்யும்போதே எப்போது டெலிவரி செய்ய வேண்டும் என்ற நேரத்தையும் குறிப்பிடுவதால் சிலிண்டர் டெலிவரிக்காக தேவையில்லாமல் காத்திருக்க வேண்டிய அவசியம் இனிமேல் கிடையாது.

 

தாங்கள் விரும்பும் நேரத்தில் சிலிண்டர் டெலிவரி பெறுவதற்கு கூடுதல் கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டும். டெலிவரி பெறும் நேரத்திற்கு ஏற்ப டெலிவரிக்கான கட்டணமும் மாறுபடும்.

வீட்டில் இருந்து கொண்டு நாம் ஹோட்டல் சாப்பாடு வேண்டுமென்றால் முன்கூட்டியே புக் செய்துவிட்டு எந்த நேரத்தில் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுவிட்டு அதற்காக நாம் காத்திருப்போம். புக்செய்த சாப்பாடு வந்த உடன் அதற்கான பில் தொகையை கொடுத்துவிடுவோம். அதே போல இனி சமையல் கேஸ் சிலிண்டரையும் பெறலாம்.

சிலிண்டர் எப்போ வரும்

சிலிண்டர் எப்போ வரும்

நாம் இப்போது நமக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்பட்டால் ஆன்லைனில் புக் செய்துவிட்டு காத்திருப்போம். ஆனால் அது எப்போது நமக்கு டெலிவரி செய்யப்படும் என்பது தெரியாது. காரணம் முதலில் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை என்பதால் நமக்கு எப்போது டெலிவரி செய்யப்படும் என்பது நமக்கு தெரியாது. காலையிலோ அல்லது மாலையிலோ என்றால் எந்த பிரச்சனையும் கிடையாது.

இனி கவலை வேண்டாம்

இனி கவலை வேண்டாம்

சிலிண்டர் வருவது அலுவலக விடுமுறை நேரம் என்றால் மிகவும் நிம்மதியாக இருக்கும். அலுவலக வேலை நேரத்தில் என்றால் தான் பிரச்சனையே. சிலிண்டர் டெலிவரி வாங்குவதற்காக அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு காத்திருக்க வேண்டும். ஒருவேளை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் யாராவது ஒருவர் வீட்டில் இருக்கவேண்டியது நேரும். இனிமேல் இந்தக் கவலை நமக்கு தேவையில்லை.

சிலிண்டர் டெலிவரி ரொம்ப ஈசி
 

சிலிண்டர் டெலிவரி ரொம்ப ஈசி

சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் புக் செய்வதை எளிமையாக்கிய மத்திய அரசு தற்போது சிலிண்டரை டெலிவரி செய்வதையும் மிக எளிமையாக்கி கொடுத்திருக்கிறது. சிலிண்டர் புக் செய்யும்போதே அதை எந்த நேரத்தில் நமக்கு டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதையும் சிலிண்டர் புக் செய்யும் போதே குறிப்பிடவேண்டும்.

அலைச்சல் இல்லை

அலைச்சல் இல்லை

நமக்கு வேண்டிய நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட வேண்டுமானால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையுடன், எந்த நேரத்தில் டெலிவரி கொடுக்கவேண்டும் என்று நாம் நினைக்கும் நேரத்தையும் கூடவே குறிப்பிட்டு அந்த நேரத்திற்கான தொகையையும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதனால் நேரமும் மிச்சமாகிறது. எந்தவிதமான அலைச்சல் மற்றும் அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

டெலிவரி கட்டணம்

டெலிவரி கட்டணம்

அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பே, அதாவது காலை 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ.50ம், புறநகர் மற்றும் பிற பகுதிகளில் ரூ.40ம் டெலிவரி கட்டணமாகச் செலுத்த வேண்டும். காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டுமெனில் சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ.25ம், புறநகர் மற்றும் பிற பகுதிகளில் என்றால் ரூ.20ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

நேரத்திற்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்

நேரத்திற்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்

அலுவலகம் விட்டு வந்த பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் பெரு நகரங்களில் ரூ.50ம், புறநகர் மற்றும் பிற பகுதிகளில் என்றால் ரூ.40ம் டெலிவரி கட்டணமாகச் செலுத்த வேண்டும். நமக்கு விருப்பமான விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செயயப்பட் வேண்டுமானால் பெருநகரங்களில் ரூ.25ம், புறநகர் மற்றும் பிற பகுதிகளில் என்றால் ரூ.20ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில்

மேற்கூறிய சிலிண்டர் டெலிவரிக் கட்டணம் விவரம் அனைத்தும் இந்தியன் ஆயில் (Indian Oil) நிறுவனத்திற்கு மட்டுமே. பிற எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் (Bharat

Petroleum), இந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டணங்கள் மாறுபடலாம். எல்லாம் சரிதான், சிலிண்டர் டெலிவரி செய்யும் ஆட்கள் வேண்டுமென்றே டெலிவரி செய்வதை தாமதப்படுத்தி அதற்காக கூடுதல் கட்டணம் கேட்டால் என்ன செய்வது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cooking Case Cylinder Delivery let's choose the time we like

Under the Preferred Time Delivery system, one can choose the day and time on which they wish to receive their LPG cylinder. This will have to be mentioned at the time of booking, with Indane charging a nominal fee for the same.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X