நேற்றே கைதான நீரவ் மோடி..! இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடி பெயரில் வழங்கிய கைது வாரண்டின் அடிப்படையில் இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடி நேற்றே கைது செய்யப்பட்டாராம். இன்று அதே வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியை அழைத்துச் செல்லப் போகிறார்களாம்.

 

இந்திய அதிகாரிகள் சார்பாக நீரவ் மோடியை ஹால்பார்ன் எனும் இடத்தில் வைத்து இங்கிலாந்தின் மெட்ரோபொலிடன் காவல் துறையினர் கைது செய்துவிட்டார்களாம். இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியை ஆஜர்படுத்தப் போகிறார்களாம்.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் பேங்கில்14,500 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு பிடிபட்டதம் லண்டன் தப்பிவிட்டார். அதனால் தான் இந்திய அமலாக்கத் துறை நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாக வைத்து தான் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடி பெயரில் கைது வாரண்டைக் கொடுத்ததாம்.

90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..! CMIE அறிக்கை..!

இந்தியா கொண்டு வருவோம்

இந்தியா கொண்டு வருவோம்

நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருப்பதாகவும், சட்ட ரீதியிலான விஷயங்களை கண்காணித்து வருவதாகவும் சொன்னது சிபிஐ. கூடிய விரைவில் நீரவ் மோடியை இந்தியா ழைத்து வரவும் வேலை செய்து வருகிறார்களாம்.

கால அவகாசம் தேவை

கால அவகாசம் தேவை

இது போல குற்றவாளிகளை நம் நாட்டுக்கு கொண்டு வர ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. இதற்கு மல்லையா வழக்கு ஒரு சிறந்த உதாரணம். எனவே எவ்வளவு விரைவாக நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர முடியும் என இந்திய விசாரனை ஆணையங்கள் நீரவ் மோடி வழக்கையும் உன்னிப்பாக கவனித்தும் வருகிறார்களாம்.

அமலாக்கத் துறை
 

அமலாக்கத் துறை

ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை நீரவ் மோடி மீது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது. அமலாக்கத் துறை நீரவ் மோடியின் 1,850 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது. மேலும் நீரவ் மோடியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் பறிமுதல் செய்திருக்கிறது.

டெலிக்ராஃப் பத்திரிகை

டெலிக்ராஃப் பத்திரிகை

சமீபத்தில் தான் நீரவ் மோடி ஒரு விலை உயர்ந்த (சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள) ஜாக்கெட்டை அணிந்து கொண்டு டெலிகிராஃப் பத்திரிகையாளர் மைக் பிரவுனின் கேள்விகளுக்கு தில்லாக No comments என பதிலளித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

nirav modi arrested yesterday will be produced in westminster court today

nirav modi arrested yesterday will be produced in westminster court today
Story first published: Wednesday, March 20, 2019, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X