மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சியோமி ஸ்மார்ட் ஃபோனுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பைத் தொடர்ந்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலும் தன்னுடைய உற்பத்தியை தொடங்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

 

ஸ்ரீபெரும்புதூரில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இதுவரை உதிரிப் பாகங்களை மட்டுமே தயாரித்து வந்தனர். தற்போது இங்கு ஸ்மார்ட் ஃபோன்களையும் தயாரிக்க சியோமி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஃபிளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் ஸ்மார்ட் ஃபோன் தொழிற்சாலைகளை சியோமி நிறுவனம் நடத்தி வருகிறது. தற்போது 7ஆவதாக தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தியை தொடங்கி கால் பதிக்கிறது சியோமி.

ஸ்மார்ட் போன் தொழிற்சாலை

ஸ்மார்ட் போன் தொழிற்சாலை

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ப ஸ்மார்ட் ஸ்போன் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தினசரி வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு காரணம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதுதான்.

தினந்தோறும் புதுசு

தினந்தோறும் புதுசு

நாம் புதிதாக ஏதாவது ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட் ஃபோன் வாங்கிய அடுத்த நிமிடம் பல புதிய மாடல்கள் வரிசை கட்டி நிற்கும். அந்த அளவிற்கு ஸ்மார்ட் ஃபோன்களின் வருகை நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் சீன தயாரிப்புகள் என்றால் விலை குறைவாக இருக்கும். தரத்திற்கும் பாதகமில்லை.

சியோமி 30 சதவிகிதம்
 

சியோமி 30 சதவிகிதம்

சீன தயாரிப்பான சியோமி (Xiaomi) ஸ்மார்ட் ஃபோன்களும் அதுபோலவே விலை குறைவாகவும் அதிக தரத்துடனும் உள்ளன. இதன் காரணமாகவே சியோமி ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையான ஸ்மார்ட் ஃபோன்களில் சியோமியின் பங்கு 30 சதவிகிதமாகும்.

உதிரி பாகங்கள் மட்டுமே

உதிரி பாகங்கள் மட்டுமே

சியோமி நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் தன்னுடைய ஸ்மார்ட் ஃபோன் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் ஃபோன் உதிரிபாகங்களை மட்டுமே தயாரித்து வந்தது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

ஸ்ரீபெரும்புதூரில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இதுவரை உதிரிப் பாகங்களை மட்டுமே தயாரித்து வந்தனர். தற்போது இங்கு ஸ்மார்ட் ஃபோன்களையும் தயாரிக்க சியோமி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஃபிளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

வினாடிக்கு 3 ஸ்மார்ட் ஃபோன்

வினாடிக்கு 3 ஸ்மார்ட் ஃபோன்

சியோமி பிற மாநிலங்களில் ஃபாக்ஸ்கான், ஃபிளெக்ஸ், ஹைபேட் நிறுவனங்களுடன் இணைந்து மொபைல் ஃபோன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாலும் ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஃபோன் தொழிற்சாலையில் வினாடிக்கு 3 ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

மக்கள் விரும்பும் வடிவமைப்பு

மக்கள் விரும்பும் வடிவமைப்பு

இது குறித்து இந்தியாவின் சியோமி தலைமை அலுவலர் முரளி கிருஷ்ணா கூறும்போது, 'புதிய ஸ்மார்ட் ஃபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இங்குள்ள மக்கள் விரும்பும் வடிவமைப்புடன் கூடவே எங்களது கற்பனையும் கலந்து கொடுக்க முடிகிறது' எனத் தெரிவித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் விலை மலிவானதாக இருக்கும் என்பதால் தான் சியோமி நிறுவனம் இத்திட்டத்துடன் கை கோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi smart phone production starts at Sriperumbudur under Make in India

Chinees brand Xiaomi smart phone production started with Flex company under Make In India plan. In addition to that, in this factory can produce 3 smart phone with in the second.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X