இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிப்ரவரி 2019-க்கான கார்கள் விற்பனை விவரம் வெளியாகி இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சமூகம் இந்த கணக்கை வெளியிட்டிருக்கிறது.

 

முதல் ஆறு இடங்களை மாருதி சுஸிகி நிறுவன கார்களும், அடுத்த மூன்று இடங்களை ஹியூண்டாய் நிறுவன கார்களும் பிடித்திருக்கின்றன. 10-வது இடத்தைத் தான் டாடா மோட்டார்ஸின் டியாகோ ரக கார்கள் இடம் பிடித்திருக்கிறது.

ஹியூண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச் பேக் ரக காரான எலைட் ஐ20 11,547 வாகனங்களை விற்று பிப்ரவரி 2019-ல் 7-வது இடத்தையும், ஹியூண்டாயின் எஸ்யூவி ரக காரான க்ரெட்டா 10,206 கார்களை விற்று 8-வது இடத்தையும், க்ராண்ட் ஐ10 ரக கார்களில் 9,065 கார்களை விற்று ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

 அரசு பொருளாதார தரவுகளைத் திருத்தியது உண்மை தான்..! ஒப்புக் கொண்ட மத்தியச் செயலர்! அரசு பொருளாதார தரவுகளைத் திருத்தியது உண்மை தான்..! ஒப்புக் கொண்ட மத்தியச் செயலர்!

முதல் இடம்

முதல் இடம்

இந்த கணக்குப் படி மாருதி சுஸிகியின் மாருதி ஆல்டோ தான் பிப்ரவரி 2019-ம் மாதம் அதிகம் விற்பனையான கார். பிப்ரவரியில் மட்டும் 24,751 மாருதி ஆல்டொக்கள் விற்பனையாகி இருக்கிறதாம்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

ஆல்டோவைத் தொடர்ந்து மாருதி சுஸிகியின் ஸ்விஃப்ட் கார்கள் 18,224 எண்ணிக்கையில் கடந்த பிப்ரவரி 2019-ல் மட்டும் விற்பனை ஆகி இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. 2018 பிப்ரவரியில் இந்த ரகத்தில் 17,291 கார்கள் தான் விற்பனை ஆனதாம்.

மூன்றாம் இடம்
 

மூன்றாம் இடம்

ஸ்விஃப்டைத் தொடர்ந்து பலேனோ மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த ரக கார்கள் பிப்ரவரி 2019-ல் மட்டும் 17,944 கார்கள் விற்பனையானதாம். 2018 பிப்ரவரியில் இந்த ரகத்தில் 15,807 கார்கள் தான் விற்பனை ஆனதாம்.

நான்காம் இடம்

நான்காம் இடம்

பலேனோவைத் தொடர்ந்து ஸ்விஃப்ட் டிசையர் 15,915 கார்கள் விற்பனையாகி நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறதாம். 2018 பிப்ரவரியில் இந்த ரகத்தில் 20,941 கார்கள் விற்பனை ஆனதாம். பிப்ரவரி 2018-ல் முதலிடத்தில் இருந்த கார் ஸ்விஃப்ட் டிசையர் தானாம்.

ஐந்தாம் இடம்

ஐந்தாம் இடம்

ஐந்தாவது இடத்தில் மாருதி சுஸிகி வேகனார் இருக்கிறது. பிப்ரவரி 2019-ல் 15,661 கார்கள் விற்பனையானதாம். 2018 பிப்ரவரியில் இந்த ரகத்தில் 14,029 கார்கள் தான் விற்பனை ஆனதாம்.

ஆறாம் இடம்

ஆறாம் இடம்

ஆறாவது இடத்தில் மாருதி சுஸிகியின் காம்பேக்ட் எஸ்யூவியான விட்டாரா பிரஸ்ஸா இடம் பிடித்திருக்கிறது. பிப்ரவரி 2019-ல் 11,613 கார்கள் விற்பனை ஆனதாம். ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த ரகத்தில் 11,620 கார்கள் விற்பனை ஆனதாம். மொத்த மாருதி குழும வாகனங்களில் விட்டாரா பிரஸ்ஸாவுக்கான டிமாண்ட் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நிலையாக இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

maruti suzuki vehicles are in top 6 spots in all india car sales

maruti suzuki vehicles are in top 6 spots in all india car sales
Story first published: Friday, March 22, 2019, 17:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X