புதிய Sealed பேக்கிங்கை அறிமுகப்படுத்திய Zomato..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருகிராம்: சொமாட்டோவில் டெலிவரி செய்யும் ஒருவர், சொமாட்டோவில் ஆர்டர் செய்த உனவு வாடிக்கையாளர் ஒருவருக்கு கொண்டு சென்ற உணவை வழியிலேயே எடுத்து உண்ணும் வீடியோ சில மாதங்களுக்கு முன் இந்திய டிரெண்டானது.

 

நம்மூர் கிழவிகள் தொடங்கி இளசுகள் வரை கொஞ்ச ஜெர்க் ஆனார்கள். ஒட்டு மொத்த ஆன்லைனையும் வைரலாக்கினார்கள்.

இளசுகள் எல்லாம் கொஞ்சம் சமாதானமாக இருந்தாலும், பெருச்கள் கொஞ்சம் ஓவராகவே கடுப்பாகி விட்டார்கள். இந்த வீடியோ பெருவாரியான மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..? இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..?

பிரச்னை

பிரச்னை

வேறு வழி இல்லாமல் வாடிக்கையாளரின் உணவைத் திருடைய ஊழியரை கண்டு பிடித்து வேலையில் இருந்து துக்கியது. சொமாட்டோவுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அடி என்றால் அது அவர்களுக்கான நற்பெயர் தான். இத்தனை நாள் குருவி சேர்த்தது போல சேர்த்திருந்த நல்ல பெயரை ஒரே நாளில் காலி செய்யப் பார்த்தது இந்த உணவுத் திருட்டு சம்பவம். வேறு வழி இல்லாமல் வாடிக்கையாளரின் உணவைத் திருடைய ஊழியரை கண்டு பிடித்து வேலையில் இருந்து துக்கியது. சொமாட்டோவுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அடி என்றால் அது அவர்களுக்கான நற்பெயர் தான். இத்தனை நாள் குருவி சேர்த்தது போல சேர்த்திருந்த நல்ல பெயரை ஒரே நாளில் காலி செய்யப் பார்த்தது இந்த உணவுத் திருட்டு சம்பவம்.

நடவடிக்கை

நடவடிக்கை

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இனி இது போன்ற சில்லறை திருட்டுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தது. தற்போது அதை சீரியஸாக நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டது. சாப்பாடு பொட்டலங்களைத் திறக்கமுடியாத வகையில், புதிய பேக்கிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய பேங்கிங் முறை பாலிமரால் செய்யப்பட்டது. ஆக ஒரு குடிநீர் பாட்டிலைப் போல சீலை உடைத்தால் தான் உனவை உண்ண முடியும்.

சீல்
 

சீல்

உணவைத் தயார் செய்து டெலிவரி நபரிடம் தருவதற்கு முன்னர் உணவகத்தில் வைத்து இந்தப் புதிய பேக்கிங் முறையில் சீல் செய்யப்படுகிறது. இதனால் டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ் நபர்கள் வாடிக்கையாளரிடம் பார்சல்களைத் திறக்கப்படாத நிலையில், டெலிவரி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆள் ஆகிறார்கள். உணவை யாரும் வழியில் திறக்கவில்லை, சீல் அப்படியே தான் இருக்கிறது என வாடிக்கையாளர்களிடமும் நம்பிக்கை பெற முடியும் என கணக்கிட்டு பேக்கிங்கை மாற்ரி அமைத்திருக்கிறது சொமாட்டோ.

சீலை உடை

சீலை உடை

ஆக இப்போது வாடிக்கையாளர்களே டெலிவரி கொடுத்த உணவை சாப்பிட வேண்டும் என்றால் கூட பேக்கிங் சீலை வாடிக்கையாளர் கிழித்த பின்னர்தான் உணவை உண்ண முடியும். மேலும், உணவுப் பொட்டலங்கள் திறந்து காணப்பட்டால் உடனடியாக தங்களுக்குப் புகார் அளிக்கும்படியும் சொமாட்டோ வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதல் கட்டம்

முதல் கட்டம்

ஜொமோட்டோவின் தலைமையிடமான குருகிராமில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் 10 நகரங்களில் இந்த புதிய சீல் பேக்கிங் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி என்.சி.ஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வெளிநாடுகளிலும்

வெளிநாடுகளிலும்

அடுத்தகட்டமாக ஜொமோட்டோ சேவை இயங்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சிலி, செக் குடியரசு, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, லெபனான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுக்கல், கத்தார், சுலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, அரபு அமீரகம், இங்கிலாந்து, மலேசியா உட்பட 180 நகரங்களிலும் இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் உணவை வழங்கவுள்ளனராம். வாழ்த்துக்கள் சொமாட்டோ

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

zomato introduced a new sealed packing technique to secure thier name

zomato introduced a new sealed packing technique to secure thier name
Story first published: Friday, March 22, 2019, 18:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X