31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து..! எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமராவதி: முன்னாள் ஆந்திர முதல்வர் வொய். ராஜசேகர ரெட்டியின் மகன் மற்றும் வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமாக 375,00,00,000 (375 கோடி) ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் வெளிப்படையாக தாக்கல் செய்துள்ளார்.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு, இதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெகன் மோகன் ரெட்டி தன்னிடம்343 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடப்பா மாவட்டத்தில் இருக்கும் புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடும் ஜெகன்மோகன் ரெட்டி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இலக்கைக் கடந்த மத்திய நிதி அமைச்சகம்..!

ஜே எம் ரெட்டி

ஜே எம் ரெட்டி

இந்த வேட்பு மனுவோடு தாக்கல் செய்த சொத்துப் பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் அசையும் சொத்துக்களாக 339 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்துக்களாக 35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 499 கோடி

மொத்தம் 499 கோடி

ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி வொய்.எஸ்.பாரதி ரெட்டியின் பெயரில் சொந்தமாக 124 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் தன் சொத்துப் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். ஆக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரின் மனைவி பெயரில் இருக்கும் மொத்த சொத்துக்கள் 499 கோடி ரூபாய்.

54 கோடி அதிகரிப்பு
 

54 கோடி அதிகரிப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவியின் பெயரில் 71 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் மட்டுமே இருந்ததாக கணக்கு காட்டி இருந்தார் என்பது கவனிக்கத்தகக்து. ஆக கடந்த 5 ஆண்டுகளில் மனைவி பாரதி ரெட்டி பெயரில் உள்ள சொத்துக்கள் 54 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல், ஜெகன்மோகன் ரெட்டியின் இரண்டு மகள்கள் பெயரில் உள்ள சொத்துக்களைச் சேர்த்தால் சுமாராக 11 கோடி ரூபாய் வருகிறது என்பது பெட்டிச் செய்திகள்.

31 வழக்குகள்

31 வழக்குகள்

முன்னாள் முதல்வர் வொய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, தன்னிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்து பகீர் கிளப்பியுள்ளார். அதே போல், தான் வைத்திருக்கும் குண்டு துளைக்காத 4 வாகனங்களும், வேறு நபர்கள் பெயரில் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். 46 வயதான ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு எதிராக, 31 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jagan mohan reddys asset declaration for election

jagan mohan reddys asset declaration for election
Story first published: Saturday, March 23, 2019, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X