செய்திகள் அறிய ஸ்மார்ட் போன்களை நாடும் உலகம்.. வாட்ஸ்-அப் மூலம் 82%.. பேஸ்புக் மூலம்75%

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் செய்திகளை தெரிந்து கொள்ள அதிகளவிலான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது ராய்டர்ஸ் மற்றும் ஆக்ஸ் போர்டு பல்கழைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

இந்தியர்களின் எதிர்கால செய்திகள் மொபைல் போனையே நம்பியே உள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

 
செய்திகள் அறிய ஸ்மார்ட் போன்களை நாடும் உலகம்.. வாட்ஸ்-அப் மூலம் 82%..  பேஸ்புக் மூலம்75%

எந்தெந்த துறையில் எப்படி?

செய்திகள் வாசிப்பதில் 68% சதவிகிதம் பேர்ஸ்மார்ட்போனையே பயன்படுத்துகின்றனர். 32% சதவிகித மக்கள் தேடுதல் மூலமாகவும், 24%சதவிகித மக்கள் சமூக வலைதளங்கள் மூலமும், 18% சதவிகித நேரிடையாகவும் செய்திகளைப் பெறுகின்றனர்.

இவ்வாறு ஆன்லைனில் படிப்பவர்களில் 57% சதவிகிதம் பேர் தவறான தகவல் என்றும், 51%சதவிகிதம் பேர் பெரிதுபடுத்தப்பட்ட தகவல் என்றும், 51% சதவிகிதம் பேர் இது மிக பொறுப்பற்ற செயல்பாடு என்றும் கருதுகின்றனர்.

சம்பளம் வருமா சார்..? 4 மாத சம்பளத்துக்காக காத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்..! சம்பளம் வருமா சார்..? 4 மாத சம்பளத்துக்காக காத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்..!

தேர்தல் செய்திகள் பற்றி.....

உலகில் மிகப்பெரிய ஜன நாயாக நாடான இந்தியாவில் தேர்தல் நடக்க இருக்கிறது, இதில் தேர்தல் செய்திகளை மக்கள் எந்த அளவில் படிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஆன்லைனில் அரசியல் செய்திகளை படிப்பது உறவுகளைப் பாதிக்கும் என்றும் 49% பேரும், நண்பர்கள் மற்றும் சக நண்பர்களுடனான உறவை பாதிக்கும் என்று 50% பேரும், ஆன்லைனில் செய்திகளை படிப்பது தங்களை அவரவர் மேலதிகாரிகளிடம் சிக்க வைக்கும் என்று 55% பேரும் நம்புகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில் 35% மட்டுமே இந்த செய்திகள் உண்மை என்றும் நம்புகின்றனர். மேலும் போனில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று அறிய முடியாமால் இருப்பதாக 57% பேரும் தெரிவித்துள்ளனர்.

எந்த மீடியா???

குறிப்பாக 35 வயதிற்குற்பட்டோரில் 56% பேர் சமூக வலைதளம் மூலமாகவும், 16% பேர் பிரிண்ட் மீடியா மூலமாகவும் பயன்படுதுவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்-அப் மூலமாக 82% பேர் செய்திகளை தெரிந்து கொள்கின்றனர். மேலும் 75% பேஸ்புக் மூலமாகவும், இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவெனில் 52% பேர் செய்திகளை அறிந்து கொள்ள இவை இரண்டையுமே பயன்படுத்துகின்றனர் என்பதுதானாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smartphones are the primary device for news consume

68% indian users consume news via smart phones. India is a mobile-first news market with an overwhelming majority (68%) identifying their smartphones as their primary device for consuming news.
Story first published: Tuesday, March 26, 2019, 19:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X