400 கோடி ரூபாய் சொத்துக்களோடு தேர்தலில் களம் இறங்கும் தமிழக வேட்பாளர்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னியாகுமரி: பசுமை போர்த்திய கன்னியாகுமரி தமிழர்கள் மற்றும் மலையாளிகள் சேர்ந்து ஒரு கலவையாக வாழும் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைமையகமான கன்னியாகுமரி ஒரு மக்களவைத் தொகுதி கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவின் எலென் டேவிட்சன் 41% வாக்குகளைப் பெற்று எம்பி ஆனார்.

 

அடுத்த 2014-ம் ஆண்டு பாஜகவின் பொன்னார் 37% வாக்குகளைப் பெற்று எம்பி ஆனார். பொன்னாருக்கு அடுத்த படியாக 24.6% வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் பிடித்தார் காங்கிரஸ் கட்சியின் ஹெச் வசந்த குமார்.

இப்போது இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோருமே கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்பது தான் தமிழகத்தின் டிரெண்டிங்காக இருக்கிறது. வாருங்கள் யார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள் பார்ப்போம்.

3 கோடீஸ்வரர்கள்

3 கோடீஸ்வரர்கள்

இதுவரை கன்னியாகுமரி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களில் 3 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தான் அந்த கோடீஸ்வரர்கள்.

புதுமுகம்

புதுமுகம்

புதிதாக களம் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிற்கும் எபினேசர் 2 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். இவர் ஒரு பிசினஸ் மேன். இவர் முதல் முறையாக நிற்பதால் அதிக சொத்து விவரங்களைப் பற்றியச் செய்திகள் இன்னுக் கிடைக்கவில்லை.

பொன்.ராதா கிருஷ்ணன்
 

பொன்.ராதா கிருஷ்ணன்

தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 6.99 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். கையில் இருக்கும் ரொக்கப் பணம், வங்கியில் இருக்கும் பணம், விவசாய நிலம், பூர்வீகச் சொத்துக்கள், மனைகள், வணிக ரீதியிலான நிலங்கள் மற்றும் கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் போன்றவைகளால் தான் இந்த 6.99 கோடி ரூபாயாம். பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2014- ம் ஆண்டு வேட்புமனுத் தாக்கலின்போது 3,99,70,283 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஹெச் வசந்த குமார்

ஹெச் வசந்த குமார்

இந்த மூன்ரு பேரில் ஹெச்.வசந்தகுமாருக்கு கையில் ரொக்கப் பனம், பங்குச் சந்தை முதலீடுகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், வஸந்த் டிவி பங்குகள், அஞ்சலக சேமிப்புகள், கார்கள், நகைகள், வஸந்த் அண்ட் கோ கடைகளில் வியாபாரத்துக்கு இருக்கும் பொருட்களின் மதிப்பு என மொத்தம் 417 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறதாம். இந்த 3 பேரில் இவருக்கு தான் முதலிடம்.

இவ்வளவு கடனா..?

இவ்வளவு கடனா..?

நேற்று (25/03/2019) வேட்புமனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் 417.49 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 154.75 கோடி ரூபாய் வங்கிக்கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது எவ்வளவு

அப்போது எவ்வளவு

கடந்த 2016 நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த போது தனது சொத்துமதிப்பு 337.26 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார். அதே சொத்துப் பிரமாண பத்திரத்தில் 2016 நிலவரப்படி தனக்கு 122.53 கோடி ரூபாய் கடன் இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vasantha kumar asset worth is rs 417 crore who is going to compete in kanyakumari against pon radhakrishnan

vasantha kumar asset worth is rs 417 crore who is going to compete in kanyakumari against pon radhakrishnan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X