மைசூர் புலி திப்பு சுல்தானின் துப்பாக்கிக்கு இன்னும் குறையாத மவுசு.. 60,000 பவுண்டுக்கு ஏலம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: மைசூர் புலி என்று அழைக்கப்படும் மைசூர் மகாராஜா திப்பு சுல்தான் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

 

திப்பு சுல்தான் போர்காலங்களில் உபயோகித்த அரிய வகை பொருட்கள் , தங்க கைப்பிடி வைத்த வாள், வெள்ளி கவசத்தினால் ஆனா துப்பாக்கி, அரிய வகை துப்பாக்கிகள், போர் வாள்கள் அடங்கிய அரிய 8 வகை தொல்லியல் பொருட்கள் லண்டன் கொண்டு செல்லப்பட்டன.

மைசூர் புலி திப்பு சுல்தானின் துப்பாக்கிக்கு இன்னும் குறையாத மவுசு.. 60,000 பவுண்டுக்கு ஏலம்!

ஆங்கிலேயேர் ஆட்சிக்கு எதிராக போட்டியிட்டு மரணம் அடைந்த வீரர் திப்பு சுல்தான் உபயோகப்படுத்திய அரிய வகை பொருட்களை கூட பாதுகாக்க முடியாத இந்திய அரசு, வெளி நாடுகளில் ஏலம் போவதை தடுக்குமா?

லண்டன் கொண்டு செல்லப்பட்ட இந்த அரியவகை பொருட்கள், தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு ஏலம் விடும் தனியார் நிறுவனத்தால் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தின் ஆரம்ப மதிப்பே ஒரு மில்லியன் பவுண்ட்டு (சுமார் 9.12) என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 60,000 பவுண்டுகளுக்கு ஏலம் கேட்கப் படுகிறதாம்.

கண்டெடுத்த தம்பதியர்

இங்கிலாந்தின் பெர்க்‌ஷைர் மாகாணத்தை சேர்ந்த தம்பதியர், தமது பழைய வீட்டை சுத்தம் செய்தபோது, கிடைத்த பொருட்கள் தான் திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், தீக்கல்லியக்கத் துப்பாக்கி (flintlock gun) போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய கலைப் பொருள்களைக் கண்டெடுத்தனர்.

இவைகளை ஏலம் விட்டு நிதி திரட்டும் நோக்கில், ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் (Antony Cribb Arms & Armour Auctions ) என்ற ஏலம் விடும் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அந்த நிறுவனம் கடந்த மார்ச் 26- அன்று ஏலத்தை விட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள ஏல நிறுவனம், 'பெர்க்‌ஷைர் தம்பதியினர் நிதி திரட்டும் நோக்கில் இவற்றை ஏலம் விடவில்லை, இந்தக் கலைப் பொருள்களை அருங்காட்சியகத்துக்கோ அல்லது இந்தியாவுக்கோ திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதற்காகவே இதைப் பொதுவெளியில் ஏலம் விடுகிறோம்' என்றும் தெரிவித்துள்ளனர்.

 

'ஏலத்துக்கு வந்துள்ள பொருட்களில் உள்ள ஒரு வாளில், ஹைதர் அலியின் சின்னம் தங்கத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற வாள்கள் அனைத்தும் தங்கக் கைப்பிடியால் செய்யப்பட்டிருக்கின்றன.

அடேங்கப்பா பூனை.. ரூ. 1400 கோடிக்கு சொத்து.. இதுதாங்க உலகலத்திலேயே கோடீஸ்வர பூனை!

ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு, திப்பு சுல்தானின் தங்க மோதிரம் 1,45,000 பவுண்ட்களுக்கு கிறிஸ்டீஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. 2016-ல் நடைபெற்ற மற்றொரு ஏலத்தில் 6 மில்லியன் பவுண்ட்களுக்கு திப்புவின் மேலும் சில கலைப் பொருள்கள் ஏலம் போனது.
இப்படி தொடர்ந்து ஏலத்தில் விடப்பட்டுக் கொண்டே இருந்தால், ஒரு காலத்தில் பழமை பாரம் பரியம் என்பதே இல்லாமல் போய்விடும், இதை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல முடியுமா? முடியாதோ? மத்திய மாநில அரசுகள் இது போன்ற போன்ற அரிய பொருட்களையும் பாதுகாத்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mysore auction மைசூர்
English summary

Tipu sultan’s silver mounted gun auctioned for 60,000 pounds

A collection of rare artefacts discovered by a couple after years of lying wrapped up in their attic in the English county of Berkshire and evaluated as items from Tipu Sultan's armoury were auctioned on last Tuesday for around 1 million pounds.
Story first published: Wednesday, March 27, 2019, 17:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X