படிச்சது டாக்டருக்கு.. பிடித்தது பிசினஸ்.. பிறந்தது பாக்ஸ்விஷ்.. வியக்க வைக்கும் நெல்லூர் ஸ்ரவந்தி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெல்லூர்: வேலைக்கு செல்லும் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதுவும் ஆப்பிரிக்கா மத்தியகிழக்கு நாடுகளில் உள்ளதைவிட இங்கு குறைவு என்பதே சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.

இதையெல்லாம் மீறி ஒரு பெண் வேலைக்கு செல்கிறாள் என்றாள் தன் கணவன், பெற்றோர், குழந்தைகளை சமாதானபடுத்தி, சம்மதிக்க வைத்து வேலைக்கு வந்தாலும், வேலைக்கு செல்லும் இடங்களில் தாங்கள் சுதந்திரமாக செய்ல்பட இயலாமை, தங்களின் சுதந்திரத்தை பறிகொடுத்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நடுவில், தனக்கெனெ சமுதாயத்தில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளவர் இவரே.

 படிச்சது டாக்டருக்கு.. பிடித்தது பிசினஸ்.. பிறந்தது பாக்ஸ்விஷ்.. வியக்க வைக்கும் நெல்லூர் ஸ்ரவந்தி!

ஆந்திரமாநிலம் நெல்லூர், வெங்கடகிரியை சேர்ந்தவர். கல்வியாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் சிறுவயதில் டாக்டராக வேண்டும் என்பதே அவரின் இலட்சியம் என்று கூறுவாராம். இவரின் அம்மா பள்ளி ஆசிரியை.

நீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..! நீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..!

சிறுவயதிலேயே மார்கெட்டிங் திறமை

தன் தாய் ஒரு பள்ளி ஆசிரியை என்பதால் அவரின் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் சிவப்பு நிற பேனாவை விற்க சொல்வாராம். மேலும் அந்த சிவப்பு பேனாவை உபயோகிப்பவர்களுக்கு, அவர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களில் அரை மதிப் பெண்கள் அதிகமாக கிடைக்கும் என்று சொல்வாராம். பள்ளிப்படிப்பிலேயே மார்கெட்டிங் துறையில் கைதேர்ந்த இவர் இப்போது சும்மா இருப்பாரா?

ஜி புல்லா ரெட்டி டென்டல் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வரும் போது ஹைதராபாத்தில் தங்கி இருந்தார். இந்த தருணத்தில் இவரின் திறமையை ஆராய்ந்து பார்க்க நேரம் கிடைத்தது.

 படிச்சது டாக்டருக்கு.. பிடித்தது பிசினஸ்.. பிறந்தது பாக்ஸ்விஷ்.. வியக்க வைக்கும் நெல்லூர் ஸ்ரவந்தி!

இந்த நிலையில் வார இறுதியில் கிடைக்கும் நேரங்களில் முத்து நகரமான ஹைதராபாத்தில் வலம் வரும்போது ஏதேச்சையாக சந்தித்த ஒருவரின், மேல்படிப்பை ஊக்குவித்து அவரின் பெற்றோரிடம் பேசி அவரை வெளி நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இவரின் மார்கெட்டிங் திறமையை அறிந்த அப்பெற்றோர், ஸ்ரவந்தியின் அறிவைக் கண்டு அவரை ஒரு வெளி நாட்டு நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜராக சேர்த்து விட்டனர்.

ஆனால் நவம்பர் 2017 வரை மட்டுமே வேலை செய்துவந்த ஸ்ரவந்தி, பின்னர் தனது பட்டப் படிப்பை முடித்த கையோடு பாக்ஸ்விஷ் என்ற, வணிக ஆலோசனை நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால் மக்கள் இதை எளிதில் நம்பவில்லை. ஏனெனில் ஒரு டாக்டர் ஏன் இப்படி? என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மருத்துவ துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிறுவனத்திடமும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபித்துவரும் வரும் நிறுவனங்களுடம் வேலை செய்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் கடந்த 2 வருடங்களுக்குள் 20 நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அதில் 6 எம்.என்.சி நிறுவனங்களும் அடங்கும் என கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்ததாக கூறும் ஸ்ரவந்திக்கு, ஆரம்பத்தில் பெற்றோரின் ஆதரவு என்பது இல்லையாம். ஆனால் தற்போது அவர்கள் மிக சந்தோஷமாக உள்ளதாக கூறுகிறார். தற்போது தன் தாயின் சக பணியாளர்களின் பிள்ளைகளுக்கும் வேலை வாய்ப்பினை கொடுப்பதாக சொல்கிறார்.

ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்கு கஷ்ட பட்ட காலம் போய், இன்று எனது நிறுவனத்தில் 40 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இது நான் என்னையே நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பாய் அமைந்துள்ளது. இதோடு மட்டும் அல்லாமல் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டுவதும் இவரின் இலட்சியம் என்கிறார். எப்படியேனும் பெண்ணாக இருந்து இந்த அளவுக்கு பெண்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ள ஸ்ரவந்திக்கு பாராட்டுகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: business தொழில்
English summary

Women dentist to start marketing business

Sravanthi says that she has miles to go before she sleeps because she still has a lot to accomplish. For starters, she wants all her clients to consider Boxwish as a one-stop shop for all their marketing related queries and oh, she wants to open a multi-speciality hospital too.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X