மறந்து போன ஆடியோ கேஸட்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: சரியா சுத்தாமல் சில நேரம் புரண்டு கொண்டு ஸ்டக் ஆகி விடும். பிறகு பேனாவை எடுத்து பின்முனைப் பக்கமாக நடுவில் உள்ள சக்கரத்தில் வைத்து மெல்லச் சுற்றி சரி செய்த பின்னர் போட்டுக் கேட்போம்.. ஆஹா.. அந்த சுகம் மீண்டும் வருமா.. வரப் போகுதுங்க வரப் போகுது.. நாம ஆடியோ கேசட் பற்றித்தான் இப்ப பேசிட்டிருக்கோம்!

ஒரு காலத்தில் பாட்டு என்றாலே ஆடியோ கேஸட் தான். இல்லையெனில் ரேடியோ தான். ஆனால் தற்போதைய காலத்தில் டிவி, டிவிடி பிளேயர், எம்பி3, யூடியூப் என்று பாட்டு கேட்கும் பழக்கம் வேறு லெவலுக்கு மாறி விட்டது. ஆடியோ கேஸட் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. இப்போது கேஸட்களைக் யார் கண்டு கொள்கிறார்கள்.

சர்வதேச பணபறிமாற்ற மோசடி : எஸ்பிஐ உள்ளிட்ட 36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி ஆர்பிஐ அபராதம் சர்வதேச பணபறிமாற்ற மோசடி : எஸ்பிஐ உள்ளிட்ட 36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி ஆர்பிஐ அபராதம்

கேஸட் எப்படி இருக்கும்

கேஸட் எப்படி இருக்கும்

இன்றைய தலைமுறையினருக்கு கேஸட்டா அது என்னா? எப்படி இருக்கும் என்ன கேள்விதான் வருகிறது. செவ்வக வடிவ பிளாஸ்டிக் கேஸட்டில் இரு பக்கம் இருக்கும். முதல் பக்கம் ஏ இராண்டாவது புறம் பி என்று இருக்கும். இதன் உள்புறம் காந்த நாடாவால் ஆன நீண்ட டேப்கள் இருக்கும்.

இசை கேஸட்டுகள்

இசை கேஸட்டுகள்

தலைசிறந்த இசைக் கலைஞர்களான அரினா கிராண்டே மற்றும் ஜஸ்டின் பீபரும் தங்களது இசை வெளியீடுகளை, இந்த ஆடியோ கேஸட் மூலம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஆடியோ கேஸட்களில் உள்ள காந்த நாடாவிற்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் இதன் தேவை அதிகரித்துள்ளதாம்.

அதிகரிக்கும் கிராக்கி

அதிகரிக்கும் கிராக்கி

இதனால் தரமான காந்த நாடா உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் மத்திய நாடுகளிலும், மேற்கு பிரான்சிலும் இதன் தேவை உள்ளதாகவும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்டெப், தனது தந்தை மிசோரி கடந்த 50 வருடங்களுக்கு முன்பு நேஷனல் ஆடியோ நிறுவனத்தை நிறுவியிருந்தாராம். 2000 மேற்பட்ட குறுந்தகட்டின் ஆதிகத்தால், மிசோரியின் தொழில் படுத்த படுக்கையாகி விட்டதால், மொத்தமாக இத்தொழிலை கைகழுவினார்.

மீண்டும் தயாரிப்பு

மீண்டும் தயாரிப்பு

இந்த நிலையில் 2000-ம் ஆண்டின் மத்தியில் பெர்ல் ஜாம் மற்றும் தி ஸ்மாஷிங் பம்ப்கின்ஸ் போன்ற இசைக் குழுக்கள் கேஸட்களை மீண்டும் தயாரிக்க துவங்கின. இந்த நிலையில் தனது உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்த தென் கொரிய நிறுவனத்திடமிருந்து 3,00,000 ரீல்ஸ் டேப்களை நேஷனல் ஆடியோ நிறுவனம் வாங்கியது.

18 மில்லியன்

18 மில்லியன்

கடந்த 2016-ம் ஆண்டு தனது கையிருப்பில் இருந்த கேஸட்கள் குறைய ஆரம்பிக்கவே, நேஷனல் ஆடியோ உற்பத்தி நிறுவனம் பழமையான நின்றுபோன நிறுவனங்களின் உற்பத்தி சம்பந்தமான பொருட்களை பல மில்லியன் டாலர்கொடுத்து மீண்டும் உற்பத்தியில் இறங்கியது. கடந்த ஆண்டில் மட்டும் 18 மில்லியன் கேஸட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 3,500 பதிவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் ஸ்டீவ் ஸ்டெப் கூறியுள்ளார்.

சிறந்த எதிர்காலம்

சிறந்த எதிர்காலம்

தங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த நிறுவனங்கள் தற்போது மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளன. மீண்டும் கேஸட்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இருப்பதாகவும், இதற்கென ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு என்கிறார். கடந்த நவம்பர் முதல் மாண்ட் செயின்ட் மைக்கேல் அருகே முல்லன் என்ற பிரெஞ்ச் நிறுவனமும் ஆடியோ கேஸட் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட்களுக்காகவும், மிலிட்டரி ஆடியோ ஸ்டியோக்களுக்கும் கேஸட் டேப்களை சப்ளை செய்து வந்த முல்லன் நிறுவனம், தற்போது ஆடியோ கேஸட்களையும் உற்பத்தி செய்வது ஆடியோ கேஸட் உலகத்தில் மீண்டும் ஒரு இசை புரட்சியைமுல்லன் நிறுவனம் உருவாக்கும் என்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீன் லுக்ரெனோ.

அதிகரிக்கும் விற்பனை

அதிகரிக்கும் விற்பனை

அமெரிக்காவில் கேஸட் ஆல்பங்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளை விட கடந்த 2018-ம் ஆண்டு 23% அதிகரித்திருக்கிறதாம். அதாவது 1,78,000 பிரதிகளாக இருந்தது, கடந்த 2018ஆம் ஆண்டில் 2,19,000பிரதிகளாக அதிகரித்துள்ளதாம். இது 1994 களில் ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை, அதுவும் 246 மில்லியன் கேஸட்கள் எங்கே, தற்போது எங்கே, இருப்பினும் 2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை. இதுவே 1988 களில் 416 மில்லியன் டாலர்களாக இருந்தது என்றால் நம்ப முடிகிறாதா? ஆனால் இது தான் உண்மை.

ஒரு காலத்தில் நாம் கேட்ட அந்த இளையராஜா பாட்டுக்களை மனசுக்குள் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க மக்களே!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: music இசை
English summary

cassettes to make a comeback

But as top musicians including Ariana Grande and Justin Bieber release their music on tape and demand continues to climb, the niche revival has faced a global shortage of music-quality magnetic tape needed for production.
Story first published: Thursday, March 28, 2019, 10:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X