ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரப் போகும் டோல்கேட் கட்டணம்.. அதிர்ச்சியில் வாகனதாரிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசிக்கு நடுவே வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து சுங்க கட்டணம் ரூ.5 முதல் 15 வரை உயரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

 

குறிப்பாக தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ 5 முதல் 15 வரை அதிகரிக்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரப் போகும் டோல்கேட் கட்டணம்.. அதிர்ச்சியில் வாகனதாரிகள்

மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மொத்தம் 43 சுங்கச் சாவடிகளில் 20 சுங்க சாவடிகளில் மட்டும் இந்த ஏற்றம் அமலுக்கு வரும் எனவும், மீதம் 23 சுங்கச் சாவடிகளில் விரிவாக்க பணிகள் மேற்கொள்வதால் இந்த கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.

வாராக் கடன்.. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க.. தீர்ப்பாயத்திடம் குவியும் மனுக்கள்

இதன்படி சென்னசமுத்திரம்,ஆத்தூர், கிரிஷ்ணகிரி, வாகைகுளம் பரனூர், வானூர், ஸ்ரீ பெரும்புதூர், வாணியம்பாடி, சூரப்பட்டு உள்ளிட்ட சுங்க சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும், சென்னையிலிருந்து பெங்களூரிலிருந்து , சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள 6 சுங்கச் சாவடிகளும் அடங்கும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள், டெம்போ, கார், தனியார் பேருந்துகள் முதலிய வாகன உரிமையாளர் மத்தியில் அதிருப்தியே காணப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஜி.எஸ்.டி செலுத்தி வரும் நிலையில் மேன்மேலும் உயர்ந்து வரும் கட்டணங்கள் கடுப்பைத்தான் தருகின்றன என்கின்றனர் வாகன உரிமையாளர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: toll டோல்கேட்
English summary

Toll rates to be revised at over 20 toll plazas

Toll rates at over 20 plazas under the control of the national highway authority of india in state are to be revised from april 1.
Story first published: Thursday, March 28, 2019, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X