ஊலலலலலா.. ஓலா தரும் ஒரு சூப்பர் ஆஃபர்.. ஆமாங்க அறிமுகமாகிறது செல்ஃப் சர்வீஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: கால் டாக்ஸி நிறுவனமான ஓலா, தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பாதையில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

 

தனது சேவையில்இன்னும் 10,000 கார்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம்என்னவெனில் செல்ப் டிரைவிங் சர்வீஸையும் அது அறிமுகப்படுத்தவுள்ளது.

ஊலலலலலா.. ஓலா தரும் ஒரு சூப்பர் ஆஃபர்.. ஆமாங்க அறிமுகமாகிறது செல்ஃப் சர்வீஸ்!

இதில் ஓலா கார்களை சொந்த கார்களை போல உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அவரவர்களே செல்ப்டிரைவ் செய்து கொள்ளும் வசதிகொண்டு வர உள்ளது. மேலும் கார்பரேட் ஊழியர்களை கவரும் விதமாக எல்யூவி, சேடன் உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் மூலம் 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் உபர்நிறுவனத்துடன் கடுமையான போட்டியை உருவக்கியுள்ளது. இதை அடுத்த கட்டத்திற்குகொண்டு செல்லும்மாறு தற்போது மேலும் 500 மில்லியன்டாலர்களை முதலீடு செய்து செல்ப் டிரைவ் வசதியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல முடிவுசெய்துள்ளது. இது ஓலா உபர் நிறுவனங்களுக்கு இடையே மேலும் பெரும் போட்டியை உருவாக்குவதோடு, தங்கள் நிறுவனங்களை முன்னணியில்கொண்டு வர மேலும் பல சலுகைகளை கொண்டு வரலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

அன்று முகேஷ் அம்பானி...இன்று லட்சுமி மிட்டல்.. தம்பிகளை கடன் சுமையில் இருந்து காப்பாற்றிய அண்ணன்கள்

ஒலா செல்ப் டிரைவ் வசதி வாடகை, சந்தா, குத்தகை என்றஅடிப்படையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த செல்ப் டிரைவ் வசதி கார்பரேட்ஊழியர்களுக்காக 24 மணி நேரமும் இயக்கப்படும் என்றும்கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒலா போக்குவரத்துதுறையில் தனி முத்திரைபதிக்க போவதாகவும் கூறியுள்ளது. ஓலாவோ உபரோ எதுவானலும் சரி மக்களுக்கு நல்ல முறையில் பயனை கொடுக்கும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் சிறக்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola offers ஒலா சலுகை
English summary

Ola to launch self drive service

Ola to launch self drive service, so ola to deploy nearly 10,000 cars including luxury sedans and SUVs , its come in major cities coming month.
Story first published: Friday, March 29, 2019, 10:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X