இனி டீமேட் கணக்கு இல்லாமல் பங்குகளை பரிமாற்றம் செய்ய முடியாது..! செபி அதிரடி

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இனி யாராவது தங்களிடம் physical form ஆக இருக்கும் பங்குகளை மற்றொருவருக்கு மாற்ற வேண்டுமென்றால் கட்டாயமாக டீமேட் கணக்கு தேவை என இந்தியப் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பு சொல்லி இருக்கிறது.

 

இந்த சட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதாம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் physical form-ல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் சொல்லவில்லை.

ஆனால் பங்குகளை மற்றொருவரின் பெயருக்கு மாற்ற வேண்டுமென்றால் physical form-ல் இருக்கும் பங்குகளை டீமேட் கணக்குகளில் டீமேட் (Dematerialised) ஃபார்மில் மாற்றிய பிறகு தான் மற்றொருவருக்கு பங்குகளை பரிமாற்றம் செய்ய முடியும்.

எந்த பங்குகள்

எந்த பங்குகள்

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, வர்த்தகமாகும் பங்குகளை மட்டுமே டீமேட் கணக்கில் டீமேட் ஃபார்மில் மாற்ற முடியும். ஆக பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றால் முதலில் டீமேட் கணக்கை தொடங்க வேண்டும்.

டீ மேட் கணக்கு

டீ மேட் கணக்கு

டிமேட் கணக்கை தொடங்க வழக்கம் போல வங்கிகளுக்கு கொடுப்பது போல கே ஒய் சி விவரங்கள், பான் விவரங்கள், ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களைக் கொடுத்தால் போதும். இந்தியாவில் ஏகப்பட்ட பங்குத் தரகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவரிடம் டீமேட் கணக்கைத் தொடங்கலாம்.

விண்ணப்பப் படிவம்
 

விண்ணப்பப் படிவம்

அதன் பிறகு நம்முடைய டிமேட் கணக்கை கையாளும் தரகர்களிடம் DE-materialization request form கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தின் நான்கு பங்கு சான்றுகளையாவது கொடுக்க வேண்டும். அந்த பங்கு சான்றுகளில் குறிப்பிட்ட இடங்களில் நம் கையெழுத்தும் இருக்க வேண்டும்.

மாற்றல் ஆகும்

மாற்றல் ஆகும்

இந்த DE-materialization request form உடன், நம்முடைய பான் அட்டை விவரங்களையும் கேட்பார்கள். நம்மிடம் வாங்கிய DE-materialization request form உடன் நம்முடைய பங்கு சான்றுகளையும் சேர்த்து குறிப்பிட்ட பங்கு ரிஜிஸ்ட்ரார் மற்றும் பரிமாற்றம் செய்யும் ஏஜெண்டுகளுக்கு அனுப்பி அதை எலக்ட்ரானிக் ஃபார்மில் மாற்றி விடுவார்கள். அதன் பின் எலக்ட்ரானிக் வந்திருக்கும். இதன் பிறகு நம் விருப்பப்படி டீமேட் வைத்திருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பங்குகளை மாற்றலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

from april 01 2019 every one has to use demat to transfer shares

from april 01 2019 every one has to use demat to transfer shares
Story first published: Saturday, April 6, 2019, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X