ஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கெடுபிடிகளால் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு ஹெச்-1பி விசா அனுமதி தொடர்ந்து மறக்கப்பட்டுவருகிறது.

 

கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் காக்னிசன்ட் நிறுவனம் விண்ணப்பித்ததில் 32 சதவிகித ஹெச்-1பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அடுத்த இடங்களில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் ஹெச்-1பி விசாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

என் தோழிக்கு நன்றி..! UPSC தேர்சில் முதலிடம் பிடித்த Kanishka Kataria..!

அமெரிக்கா கனவு

அமெரிக்கா கனவு

ஹெச்-1பி விசா என்பது இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் அனைத்து இளைஞர்களுக்கும் லட்சியக் கனவாகும். படித்து முடித்து இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டால், அடுத்து ஹெச்-1பி விசா வாங்கி அமெரிக்கா சென்று செட்டிலாகிவிடலாம் என்றே பெரும்பாலான தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் நினைப்பது இயற்கை.

நான்கு ஆண்டு சனி

நான்கு ஆண்டு சனி

அமெரிக்க அதிபராக முன்பு இருந்த ஒபாமா பதவியில் இருந்த வரையிலும் இந்தியாவுக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் உற்ற நண்பனாக இருந்து வந்தார். இவருக்கு அடுத்த வந்த டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவிக்கு வந்த உடன் இந்தியாவுக்கும், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கும் நான்கு ஆண்டு சனி ஆரம்பித்துவிட்டது எனலாம்.

இந்தியாவுக்கு முன்னுரிமை
 

இந்தியாவுக்கு முன்னுரிமை

அதிபராக ஒபாமா இருந்த வரைக்கும் ஹெச்-1பி விசா வழங்குவதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. மாறாக ஹெச்-1பி விசா வழங்குவதில் இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தன. பிற நாட்டவர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்குவதில் அதிக கட்டுப்பாடுகள் இருந்தன.

 நம்பியாரான ட்ரம்ப்

நம்பியாரான ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் வந்தவுடன், இந்தியா என்றென்றும் அமெரிக்காவின் நண்பன் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு மறுபக்கம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஹெச்-1பி விசா வழங்காமல் இருக்க என்னென்ன வழிகள் இருக்குமோ அத்தனை வழிகளையும் செயல்படுத்தி வருகிறார்.

 அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

ட்ரம்ப் பதவிக்கு வந்த 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஹெச்-1பி விசாக்களுக்கு அனுமதி அளிப்பதில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவில் படித்த அமெரிக்க இளைஞர்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். அதாவது உணர்வில் அமெரிக்கனாக இரு அமெரிக்க பொருட்களையே வாங்கு என்பரே டொனால்டு ட்ரம்பின் தாரக மந்திரமாக உள்ளது.

சம்பளம் 1லட்சம் டாலரா

சம்பளம் 1லட்சம் டாலரா

வெளிநாட்டவர்களுக்கு ஹெச்-1பி விசா வாங்குவதற்கான தகுதியாக மாதச் சம்பளம் 1 லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கவேண்டும் என்று கடுமையான நிபந்தனை விதித்தார். இப்படி ஆண்டு தோறும் ஹெச்-1பி விசாக்களுக்கு குறைவான அனுமதியும், அதிகமான விண்ணப்பங்களுக்கு மறுப்பும் தெரிவிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

 ஹெச்-1பி நிராகரிப்பு

ஹெச்-1பி நிராகரிப்பு

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையில் 2ஆவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவுக்கு அதிக அளவில் பணியாளர்களை ஹெச்-1பி விசாவில் அனுப்பு வருகிறது. ட்ரம்ப் அதிபராக வந்த பின்பு கடந்த 2017-18ஆம் ஆண்டில் மட்டும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2122 ஹெச்-1பி விசாக்கள் மறுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இன்ஃபோசிஸ் விண்ணப்பத்திருந்த ஹெசு1-பி விசாக்களில் 26 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

டிசிஎல்

டிசிஎல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்-1பி விசா விண்ணப்பங்களில் 1896 விண்ணப்பங்களுக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் 18 சதவிகித விண்ணப்பங்களுக்கு ஹெச்-1பி விசா மறுக்கப்பட்டுள்ளன. முதலிடத்தில் மற்றொரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் உள்ளது. இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்த ஹெச்-1பி விண்ணப்பங்களில் 32 சதவிகித விண்ணப்பங்களுக்கு விசா மறுக்கப்பட்டன.

காட்ஃபாதர் ட்ரம்ப்

காட்ஃபாதர் ட்ரம்ப்

ஹெச்-1பி விசா மறுக்கப்படுவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களை காப்பாற்றுவதற்கும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற டொனால்ட்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் நல்லெண்ணம் தான் அடிப்படை காரணம் என்று கேர் ரேட்டிங் என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

50 சதவிகிதம் தள்ளுபடி

50 சதவிகிதம் தள்ளுபடி

கடந்த 5 ஆண்டுகளில் ஹெச்-1பி விசா வழங்குவது 21 சதவிகிதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் 43957 விண்ணப்பங்களும் 2018ஆம் ஆண்டில் 22429 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டில் 50 சதவிகித விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H-1B visa restrictions compel Indian tech firms

Second largest exporter Infosys Ltd with 2,122 visa denials in fiscal year 2017-18, followed by its larger rival TCS with 1,896 rejections, the report by Care Ratings said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X