சலுகைகளை அள்ளி வழங்கிய சொமேட்டோ.. தற்போது நஷ்டத்தில்.. கடும் குழப்பத்தில் நிறுவனம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குர்காவன் : சொமேட்டோ என்றாலே மனத்திற்கு ஞாபகத்திற்கு வருவது பிரியாணி, கம கமவென்று சூடாக நினைத்த நேரத்தில் நினைத்தை சாப்பிட தோனும் போது சாப்பிட உதவியாய் இருப்பது சொமேட்டோ தான். இதிலும் 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணியை 100 ரூபாய்க்கு தருவது தான் இதன் சிறப்பே.

 

பிரியாணி மட்டும் அல்ல ,அனைத்து உணவுகளும் தான். நாம் நினைத்த நேரத்தில் நினைத்த உணவை சுவைக்க சில ஃபுட் டெலிவரி நிறுவனங்களில், முன்னணியில் இருப்பது சொமேட்டோதான். அதிலும் வீட்டை விட்டு தனியாக வசிக்கும் பெரும்பாலான பேச்சுலர்களின் மெஸ்தான் சொமேட்டோ. அமர்ந்த இடத்திலேயே, பைக் எடுக்காமல், பணம் கொடுக்காமல் நினைத்த ரெஸ்டாரன்ட்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு சொமேட்டோ ஒரு வரப்பிரசாதமே.

கடந்த 2019- ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 206 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. உணவு மற்றும் வினியோக நிறுவனமான சொமேட்டோ கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 3 மடங்கு வருவாயை ஈட்டியுள்ளது. எனினும் நிகரலாபம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இது குறித்து நிறுவனம் இன்னும் முறையான கணக்குகளை கணக்கிடவில்லை. எனினும் வருவாயை விட செலவினங்கள் அதிமாக உள்ளது தெரிந்த விஷயமே.

அட பாவமே.. ஜெட் ஏர்வேஸை வாங்க யாரும் முன் வரவில்லையாம்.. கவலையில் அதிகாரிகள்

 எரிபொருள் செலவு அதிகம்

எரிபொருள் செலவு அதிகம்

இந்த நிறுவனத்தின் மாதாந்திர வரி பொருளின் மதிப்பு 24.5 மில்லியன் டாலராகவும், இதுவே மொத்தம் 294 மில்லியன் டாலராகவும் மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் 2019 நிதியாண்டிற்கான நிலைமை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் விளம்பரத்திற்கான செலவு, மற்றும் மார்கெட்டிங்க் செலவுகள் என அனைத்தும் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 24 நாடுகளில் சொமேட்டோ

24 நாடுகளில் சொமேட்டோ

சொமேட்டோ நிறுவனம் இதுவரை சுமார் 10,000 மேற்பட்ட நகரங்களில், 1.4 மில்லியனுக்கும் அதிகமான உணவகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. மொத்தம் 24 நாடுகளில் இதுவரை தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் சுமார் 70 மில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இதில் 5 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்களும், 11 மில்லியன் பேர் இந்த சொமேட்டோ ஆப்களை பதிவிறக்கம் செய்துள்ளன.

 இந்தியாவில் 200 நகரங்களில் சொமேட்டோ
 

இந்தியாவில் 200 நகரங்களில் சொமேட்டோ

இந்தியாவை பொறுத்தவரை 200 நகரங்களில் சொமேட்டோ அதன் விரிவான உணவு விநியோக சேவையை வழங்கி வருகிறது. மேலும் பல நகரங்களில் உணவு சப்ளை செய்து நிலையில் தற்போது நஷ்டத்தை நிறுவனம் சந்தித்து வருகிறது என்றும், அதுவும் உணவுகளை எடுத்து செல்லும் வாகனங்களூக்கு வாகன எரிபொருள் செலவு மிக அதிகமாக உள்ளது என்றும் அறிவித்துள்ளது.

 நிகர லாபம் குறையும்

நிகர லாபம் குறையும்

சொமேட்டோவை பொறுத்த வரை வருவாய் அதிகரித்தாலும், நிகர லாபம் குறையும் எனவும், மேலும் நடப்பு வருடத்திலும் லாபம் குறையலாம் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் சார்பில் இன்னும் முழுமையான கணக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato சொமேட்டோ
English summary

Zomato revenue up 3 fold to $206m in FY2019

Food delivery and restaurant discovery company zomato has recorded $206 million in revenue for the year ended march. But its cost increase 6 fold times, 500 milion dollars.
Story first published: Sunday, April 7, 2019, 15:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X