வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை.. 2024-25ல் ஒற்றை இலக்கமாக குறையும் : அருண் ஜெட்லி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவரிகளின் எண்ணிக்கை வரும் 2021ஆம் ஆண்டில் 15 சதவிகிமாகவும், 2024-2025ஆம் நிதியாண்டில் ஒற்றை இலக்கமாகவும் குறையும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

அதிகமான நுகர்வு மற்றும் முதலீடுகளால் வரும் 2030ஆம் ஆண்டில் இந்திய உலகின் 3வது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவரிகளின் எண்ணிக்கை வரும் 2021ஆம் ஆண்டில் 15 சதவிகிமாகவும், 2024-2025ஆம் நிதியாண்டில் ஒற்றை இலக்கமாகவும் குறையும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த விப்ரோ பங்குகள் விற்பனை - மத்திய அரசுக்கு ரூ. 1100 கோடி லாபம் பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த விப்ரோ பங்குகள் விற்பனை - மத்திய அரசுக்கு ரூ. 1100 கோடி லாபம்

  நிலையில்லாத பொருளாதார வளர்ச்சி

நிலையில்லாத பொருளாதார வளர்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் இருப்பதால் 2021ஆம் ஆண்டுகளில் நம்முடைய பொருளாதார வளர்ச்சி 5 மற்றும் 6ஆவது இடத்திலேயே ஊசலாடிக்கொண்டு இருக்கும் என்றம் ஜெட்லி தெரிவித்தார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்

தனியார் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி வறுமைக் கோட்டுக்கு கீழே வாடும் மக்களின் எண்ணிக்கை 21.9 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 17 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடம் நுகர்வுத் தன்மை அதிகரித்தது தான் என்று கூறினார்.

நுகர்வு தன்மை
 

நுகர்வு தன்மை

உலகிலேயே அதிக நுகர்வு தன்மையைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. நம்மிடம் அனைத்து வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் சீனா உடன் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி போட முடிகிறது. இதனால் வாய்ப்புகளும் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைத்தரம்

மக்களின் வாழ்க்கைத்தரம்

அடுத்த 20 ஆண்டுகளைப் பற்றி நாம் பேசும்போது நாட்டின் உள்கட்டமைப்பு, நிதி வசதி, கிராமப்புற விரிவாக்கம் மற்றும் பாலின சமன்பாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழே வாடும் மக்களின் வாழ்க்கைத் தரம் வரும் 2021ஆம் ஆண்டுகளில் 15 சதவிகிதமாக குறையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

நடுத்தர மக்களின் எண்ணிக்கை

நடுத்தர மக்களின் எண்ணிக்கை

நாம் தற்போது எடுத்து வரும் நிதி மற்றும் வரிச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் அடுத்து வரும் 2024-25ஆம் ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணாக குறையும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை 29 சதவிகிமாக இருந்தது. அது தற்போது 44 சதவிகிதமாக அதிகரித்து வருகிறது என்றார்.

 2030ல் வளர்ச்சி

2030ல் வளர்ச்சி

நடுத்தர மக்களின் வளர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துகொண்டு வருவதைக் காட்டுகிறது. இதே வளர்ச்சி தொடருமேயானால் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை சதவிகிதம் 50 சதவிகிதமாக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 630 லட்சம் கோடி

630 லட்சம் கோடி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது ஏற்ற இறக்கமாக உள்ளது. அதே சமயம், நாட்டில் நுகர்வு தன்மை அதிகரித்து வருவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கூடிக்கொண்டே வருகிறது. வரும் 2024ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி என்பது 346 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் அதுவே 2030ஆம் ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்து 690 லட்சம் கோடியாக உயரும் என்றும் அவர் கூறினார்.

 பொருளாதார பலம்

பொருளாதார பலம்

பொருளாதார பலத்தை பொருத்தவரையில் உலகில் பலம் வாய்ந்த நாடுகளாக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் நாம் போட்டி போட முடிகிறது. இதற்கு நம்முடைய நுகர்வு தன்மை அதிகரிப்பும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பும் தான் காரணமாகும். இந்த சாதகமான அம்சங்களே இந்தியாவை அடுத்த 10 ஆண்டு காலகட்டத்தில் உலகின் பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3ஆவது இடத்தை நோக்கி உந்தித் தள்ளும் சக்தியாக இருக்கப்போகிறது என்று நம்பிக்கையுடன் விடைபெற்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India will become third largest Economy in 2030, Arun Jaitley

Finance Minister Arun Jaitley on Saturday said India is expected to become the third largest economy in the world by 2030 with GDP touching USD 10 trillion, helped by consumption and investment growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X