தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் வரப்பிரசாதம் - யாருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள சமீபத்திய தீர்ப்பினால் 15000 ரூபாய்க்கு கூடுதலாக சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அடிப்படை சம்பளமாக ரூ.7500 வரை வாங்குவோர் மட்டுமே பென்சன் வாங்க முடியும் என்ற பழைய விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இனிமேல் 15000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களும் ஓய்வு பெறும்போது வருங்கால வைப்பு நிதியுடன் சேர்த்து பென்சன் பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்புநிதியாக சேமிக்கப்படுகிறது. ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்திற்கு இணையான தொகை வேலை அளிக்கும் நிறுவனத்தாலும் இந்த சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும் பணம், அந்த ஊழியர் பணி ஓய்வுபெற்ற பின்னர் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருங்கால வைப்பு நிதித்திட்டத்தின் திருத்த மசோத மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது.

ஐஐடி டெல்லியை தோற்கடித்த சுப்பிரமணியம் சுவாமி..! 8% வட்டியுடன் சம்பளம் வசூல்..!

உச்சவரம்பு 15000 தான்

உச்சவரம்பு 15000 தான்

இபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் (Employee Pension Scheme) எனப்படும் பென்ஷனும் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. புதிய திருத்தங்களின் படி 15,000 ரூபாய்க்குள் ஒருவரின் சம்பளம் இருக்கும் போது நிறுவனத்தின் 12 சதவீத இபிஎஃப் பங்களிப்புடன் வருங்கால வைப்பு நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

அடிப்படை சம்பளம் அகவிலைப்படி

அடிப்படை சம்பளம் அகவிலைப்படி

புதிய திருத்தத்தின் படி அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) என இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் உள்ள போது இபிஎஸ் பங்களிப்பு பிடிக்க தேவையில்லை என்று கூறப்பட்டது.

 பென்சன் திட்டத்தின் பங்களிப்பு
 

பென்சன் திட்டத்தின் பங்களிப்பு

பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12 சதவிகிதமும், நிறுவனத்தின் சார்பில் 12 சதவிகிதமும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி திட்டம் கீழ் டெபாசிட் செய்யப்படும். ஆனால் நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவிகிதம் மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33 சதவிகிதம் இபிஎஸ் (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.

புதிய சட்ட திருத்தம்

புதிய சட்ட திருத்தம்

2014ஆம் ஆண்டு செய்த புதிய திருத்தங்களின் படி 15,000 ரூபாய்க்குள் ஒருவரின் சம்பளம் இருக்கும் போது நிறுவனத்தின் 12 சதவிகித இபிஎஃப் பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது.

இபிஎஸ் பென்சன் திட்டம்

இபிஎஸ் பென்சன் திட்டம்

இபிஎஃப் ஆணையத்தின் இந்த வேறுபாட்டை எதிரித்து சில நிறுவனங்களின் ஊழியர்களின் சார்பாக கேரளா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 15,000 ரூபாய் வரம்புகள் ஏதுவும் இபிஎஸ் பென்சன் திட்டத்தில் இருக்க கூடாது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் அதிரடி

உச்ச நீதிமன்றம் அதிரடி

கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பை வருங்கால வைப்பு நிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து இபிஎஃப் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

இபிஎப் பங்களிப்பு எவ்வளவு

இபிஎப் பங்களிப்பு எவ்வளவு

தற்போது, உங்கள் ஓய்வூதியத் தொகையில் 12 சதவிகிதம் EPF க்கு செல்கிறது. உங்கள் நிறுவனத்தின் பங்களிப்புகளில் 8.33% அல்லது ரூ 1,250 ரூபாய் EPS கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ள பணம் EPF இடம் சென்றது. இப்போது, நீங்கள் முழு ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் ஓய்வூதியத் தொகையின் மொத்த 8.33% EPS கணக்கிற்கு க்குள் போகும். எனவே, உங்கள் EPS பங்களிப்பு அதிகரிக்கும் போது, EPF கணக்கில் உங்கள் பங்களிப்பு விகிதாசாரமாக வீழ்ச்சியடையும்.

பென்சன் திட்டத்தில் சேரும் பணம்

பென்சன் திட்டத்தில் சேரும் பணம்

தற்போதய புதிய திட்டத்தின் படி மாத சம்பளம் 90 ஆயிரம் என்றால் நிறுவன உரிமையாளர் (Employer contribution) பங்களிப்பாக 10,800 ரூபாய் கட்ட வேண்டும். பழைய திட்டத்தின் படி பென்சன் திட்டத்திற்கு 1250 மட்டுமே உங்கள் பென்சன் கணக்கில் வரவு வைக்கப்படும். மீதி பணம் 9550 ரூபாய் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் புதிய தீர்ப்பால் 7500 ரூபாய் உங்கள் இபிஎஸ் ( பென்சன் கணக்கில் ) வரவு வைக்கப்படும்.

மீதி பணம் ரூ. 3300 இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது உங்கள் உண்மையான ஓய்வூதியத் தொகையில் 8.33% EPS க்குச் செல்லும்.

மாத சம்பளம் எவ்வளவு

மாத சம்பளம் எவ்வளவு

உதாரணமாக நீங்கள் 58 வயதிற்கு உட்பட்டவராகவும், 35 வருட கால சேவையின் பின்னர் ஓய்வு பெறவும், முழு ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், நீங்கள் பணிபுரியும் தேதியிலிருந்து EPF இலிருந்து EPF வரை உள்ள நிறுவனங்களின் பங்களிப்பு 8.33% ஆக மாற்ற வேண்டும். எனவே, உங்களது சம்பளம் ஆண்டுக்கு 7% ஆக உயர்ந்து தற்போது 90,000 ரூபாயாக இருந்தால், கடந்த 35 ஆண்டுகளுக்கு கூடுதல் பங்களிப்பு ரூ. 10.35 லட்சம், வட்டிக்கு கூடுதலாக இருக்கும்.

செக் செய்வது எப்படி

செக் செய்வது எப்படி

இந்த பென்சனை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்கள் சம்பள கணக்கில் பிடிக்கப்படும் இபிஎஸ் பென்சன் தொகை சரியாக உங்கள் அக்கவுண்டில் வந்து சேர்கிறதா? என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களின் பிஎஃப் கணக்கிம் UAN நம்பரை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்தால் ஆன்லைனிலே இபிஎஸ் பென்சனை தொகையை தெரிந்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது ஆன்லைனிலே க்ளைம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Factors you should consider before opting for higher pension under EPS scheme

The pension you could get under the Employees’ Pension Scheme was capped at Rs 7,500 per month. But thanks to a recent Supreme Court ruling, this cap has now been lifted. Your pension will now depend on your last drawn pensionable salary.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X