நேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் மூலம் திரட்டப்படும் தொகை அதன் இலக்கை விட ரூ.50,000 கோடி குறைவாக இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த மார்ச் மாதத்துடன் 2018 - 2019 முடிவடைந்த நிதியாண்டில் நேரடி வரி வாயிலாக ரூ.11.5 லட்சம் கோடியாக திரட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே இலக்காக நிர்ணயித்தது. அது பின்னர் 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆனால் தற்போது உள்ள நிலையில் அந்த இலக்கு ரூ.50,000 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல்

நேரடி வரி வசூல் செய்யும் முறையில், நிறுவனங்களின் வசூல் அதிக அளவிலிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.7.44 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலில் 2019 - 2020ம் ஆண்டில் ஜி.எஸ்.சி வசூல் இலக்கு ரூ.6.44 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கடனில் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. கைகொடுக்கும் நிறுவனங்கள்

இதையடுத்து கடந்த சில மாதங்களில் பல பொருட்களுக்கும், பல துறைகளுக்கும் ஜி.எஸ்.டி குறைத்ததை அடுத்து ஜி.எஸ்.டி வசூலில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீடு கட்டும் துறைக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதில் அந்த துறையில் உள்ள வருவாய் குறையும், இதில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 -ல் இருந்து, 5 சதவிகிதமாகவும், அது போல, குறைந்த விலை வீடுகளுக்கு, 8 ல் இருந்து, 1 சதவிகிதமாகவும் ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல விதத்தில் ஏற்பட்ட ஜி.எஸ்.டி குறைப்பு நடவடிக்கை நடப்பு வருடத்தில் ஜி.எஸ்.டி வசூலை குறைக்கும் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டு முதல் நேரடி வசூலுக்கான விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து வரும் நிதியாண்டிலும் மிக குறையும் எனவும், 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் நேரடியாக வசூல் தாக்கல் செய்யலாம் எனவும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Direct tax may fall short of Rs.50,000croresin FY19

The goverment was estimated to had witnessed a shortfall of Rs50,000 crore in direct tax collection target Rs 12 lakhs crores for 2018 - 2019.
Story first published: Wednesday, April 10, 2019, 8:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X