நிஜமாதாங்க நம்புங்க..வெறும் 97 ரூபாய் சம்பளம்..டுவிட்டர் சி.இ.ஒக்கு தான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொதுவாக பெரிய பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களின் CEOக்களின் சம்பளம் லட்சக் கணக்கில் கோடிக்கணக்கில் இருக்கும். ஆனால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரியின் சம்பளம் வெறும் 1.40 டாலர்தான் என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா. நம்புங்கள் இந்திய ரூபாய் அவரின் வெறும் 97.40 ரூபாயாகும்.

 

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரி ஜாக் டார்சியின் கடந்த ஆண்டுக்கான மொத்த சம்பளம் வெறும் 1.40 டாலர் தான் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க அரசின் SEC ஆணையத்திடம் சமர்பித்திருந்த ஆவணங்களில் தெரிவித்திருக்கிறது டுவிட்டர் நிறுவனம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவே அவருக்கு அதிகம் என்றும், இதுவே கடந்த 2015 - 2017 வரை அவருக்கு எந்த சம்பளமும் கிடையாது என்றும், அந்த பதவிகாலத்தில் பதிவியில் இருப்பதற்காக எந்தவொரு பணமும் பெறவில்லை என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஸ்கோயர் பேமன்ட் என்ற மொபைல் பேமன்ட் நிறுவனத்திலும் இவர் CEOவாக இருக்கிறார். அதிலும் இவரின் அதிக பட்ச சம்பளம் 2.75 டாலர்கள் தானாம்.

ஏனெனில் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ஜாக்கிடம் தான் உள்ளதாம். தற்போதைய நிலையில் ஜான் டார்சியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 4.7 பில்லியன் டாலராகும். இதில் இவர் வைத்திருக்கும் ஸ்கோயர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 3.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

2029 வரை நாங்கள் தான் நம்பர் 1..! ஆரூடம் சொல்லும் சாம்சங்..!

டுவிட்டரில் பங்கு உண்டு

டுவிட்டரில் பங்கு உண்டு

டுவிட்டர் நிறுவனத்தில் ஜாக்கின் பங்குகள் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்களாகும். டுவிட்டரை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். சரி இவ்வளவு அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் இவர் பின் ஏன் சம்பளம் பெற வேண்டும். அதை பெறாலமலே வேலை செய்யலாம் என்கிறீர்களா? அதற்கும் காரணம் உண்டு என் கிறது இந்த நிறுவனம்.

டுவிட்டர் மட்டுமல்ல பேஸ்புக்,கூகுள்  CEOக்களும் தான்

டுவிட்டர் மட்டுமல்ல பேஸ்புக்,கூகுள் CEOக்களும் தான்

டுவிட்டர் மட்டும் அல்ல, பேஸ்புக் நிறுவனத்தின் CEOவாக இருக்கும் மார்க் சக்கர்பெர்க் கடந்த 2012ல் 7,70,000டாலர்களை சம்பளமாக பெற்றார். ஆனால் தற்போது பேஸ்புக்கில் மிக குறைவான சம்பளம் பெறுவதும் இவர்தான். இவருக்கும் தற்போது 1 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

One dollar Pay பெறும் சில சி.இ.ஒக்கள்
 

One dollar Pay பெறும் சில சி.இ.ஒக்கள்

இதோடு மட்டும் அல்ல ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன், கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ் எனப் பலரும் இந்த 1 டாலர் சம்பளத்தையே பெற்று வருகின்றனர். இவ்வாறு சம்பளம் பெறுவதை One dollar Pay என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த வழக்கம் தற்போது மட்டும் அல்ல, 1900 களில் இருந்து பிரபலமடைந்து வருகிறது. உலகப்போர் மற்றும் போர்களின் போது பல தொழிற்துறை சேர்ந்த தலைவர்கள் அமெரிக்க அரசிற்காக சேவை செய்தனர். அந்த நேரத்தில் அதற்காக அவர்கள் எந்தவொரு சலுகையும் பெற விரும்பவும் இல்லை. அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் 1 டாலர் மட்டுமே சம்பளம் பெற்று வந்தனர். இவ்வாறு சம்பளம் வங்கியவர்களை "டாலர் ஏ இயர் மென் " என்று அழைத்தனர்.

பங்குகள் மூலம் பெறப்படும் வருமானத்தால் வரி குறையலாம்

பங்குகள் மூலம் பெறப்படும் வருமானத்தால் வரி குறையலாம்

அந்த செயல்முறை தற்போது மீண்டும் செயல் முறைக்கு வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு ஒரு டாலர் மட்டும் சம்பளமாக பெறுவதால் சம்பளம் இல்லாததால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேன்மேலும் பாடுபடுவார்கள் என்றும் , அதில் அவர்களின் முழுக்கவனும் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு அந்த பங்குகள் மூலமாக வருவது மட்டுமே வருமானம் என்பது சிலரின் கருத்து. அதேசமயம் இப்படி பங்குகளின் மூலம் வருமானம் ஈட்டினால் வரிகள் குறையும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அரசியல் தலைவர்களும் பெற்றுள்ளனர்

அரசியல் தலைவர்களும் பெற்றுள்ளனர்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மட்டுமல்லாது, ஒரு சில அரசியல் தலைவர்களும் கூட இந்த ஒரு டாலர் சம்பளத்தை பெறுகின்றனர். இது நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒருவரை அடையாளம் காட்டுவதோடு அதன் மூலம் பலர் பயன் பெறலாம் என்பதே இதன் நோக்கமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter CEO took home salary Rs. 97 in 2018

Jack Dorsey, CEO of Twitter Inc received salary of $1.40 (Rs 97.42) in 2018, the company revealed in the US Securities and Exchange Commission filing on last Monday.
Story first published: Thursday, April 11, 2019, 14:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X