அடடே கூகுள் பேலா தங்கமா..அக் ஷய திருதிக்கு வாங்கவா..வெயிலுக்கு அலைச்சல் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கிய ஆப் தான் கூகுள் பே ஆப். இதன் மூலம் மக்கள் ஈஸியாக பணம் செலுத்தவும் எடுக்கவும் முடியும், இதோடு தாங்கள் உட்கார்ந்த இடத்திலேயே பணத்தை வைத்துக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் என்ற ஏரளமான வசதிகள் இருந்தாலும் இதன் மூலம் தங்கம் வாங்கி கொள்ளலாம் என்று இந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது இதன் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை உருவாக்கியுள்ளது.

 

ஏற்கனவே பல வசதிகள் இந்த கூகுள் பே ஆப்பில் இருந்தாலும் இந்த தங்கம் வாங்கும் வசதி இன்னும் மக்களிடையே அதிகமாக எடுத்துச் செல்லும் என்றும், இதன் மூலம் கூகுள் பே வாடிக்கையாளர் எண்ணீக்கையை அதிகரிப்பதோடு அதோடு பண பரிவர்த்தனையும் அதிகரிக்கும், இதன் மூலம் பொருளாதாரமும் சற்றே வளரும் என்பதில் சந்தேகமில்லை.

தங்கம் உபயோகிப்பாளர்களின் இடத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதையடுத்து, இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு இதில் தங்கத்தின் முதலீடோ அல்லது ஆபரணமாக வாங்குவதோ அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கூகுள் பே தற்போது தங்கம் விற்பனையிலோ கவனம் செலுத்தி வருகிறது.

பயணிகளுக்கு 3500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்..! பதறும் ஜெட் ஏர்வேஸ்..!

அக் ஷய திருதியை முன்னிட்டு அதிகரிக்கும் விற்பனை

அக் ஷய திருதியை முன்னிட்டு அதிகரிக்கும் விற்பனை

ஆனால் தற்போது அக் ஷய திருதியை வருவதை முன்னிட்டு தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு கூகுள் பே தற்போது இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் வட மானிலங்களில் இது ஒரு விழாவாக கொண்டாடபடுவது ஒரு வழக்கமாகும். இந்த நாளில் தங்கம் முதலான அனைத்து உலோகங்களில் முதலீடு செய்வதால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகமாகும்.

தூய  தங்கத்தை பெறலாம்

தூய தங்கத்தை பெறலாம்

இதன் மூலம் கூகுள் பே தற்போது 99.99 சதவிகிதம் தூய தங்கத்தை அதாவது 24 காரட் தங்கத்தை விற்பனை செய்யவுள்ளது. இதன் மூலம் மக்கள் தூய தங்கத்தை இருந்த இடத்திலேயே பெற முடியும். இதன் மூலம் செய்கூலி சேதாரம் போன்றவை குறையும். இதன் மூலம் தங்கத்தின் விலை வெளி மார்கெட்டில் வாங்குவதை விட இங்கு வாங்குவது சிறப்பானதாகவே இருக்கும்.

பே.எம்.டி.சி யுடன் பங்குதாராக  கூகுள் பே
 

பே.எம்.டி.சி யுடன் பங்குதாராக கூகுள் பே

இந்த தங்க விற்பனைக்காக கூகுள் பே எம்.எம்.டி.சி மற்றும் பி.ஏ.எம்.பி இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் பங்குதாரர்களாக இணைந்துள்ளது. இதுபோன்ற சேவையை மொபைல் செயலியான பேடிஎம், மொபிக்விக் மற்றும் போன்பீ நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

நகரங்களில் இதன் சேவை அதிகரிக்கும்

நகரங்களில் இதன் சேவை அதிகரிக்கும்

ஏற்கனவே கூகுள் பே மூலம் பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் இதுபோன்ற அவசதிகள் மிக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் உட்கார்ந்த இடத்திலேயே தங்கத்தை வாங்குவதற்கு கூகுள் பே ஆப் மிக பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய காலகட்டங்களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் இந்த நிலையில் நகர்புறங்களில் இந்த சேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் கூகுள் பே

கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் கூகுள் பே

அதேசமயம் கிராமப் புறங்களிலும் இந்த சேவை அதிகரித்து வருகிறது. இது பணத்திற்கான பாதுகாப்பையும் அளிப்பதோடு, சரியானதொரு ஆதரத்தையும் நிருபிக்க வசதியாக இருக்கும். அதுவும் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கலில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் தீமையும் உண்டு

இதனால் தீமையும் உண்டு

இந்த கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவது நன்மையே அளித்தாலும், சில தீமைகளும் உண்டு. இதன் குவாலிட்டி என்ன,இந்த தங்கத்தை விற்க நேர்ந்தால் வெளிக் கடைகளில் விற்கும் போது ஏதேனும் பிரச்சனைகள் வருமா? அதை திரும்ப கூகுள் பேவிலேயே விற்க நேர்ந்தாலதை எவ்வாறு விற்பது? இது போன்ற எந்தவொரு அடிப்படை தகவலையும் இந்த நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அளிக்கவில்லை. இது நல்ல விஷயமாக இருந்தாலும் ஆரம்பத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வரையில் இதை சற்று கண்கானித்து வாங்குவது நல்லதே எங்கின்றனர் ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google pay lauchs gold buying and selling

Tech giant Google last Thursday said it has partnered with bullion refiner MMTC-PAMP India to allow Google Pay users to buy and sell gold through the app, a service that is already offered by the likes of Paytm, Mobikwik and PhonePe.
Story first published: Friday, April 12, 2019, 13:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X