ஜாலி ஜாலி சம்பளத்துடன் லீவு.. தேர்தல் நாள் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை..தொழிலாளர் நலத்துறை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வருகிற ஏப்ரல் 18-ம் தேதி பாரளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் அன்று நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அழிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் சதிஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் தமிழ் நாடு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கவுள்ளது.

இதைத் தொடர்ந்து கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்படி தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத  நிறுவனங்கள் மீது  புகார்

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார்

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது பெறப்படும் புகார்களுக்காக மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்து, மாணவர்களூக்கு கோடை விடுமுறைக்கு விடுமுறை அளிப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 வகுப்பு தேர்வுகளும் கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது. அதுவே ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்தே தேர்வுகள் நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கும் விடுமுறை

பள்ளிகளுக்கும் விடுமுறை

ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்வுகளை விரைந்து முடிக்க அரசு உத்திரவிட்டது. இதன்படி ஏப்ரல் 12-ம் தேதியுடன் தேர்வுகள் நடத்திடும், 13-ம் தேதி இறுதி வேலை நாளாகவும் செயல்படுத்தவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகளும் ஏப்ரல் 12ம் தேதி நிறைவடைகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 12தேதியுடன் நிறைவடைவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல அறிக்கைகள், பல மாநிலங்கள்
 

பல அறிக்கைகள், பல மாநிலங்கள்

100 சதவிகித ஒட்டுப் பதிவுக்காக பல மா நிலங்கள் பலவாறு அறிக்கைகளை விடுத்து வந்தாலும், தமிழ் நாட்டில் தேர்தல் நாளன்று வேலைப் பளுவின் காரணமாக பலர் ஒட்டுபோடுவதை தவித்து வருகின்றனர். இது போன்ற தவிர்ப்புகளை மாற்றவும், ஓட்டு போட மனமிருந்தாலும் வெளியூர்களில் பணி நிமித்தமாக செல்பவர்கள் ஓட்டு போட முடியாமலேயே உள்ளது. இதனால் இந்திய தொழிலாளர் அமைச்சகம் இப்படியொரு அறிவிப்பை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வாக்கு பதிவு அதிகரிப்பதோடு,இதைபற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது.

வாக்களித்தால் குழந்தைகளுக்கு மதிப்பெண்

வாக்களித்தால் குழந்தைகளுக்கு மதிப்பெண்

கர்நாடகா மாநிலத்தில் பெற்றோர் ஓட்டு போட்டால் குழந்தைகளுக்கு மதிப்பெண் என மக்களை கவரும் விதமாகவும், அதே சமயம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் யாரும் சொந்த ஊர்களுக்கோ, அல்லது சுற்றுலா செல்லவோ விரும்புவார்கள். ஆனால் கர் நாடகா தனியார் பள்ளி அமைச்சகம் விடுத்துள்ள இந்த அறிக்கையால் கடந்த ஆண்டே ஓட்டு பதிவு அதிகரித்துள்ளது. இது போன்றதொரு வித்தியாசமான அறிவிப்புகள் ஓட்டுப் பதிவை அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: election தேர்தல்
English summary

Gramd of paid to holiday to the employees on the day of Election

The State government has declared a paid holiday on April 18 for all the employees/workers working in factories, shops and establishments and industrial undertakings/establishments.
Story first published: Friday, April 12, 2019, 9:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X