இன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ : ஐ.டி துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான இன்ஃபோசிஸ் தன து காலாண்டு முடிவை கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டது. இதில் கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் (மார்ச் 2018 - 2019) நிகர லாபம் 10.5 சதவிகிதம் அதிகரித்து நிகரலாபம் 4078 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 3690 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிட்டத்தக்கது. இதுவே வருவாய் அடிப்படையில் ஒப்பிடும் போது 19.1 சதவிகிதம் அதிகரித்து 21,539 கோடி ரூபாயாக உள்ளது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 18,083 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்க விஷயமாகும்.
இந்த 4வது காலாண்டில் நிகர லாபம் அதிகரித்தாலும், கடந்த நிதியாண்டின் மொத்த நிகரலாபம் (மார்ச் 2018 - 2019) 3.9 சதவிகிதம் குறைந்து நிகரலாபம் 15,410 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் அதேசமயம் வருவாய் 17.2 சதவிகிதம் அதிகரித்து 82,675 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 மார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியது மார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியது

வருமான வளர்ச்சிக்கான திட்டமிடல்

வருமான வளர்ச்சிக்கான திட்டமிடல்

இது பற்றி இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியதில், எங்களின் திடமிட்ட முடிவுகள் சரியான நன்மையைத் தருகின்றன. இதன் படி நடப்பு நிதியாண்டில் (2019- 2020) பல்வேறு வியாபார நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இதன் இயக்குனருமான சலீல் பரேக் தெரிவித்துள்ளார். குறிப்பாக வருமான வளர்ச்சி ,டிஜிட்டல் போர்ட்போலியோவின் செயல் திறன், பெரிய ஒப்பந்தங்க்கள் மற்றும் கிளைன்ட் மெட்ரிக்ஸ் உள்ளீட்ட பல பரிணாமங்களில் பலம் வாய்ந்த முடிவுகளை செய்ய உத்தேசித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி எதிர்பாராத விதமாக இருக்கும்

வளர்ச்சி எதிர்பாராத விதமாக இருக்கும்

இதையடுத்து இது போன்ற பல பலம் வாய்ந்த முடிவுகளிய செயல்படுத்தும் போது இன்ஃபோசிஸ் நிறுவனம் மேலும் ஒரு பலம் வாய்ந்த நிறுவனமாகவே செயல்படும். இதனால் நாட்டின் இரண்டாவது மென் பொருள் சேவை நிறுவனமான இந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பாராதவிதமாக இருக்க வேண்டும். அதிலும் எங்கள்கணிப்பின் படி, இன்ஃபோசிஸ் நிறுவனம் 2019 -2020-ம் நிதியாண்டில் இதன் வளர்ச்சி 7.5 - 9.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

அமெரிக்க டாலரில் என்ன லாபம்

அமெரிக்க டாலரில் என்ன லாபம்

அமெரிக்க டாலரில் இதன் லாபத்தை கணக்கிடும் போது இதன் நிகர லாபம் 1.7 சதவிகிதம் அதிகரித்து 581 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இட்ஹே மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் 571 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வருவாய் 9.1 சதவிகிதம் அதிகரித்து 3.06 பில்லியன் டாலர்களாக இருந்தது. எனினும் 2018 - 2019 வருடத்திற்கான லாபம் 11.5 சதவிகிதம் குறைந்து 2.2 பில்லியன் டாலாராக குறைந்துள்ளது. அதே நேரத்தில் வருவாய் 7.9 சதவிகிதம் அதிகரித்து 11.7 பில்லியனாக அதிகரித்துள்ளது.

பங்கு தாரார்களுக்கு ரூ17.50  டிவிடெண்ட்

பங்கு தாரார்களுக்கு ரூ17.50 டிவிடெண்ட்

ஆக 2019- ம் நிதியாண்டில் இந்த லாபத்தை பங்கு கொள்ள நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி இன்ஃபோசிஸ் நிர்வாகம் டிவிடெண்ட் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. இதன் படி நிர்வாகம் ஒரு பங்குக்கு ரூ.10.50 டிவிடெண்டாகவும், இடைக்கால டிவிடென்டாகவும் ஆக மொத்தம் ஒரு பங்குக்கு 17.50 ரூபாயாகவும் டிவிடெண்ட் கொடுக்க தீர்மானித்துள்ளது.. இதையடுத்து கடந்த வெள்ளீக்கிழமையன்று பங்கு சந்தைகளில் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் பெரிய மாற்றம் இன்றி 747 ரூபாயாக முடிவடைந்துள்ள நிலையில் இதன் எதிரொலி திங்கட்கிழமையன்று (ஏபரல் 15) பங்கு வர்த்தகத்தில் இருக்கும் என்றும் அதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys q4 netprofit up 10.5% at Rs.4078cr

IT maor infosys on Friday reported 10.5 percent growth in consolidated net profit at RS 4078 crore for the March 2019 quarter as against Rs.3690 crore a year ago. Revenue of the grew 19.1 percent ti Rs 21,539 crore in the quarter under review from Rs.18,083 crore in the corresponding perion last fiscal
Story first published: Saturday, April 13, 2019, 11:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X