சர்வதேச விமான கட்டணங்கள் அதிகரிப்பு..ஜெட் ஏர்வேர்ஸ் இருக்குமா இருக்காதா..பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, பல சுற்றுலா பிரியர்கள் வரப்போகும் சம்மர் ஹாலிடேஸ்காக பல்வேறு சர்வதேச விமான டிகெட்களை பதிவு செய்திருந்தனர். அதிலும் பல பயணிகள் மும்பை முதல் லண்டன் வரையிலான டிக்கெட்களை ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் பதிவு செய்து காத்திருந்தனர். ஆனால் தற்போது வரும் ஏப்ரல் 15 லிருந்து ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த ஆயிரக்கணக்கான பயணிகளின் நிலை, கடைசி நேரத்தில் டிக்கெட்களை கேன்சல் செய்யவும் முடியாமல், விமான சேவை இருக்குமா? இருக்காதா? வருமா வராதா? என்ற கேள்விகளுடன் உள்ளது.

இந்த குழப்ப நிலையில் கடைசி நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியாமல், அப்படி கேன்சல் செய்தால் கடைசி நேரத்தில் கேன்சல் செய்யும் போது கட்டணம் அதிகமாக இருப்பதோடு, லண்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்ல உடனடியாக டிக்கெட் புதிதாக பதிவு செய்தால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியும் உள்ளது. இது என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றனர் பயணிகள்.

இது குறித்து ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்திலும் சரியான பதிலும் இல்லை,இதற்கான சரியான அறிக்கையும் இல்லை. இதனால் செய்வதறியாது தவிக்கும் பல பயணிகளின் நிலை என்னவென்று சொல்லவது. அதுவும் நடக்கவிருக்கும் ஐசிசி வேர்ல்டு கப் கிரிகெட் லண்டனில் தான் நடக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களும் இந்த டிக்கெட்களை பதிவு செய்திருந்தவர்களும் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே கோடைகால விடுமுறையை கொண்டாட செல்லும் பயணிகள், அவர்களோடு கிரிக்கெட் விரும்பிகளும் செல்லும் போது டிகெட் விலை தாறுமாறாக ஏறும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

என்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ என்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ

அதிகரிக்கப்பட்ட கட்டண விகிதங்கள்

அதிகரிக்கப்பட்ட கட்டண விகிதங்கள்

கடந்த 2018ல் மும்பை முதல் துபாய் செல்வதற்கான கட்டண விபரம் மே15ல் ரூ9997 இருந்தது, இது நடப்பு ஆண்டில் மே 15 ரூ.11496 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவிகிதம் அதிகமாகும். இதே இதேகாலாத்தில் கடந்த ஜீன் மாதத்தில் ரூ.7139 ஆக இருந்தது நடப்பு ஆண்டில் 6 சதவிகிதம் அதிகரித்து ரூ.7569 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவே டெல்லி முதல் பாங்காக் செல்லுதற்கான கட்டணம் கடந்த மே மாதத்தில் ரூ.7124 ஆக இருந்தது வரும் மே மாதத்தில் ரூ7498 ஆக உயர்த்தபட்டுள்ளது. இதுவே ஜீன் மாதத்தில் ரூ7342 ஆக இருந்தது 1 சதவிகிதம் குறைந்து 7286 ரூபாயாக குறைக்கபட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு ஜீனில் 3% குறைவு

சிங்கப்பூருக்கு ஜீனில் 3% குறைவு

டெல்லியிலிருந்து சிங்கப்பூர் வரை செல்லுவதற்கு கடந்த மே மாதத்தில் ரூ.9123 ஆக இருந்த கட்டணம் ரூ 9537 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜீன் மாதத்தில் ரூ11483 ஆக இருந்த கட்டணம் வரும் ஜீன் மாதத்தில் 11742 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2 சதவிகிதம் அதிகமாகும். இதுவே மே மாதத்தில் 5 சதவிகித, அதிகமாகும். இதுவே மும்பை -சிங்கப்பூர் செல்வதற்கு கடந்த மே மாதத்தில் 27,777 ரூபாயாக இருந்த கட்டணம் வரும் மே மாதத்திற்கு 28631 ரூபாயாக அதாவது 3 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜீன் மாதத்தில் 3 சதவிகிதம் குறைந்துள்ளது.

லண்டனுக்கு கட்டணம் 36 % அதிகரிப்பு

லண்டனுக்கு கட்டணம் 36 % அதிகரிப்பு

டெல்லி முதல் லண்டன் வரை செல்ல கடந்த மே மாதத்தில் 21,888 ரூபாயாக இருந்த கட்டணம் நடப்பு ஆண்டில் 10 சதவிகிதம் குறைந்து 19,660 ரூபாயாக குறைதுள்ளது, ஆனால் இதுவே ஜீன் மாதத்தில் 36 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீன் மாதத்தில் 26,795 ரூபாயாக் இருந்த கட்டணம் நடப்பு ஆண்டில் 36,312 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல வெளி நாடுகளுக்கு செல்லும் கட்டணம் மும்பை - சான் பிரான்சிஸ்கோவுக்கும், டெல்லி - பாரிஸ்ஸுக்கும் மூறையே 19% , 12% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் யாத்ரா கூறியுள்ள அறிக்கையில் வெளியிட்டூள்ளது.

குறிப்பிட்ட சில  நாடுகளுக்கு கட்டணம் அதிகரிப்பு

குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கட்டணம் அதிகரிப்பு

இதோடு மட்டும் அல்லாது இன்னும் சில குறிப்பிட்ட பல துறைகளுக்கு இந்த கட்ட ண அதிகரிப்பு அதிகமாகவே உள்ளது என்றும் யாத்ரா கூறியுள்ளது, குறிப்பாக ஐரோப்பா மற்றும் நார்த் அமெரிக்காவிற்கு 10 முதல் 15 சதவிகிதம் கட்டணம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது அதிகரித்திருப்பதாகவும் , இதுவே மத்திய ஆசிய நாடுகள் மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல 36% வரை கட்டணம் அதிகரித்திருப்பதாகவும் யாத்ரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லவும் அதுவும் குறிப்பாக மே மாதம் முதல் ஜீன் வரை கட்டணம் அதிகரித்துள்ளது.

மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்

மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்

இது குறித்து ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் பங்கு தாரான டெல்டா கூறியதாவது, ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தில் நிலவி வரும் கடன் பிரச்சனை காரணமாக விமானங்களை குறிப்பிட்ட காலத்தில் இயக்க முடியாமல் போகலாம். இதனால் பயணிகளுக்கு வேறு ஏதேனும் மாற்று செய்து தரப்படும். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்ய ஜெட் ஏர்வேர்ஸ் கடமை பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

International airfares soar as scottish summer holidays

Delta is aware of Jet Airways financial situation and its its normal schedule. Delta is assisting Delta customers booked on jet airways flights to support to support their reaommandation via alternative travel options.
Story first published: Sunday, April 14, 2019, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X