பகுஜன் சமாஜ்வாடி வங்கிக் கணக்கில் ரூ.669 கோடி..! பாஜக கணக்கில் ரூ.82 கோடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் வங்கிக் கணக்குகளில் தான் தற்போது அதிகமான பணம் பாக்கி இருக்கிறது எனத் தேர்தல் ஆணையம் சொல்கிறது.

 

கடந்த பிப்ரவரி 25, 2019 அன்று தேர்தல் செலவீனங்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி இந்த விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்களாம்.

இந்தியாவில் உள்ள எட்டு பொதுத் துறை வங்கிக் கணக்குகளில் (கட்சியின் வங்கிக் கணக்குகளில்) 669 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறதாம். இதனால் தற்போது இந்திய அரசியல் கட்சிகளில் அதிக அளவில் பணம் வைத்திருக்கும் கட்சிகள் பட்டியலில், முதலிடத்தில் இருக்கிறது பகுஜன் சமாக் கட்சி.

இந்தியாவின் ஆடை கதர் ஆடை.. என்னைக்குமே மவுசு குறையாது..குதூகலத்தில் உற்பத்தியாளர்கள்

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

இரண்டாவது இடத்தில் சமாஜ்வாடி கட்சி 471 கோடி ரூபாயுடன் வந்து அமர்ந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த தேர்தல் கரணமாக இந்த முறை கொஞ்சம் வங்கிக் கணக்கில் பணம் குறைந்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள் சமாஜ்வாடியினர்.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடம்

காங்கிரஸ் கட்சி இந்த பட்டியலில் 196 கோடி ரூபாய் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல் செலவு விவரங்களை இதுவரை வெளியில் சொல்லவில்லை. எனவே அந்த 3 மாநில தேர்தலுக்கு முன்பான கணக்குபடி தான் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் 196 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறதாம்.

ஆளுங்கட்சி
 

ஆளுங்கட்சி

நான்காவது இடத்தில் தெலுகு தேசம் கட்சி 10 கோடி ரூபாய் டெபாசிட்டோடு இடம் பிடித்திருக்கிறது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி 82 கோடி ரூபாய் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். என்னய்யா பாஜக ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு வெறும் 82 கோடி தானா என வருத்தப் பட வேண்டாம். பாஜக தேர்தல் பத்திரங்கள், வேறு சில வழிகளில் வாங்கிய நன்கொடைகள் என பல வழிகளில் 2017 - 18 நிதி ஆண்டில் சுமார் 1,027 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறார்களாம். அதில் 758 கோடி ரூபாயை மார்ச் 31, 2018-க்குளேயே செலவழித்துவிட்டார்களாம்.

இது பாக்கி தான்

இது பாக்கி தான்

பாக்கி தொகையில் ஒரு சிறு பங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பண வரவு, வெளியே போன செலவுகள் போக இப்போது 82 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் இருக்கிறதாம்.

2017 - 18 நிதி ஆண்டில் பாஜக 1027 கோடி ரூபாய் திரட்டி இருக்கிறது. பகுஜன் சமாஜ்வாடி 52 கோடி ரூபாய் திரட்டி இருக்கிறது. காங்கிரஸ் 2016 - 17-ல் 225 கோடி ரூபாய் திரட்டி இருக்கிறது. 2017 - 18-ல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் நிதி திரட்டிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

87% நன்கொடை தான்

87% நன்கொடை தான்

இப்படி திரட்டப் படும் பணத்தில் 87%-க்கு மேல் நன்கொடைகள் தானாம். பாக்கி உள்ள 13% தான் தேர்தல் பத்திரங்கள் போன்ற மற்ற வழி முறைகளில் திரட்டி இருக்கிறார்களாம். தேர்தல் பத்திரங்களில் பாஜக அதிகபட்சமாக 210 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bsp banks accounts shows 669 crore balance and bjp bank accounts show 82 crore balance

bsp banks accounts shows 669 crore balance and bjp bank accounts show 82 crore balance
Story first published: Monday, April 15, 2019, 12:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X