சரக்கு மற்றும் சேவை வரியால் சாதகமே...மோட்டார் பம்ப் உற்பத்தி 20 சதவிகிதம் அதிகரிப்பு - டாப்மா தலைவர்

சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்பு தான் விவசாயத்திற்கு தேவையான பம்ப் உற்பத்தி 10 முதல் 20 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக டாப்மா தலைவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவை: ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் 50000 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ள நிலையில் பம்ப் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர் சங்க தலைவர் (Tamilnadu Pumps and Spares Manufacturers Association - TAPMA) ஆர். கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்பு தான் விவசாயத்திற்கு தேவையான பம்ப் உற்பத்தி 10 முதல் 20 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக டாப்மா தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருப்பதாக எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டையும் டாப்மா தலைவர் மறுத்துள்ளார்.

மதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை மதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை

பம்ப் உற்பத்தி அதிகரிப்பு

பம்ப் உற்பத்தி அதிகரிப்பு


ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் 50000 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ள நிலையில் பம்ப் உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்து விலைவாசி குறைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக விவசாய உற்பத்திக்கு துணையான பம்ப் உற்பத்தி முன்பு இருந்ததை விட ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 10 முதல் 20 சதவிகிதம் வரையிலும் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

 ஜிஎஸ்டியால் சாதகமே

ஜிஎஸ்டியால் சாதகமே

பம்ப் உற்பத்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்த தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர் சங்க (Tamilnadu Pumps and Spares Manufacturers Association - TAPMA) தலைவர் ஆர். கல்யாணசுந்தரம், ஜிஎஸ்டி வரவால் தற்போது பம்ப் உற்பத்தி சுமார் 10 முதல் 20சதவிகிதம் வரையிலும் அதிகரித்துள்ளது. கூடவே வேலை வாய்ப்பும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் பம்ப் உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியானது அமல்படுத்தப்பட்டபோது இருந்த வரிவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு அதிகரிப்பு

வேலை வாய்ப்பு அதிகரிப்பு

ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டால் தான் நாட்டின் பொருளதாதார வளர்ச்சி அதிகரிக்கும், தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெருகி அதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும், கூடவே நாட்டின் பல லட்சக்கணக்கான இளைஞர்களும் தொழில் முனைவோராக வர முடியும் என்று நம்பிக்கையும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

மத்திய அரச தரப்பில் தரப்பட்ட நம்பிக்கையைத் தொடர்ந்து பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு வழியாக ஒரு மனதாக சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் வரி விகிதமானது 3%, 5%, 12% 18% மற்றம் 28% என 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டது

ஐந்தடுக்கு வரிமுறையால் பாதிப்பு

ஐந்தடுக்கு வரிமுறையால் பாதிப்பு

ஒரே நாடு, ஒரே வரிமுறைதான் என்ற முழக்கத்துடன் தான் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டு பின்னர் வரி முறையை 5 அடுக்குகளாக இருந்ததால் ஆரம்பத்தில் தலையாட்டி சம்மதித்த தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போதே அனைத்து தொழில் துறையினரும் வணிகர்களும் தங்களின் அதிருப்தியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு தெரிவித்தனர்.

வேலையிழக்கும் அபாயம்

வேலையிழக்கும் அபாயம்

தொழில் துறையினர் ஒரு பக்கம் அதிருப்தி தெரிவிக்க , இந்தப் பக்கம் நாட்டிலுள்ள எதிர்கட்சிகள் எல்லாம் "போச்சு போச்சு ஜிஎஸ்டியின் 5 அடுக்கு வரி முறையால் நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் எல்லாம் விரைவில் மூடப்பட்டுவிடும். அதனால் நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் எற்படும்" என்று கூப்பாடு போட்டன.

ஓரடுக்கு வரிமுறை

ஓரடுக்கு வரிமுறை

பிரதமர் மோடியும், நிதியமைச்சர் ஜெட்லியும், ஜிஎஸ்டி வரிமுறை முதலில் கடினமானதாக தோன்றினாலும் இன்னும் 6 மாதமோ அல்லது 1 வருடமோ, அதற்கு பின்னர் அனைத்து தரப்பினருக்கும் எளிதானதாக மாறிவிடும் என்றும், 5 அடுக்குகளாக இருக்கம் ஜிஎஸ்டி வரிவிகிதங்களை விரைவில் ஓரடுக்கு வரிமுறையாக மாற்ற தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

சாதகமாக மாறிய ஜிஎஸ்டி

சாதகமாக மாறிய ஜிஎஸ்டி

பிரதமரும், நிதியமைச்சரும் நம்பிக்கை அளித்தது போலவே, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட புதிதில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் முதல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் நுகர்வோர் கையை வந்தடையும் வரை விலை சற்று அதிகரித்தது போல் தோன்றினாலும் தற்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து விலைவாசி குறைய ஆரம்பித்தது.

மூலப்பொருட்கள் விலை குறைவு

மூலப்பொருட்கள் விலை குறைவு

உற்பத்தி அதிகரித்து விலைவாசி குறைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக விவசாய உற்பத்திக்கு துணையான பம்ப் உற்பத்தி முன்பு இருந்ததை விட ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 10 முதல் 20 சதவிகிதம் வரையிலும் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

பம்ப் உற்பத்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்த தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர் சங்கத் (Tamilnadu Pumps and Spares Manufacturers Association - TAPMA)) தலைவர் ஆர். கல்யாணசுந்தரம், ஜிஎஸ்டி வரவால் தற்போது பம்ப் உற்பத்தி சுமார் 10 முதல் 20சதவிகிதம் வரையிலும் அதிகரித்துள்ளது. கூடவே வேலை வாய்ப்பும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் பம்ப் உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியானது அமல்படுத்தப்பட்டபோது இருந்த வரிவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

 

 விஷமப்பிரச்சாரம்

விஷமப்பிரச்சாரம்

ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 50000 சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அதனால் சுமார் 5 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகவும் எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த கல்யாணசுந்தரம், அதெல்லாம் எதிர்கட்சிகள் செய்யும் விஷமப் பிரச்சாரம் என்று கடுமையாக மறத்தார்.

ஜிஎஸ்டியால் பயன் அதிகம்

ஜிஎஸ்டியால் பயன் அதிகம்

டாப்மா சங்கத்தின் செயலாளர் சி. சவுந்தர்ராஜ் கூறுகையில், வாட் வரி விதிப்பு முறையில் வெளி மாநில விற்பனைக்கு பயன்படும் ‘C" படிவத்தை வணிகவரித் துறையில் இருந்த பெற்று அதை பராமரித்து பின்னர் அதை தணிக்கையின்போது முறையாக அரசுக்கு சமர்ப்பிக்கும் போது மிக கடினமாக இருந்தது. "C" படிவம் தொலைந்துபோனால் அதற்கு கூடுதல் அபராதமும் கட்டவேண்டியிருந்தது.

 இ வே பில்லினால் நன்மை

இ வே பில்லினால் நன்மை

ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால் எங்களுக்கு அந்த சிரமம் எதுவும் இல்லை. இதனால் நாங்கள் பம்ப் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. ஜிஎஸ்டி என்னும் புதிய வரிமுறை எங்களை தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தி தொழிலை விரிவுபடுத்த உற்ற நண்பனான உள்ளது என்றும் கூறினார். சரக்கு பரிமாற்றத்திற்கு பயன்படும் இ-வே பில் முறை பற்றி கருத்து கூறிய சவுந்தர்ராஜ், சரக்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது கூடவே இ-வே பில்லையும் கையோடு எடுத்துச் செல்வதால், அந்த வாகனங்கள் எந்த சுங்கச் சாவடியிலும் நிற்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST Benefits for Pumps and Spares Manufacturers says pumpset makers

TAPMA president Kalyanasundaram said taxes were 4 per cent less after GST implementation, as there was reduction of central sales tax for the materials purchased from outside the region. Besides, two per cent reduction in sales tax added to the growth of the business ranging from 10 to 20 per cent
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X