ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் நிதி திரட்ட முடிவு.. கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகிறது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்கள் மூலம் 500 மில்லியன் டாலர்களை நிதியாக திரட்ட திட்டமிட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 3475 கோடி ரூபாயாகும்.

 

இது குறித்து ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி நாட்டில் வாங்குதல் மற்றும் இதர நடவடிக்கைகளின் மூலம் கடன் பெறுவதற்கு வெளி நாட்டு வர்த்தக கடன்கள் (ECB) அமைப்பின் மூலம் அனுமதிக்கப்படலாம் என்றும், அப்படி அனுமதிக்கப்பட்டால் இதன் மூலம் நிதியை திரட்ட முடியும் என்றும் கூறியுள்ளது.

ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட்  நிதி திரட்ட முடிவு.. கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகிறது

மேலும் பத்திர ஒப்புதல் குழு சுமார் 3475 கோடி ரூபாய் அளவிலான கடன் பத்திரம் மூலம் நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளதும். அதேசமயம் இந்த நிதி திரட்டல் குறித்த ஆவணங்களில் தே ையான கையெப்பங்களை இட்டிருப்பதாகவும் ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் பி.எஸ்.இயில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வாறு வினியோகிப்படும் பத்திரங்களின் காலம் 3 1/2 ஆண்டுகள் என்றும், இதற்கான வருடாந்திர வட்டி 5.95% என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கடன் பத்திரங்கள் சிங்கப்பூர் செக்யூரிட்டீஸ் டிரேடிங்க் லிமிடெட்டில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத இந்திய ஏற்றுமதி..! ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..!

இந்த நிதி திரட்டல் மூலம் ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம், மேலும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதோடு தொழில் முறைகளையும் மேம்படுத்தும் என்றும் இதன் மூலம் அறிய முடிகிறது. இதனால் வரும் காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

பல்வேறு நிதி நிறுவனங்களும் வங்கிகளும் கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் தத்தளித்து வருகின்றன. இந்த நிலையில் கொடுத்த கடனை பெற முடியாமல் இந்த நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளதா? அல்லது உண்மையிலேயே பணி விரிவாக்கத்திற்குகாக திரட்ட உள்ளதா என்றும் இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் குழப்பத்தையில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா வேண்டாமா? வாங்கிய பங்குகளை வைத்திருக்கலாமா ? என பலர் குழப்பத்தில் உள்ளனர்.

 

இதையடுத்து இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இந்திய பங்கு சந்தைககளில் 9 ரூபாய் அதிகரித்து 1230 ரூபாயாக (ஏப்ரல்,16,2019. 3.00pm) வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: shriram transport
English summary

shriram transport to raise $500mn via secured notes

Shriram Transport Finance Company on Tuesday said it will raise $500 million (approx Rs 3,475.50 crore) through issuance of secured notes.
Story first published: Tuesday, April 16, 2019, 15:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X