அதிகரித்திருக்கும் பழைய வாகன விற்பனை.. Original Equipment Manufacturer சேவையே காரணம்..CarDekho

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெய்ப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் கார்டெக்ஹோ (CarDekho) நிறுவனம் பழைய கார்களை வாங்கியும் விற்றும் வருகிறது. இது கடந்த 2019- நிதியாண்டில் 62 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் வருமானம் 260 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கலாம் எனவும் CarDekho நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

 

இந்த நிறுவனத்தின் பழைய கார்களை வாங்கி விற்கும் CarDekho நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் பயன்பாடிற்காகவும், கிர்னர்மென் பொருள் நிறுவனமானது பங்கு வகித்துள்ளது என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனமானது நிதி சேவை மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல சேவைகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதன் மூலம் 140 சதவிகிதம் வருவாயை உயர்த்தியுள்ளது இந்த CarDekho நிறுவனம். மேலும் இந்த ஆண்டின் முன்பே டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேலும் வளர்ச்சிக்கு வித்திட்டது எனவும் கூறலாம்.

original equipment manufacturer சேவை

original equipment manufacturer சேவை

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் சேவையில் முன்னணி வகிப்பதற்கு காரணம் OEM (original equipment manufacturer) சேவையே காரணம் என்கிறது இந்த நிறுவனம். அதாவது புதுப் கார்களில் பிட் செய்யப்படும் அதே வகையான ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ்கள் எதுவும் மாற்றப்படாமல் ஒரிஜினலாக இருப்பதே, இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு வழி வகுத்ததாக தெரிவித்துள்ளது CarDekho நிறுவனம்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே மூலதனம்

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே மூலதனம்

அதோடு இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அவர்களின் அனுபவத்தை மற்றவர்களுக்கு கூறுவதன் மூலம் இன்னும் விரிவு படுத்த இயலும் என CarDekho நிறுவனத்தின் துனை நிறுவனர் அமித் ஜெயின் கூறியுள்ளார். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்களது சேவையை நன்கு அறிய முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் என்றும் எங்களை விட்டு செல்ல மாட்டார்கள். மேலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே எங்களது மூலதனம் என் கிறது இந்த நிறுவனம். அதோடு பழைய வாடிக்கையாளர்களே எங்களுக்கு புது புது வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என் கிறது இந்த நிறுவனம்.

பல கார் நிறுவனங்களூடன் தொடர்பு
 

பல கார் நிறுவனங்களூடன் தொடர்பு

CarDekho நிறுவனம் எட்டு கார் நிறுவனங்களுடனும், மோட்டார் சைக்கிள் நிறுவனங்க்களுடனும் நேரடியாக பணி புரிகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியா முழுவதிலும் மொத்தம் 5000 டீலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஜனவரி மாதம் கார் விற்பனைக்கு மட்டுமல்லாது பல தொழில்களுக்கும் சேர்த்து 110 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தது. இதுவே இந்த நிறுவனத்தின் வருவாயில் பங்கு வகித்துள்ளது.

இன்சூரன்ஸ்& நிதி சேவைகளும் உண்டு

இன்சூரன்ஸ்& நிதி சேவைகளும் உண்டு

குறிப்பாக இந்த முதலீடானது பயன்படுத்தப்பட்ட கார்கள், மற்றும் அதற்கான நிதி, இன்சூரன்ஸ் சேவைகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே இந்த நிறுவனம் அறிவித்திருந்தது நினைவில் கொள்ளதக்கது. இதுபோன்ற சேவைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் மேலும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில்பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

அடித்தட்டு மக்களுக்காகவே CarDekho

அடித்தட்டு மக்களுக்காகவே CarDekho

இந்த நிறுவனம் அடித்தட்டு மக்கள் வரை தனது சேவையை கொண்டு செல்வதே இதன் நோக்கம் என் கிறது இந்த நிறுவனம். மொத்தமாக அதிக அளவில் முதலீடு செய்து புதிய கார்களை வாங்கும் அளவிற்கு அடித்தட்டு மக்கள் முதலீடு செய்ய விரும்புவதில்லை. ஆனால் இது போன்ற பழைய கார்களை உபயோகப்படுத்துவதில் ஆர்வம் செலுத்துகின்றனர் மக்கள்.

சர்வதேச அளவிலும் உண்டு CarDekho

சர்வதேச அளவிலும் உண்டு CarDekho

மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய ZigWheels மற்றும் OTO என்ற பெயர்களில் சர்வதேச சந்தையிலும் இந்த நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக இதன் மூலம் சர்வதேச அளவில் இதன் சேவை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருவது கவனிக்க தக்கவிஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CarDekho Reports 62% hike in its revenue

Jaipur-based online platform to buy and sell cars, CarDekho, has witnessed a 62% growth in its revenue to reach INR 260 Cr mark in the financial year ending on March 2019.
Story first published: Wednesday, April 17, 2019, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X