என்ன ஆச்சு என்னதான் நடக்குது.. ஜிண்டால் ஸ்டீல் லாபமா நஷ்டமா ..குமுறலில் நிறுவனம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உருக்கு கம்பிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் கடந்த 2018 -2019-ம் நிதியாண்டின் நான் காவது காலாண்டில் ஸ்டீல் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்டீல் உற்பத்தி 1.51 மில்லியன் டன் எனவும், அதேசமயம் சரக்கு விற்பனை 1.45 மில்லியன் டன் எனவும் அறிவித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் ஸ்டீல் உற்பத்தி 1.26 மில்லியன் டன்னாகவும், அதே சமயம் விற்பனை 1.18 மில்லியன் டன்னாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு நிர்வாக இயக்குனர் நவ்சாத் அக்தர் அன்சாரி கூறுகையில், கடந்த நான் காவது காலாண்டில் உற்பத்தியை மிக வேகமாக துரிதப்படுத்தினோம். ஆங்குலையில் உற்பத்தியை அதிகரிப்பதுடன், உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டிலுமே கவனம் செலுத்தினோம். இதுவே எங்கள் வளர்ச்சிக்கு வித்திட்டதாக நினைக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

வெளியிடப்பட்ட கணிப்பு

வெளியிடப்பட்ட கணிப்பு

ஏற்கனவே இதற்கு முன்னர் ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 1.1 கோடி குறைந்து 99.2% குறையலாம் எனவும், இதுவே காலாண்டுடன் ஒப்பிடும்போது 104.5 சதவிகிதம் குறையும் என்றும் அறிவித்திருந்தது. இதனால் தானே என்னவோ இந்த நிறுவனம் இன்று வெளியிட்ட நான் காலாவது காலாண்டு முடிவு வெளியிட்டிருந்தது. இதில் பெரிதாக எந்த தகவலும் அளிக்கப்பட வில்லை என்பதே உண்மை.

விற்பனை அதிகரிக்கலாம் லாபமா?

விற்பனை அதிகரிக்கலாம் லாபமா?

இதுவே இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 -2019 நிதியாண்டில் நிகர விற்பனை 22.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும், இதன் மதிப்பு சுமார் ரூ.10,439.6 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இதுவே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது 4-வது காலாண்டில் நிகர விற்பனை 10.6 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.

வரிக்கு முன்பே நஷ்டம், பின்னர் லாபமா?

வரிக்கு முன்பே நஷ்டம், பின்னர் லாபமா?

வட்டி, வரி, தேய்மானம், மற்றும் கடன் வசூல் ஆகியவற்றிற்கு முன்பு வருமானம் 3 சதவிகிதம் குறைந்து ரூ.1999.2 கோடியாக இருக்கும் என்றும், இது காலாண்டுடன் ஒப்பிடும்போது 2.7 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம் புதிய வேலை வாய்ப்பு போன்ற எந்த ஒரு அறிவிப்பும் இதில் கொடுக்கப்படவில்லை.

டிவிடென்ட்டும் இல்லை போனசும் இல்லை

டிவிடென்ட்டும் இல்லை போனசும் இல்லை

மேலும் டிவிடெண்ட் போனஸ் இதுபோன்ற எந்த வித அறிவிப்பும் இல்லை. அதேசமயம் இந்திய பங்கு சந்தைகளிலும் எந்த வித மாற்றம் இன்றி 189 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. ஆக இதன் எதிரொலி நாளைய பங்கு சந்தையில் எதிர்பார்க்கலாம். இதுகுறித்து வர்த்தகர்கள் மத்தியில் பல கருத்துகள் நிலவி வந்தாலும், தற்போது இந்த வலுவான போட்டி நிலவி வருகிறது. இதனாலேயே பல நிறுவனங்கள் முடங்கி வருகின்றன. மேலும் பொருளாதாரமும் பின்னடைவில் இருப்பதால் இனி வரும் நிதியாண்டிலாவது லாபத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: quarter jindal
English summary

Jindal steel and power production hike in the last quarterly

Jindal Steel and Power Limited (JSPL) has reported its highest ever domestic quarterly steel production and sales in the fourth quarter of financial year 2018-2019. The company registered a record crude steel production of 1.51 million tonnes and robust sales of 1.45 mt during the quarter ending March 2019.
Story first published: Wednesday, April 17, 2019, 9:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X