கடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு அனுதாபம்.. மற்றொரு கடனாளி விஜய் மல்லையா ட்விட்டரில் சோகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இன்னொரு கடனாளியான விஜய் மல்லையா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் தனது அனுதாபத்தை உருவாக்கியுள்ளார்.

 

ஒரு கடனாளிக்கு தான் புரியும் இன்னொரு கடனாளியின் மனது இதனால் தான் அனுதாபம் தெரிவிதிருப்பாரோ? விமானத்துறையில் பல தனியார் நிறுவனங்கள் குதித்த நிலையில் நிலவி வந்த போட்டியாலும், சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும் பல சலுகைகளை அளித்தும் வந்தன. அதிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க மிக அதிகமான சலுகைகளை அளித்து வந்தன.

இது போன்ற பல சலுகைகள் தொடர்ந்து வழங்கியதில் கிங்க் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான சரிவை சந்தித்திருந்தன. தற்போது இந்த பட்டியியலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் சேர்ந்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்தியாவை ஆள துடிக்கும் கார்ப்பரேட் Saudi Aramco! Saudi Aramco-க்கு முட்டு கட்டை போடுமா Reliance.! இந்தியாவை ஆள துடிக்கும் கார்ப்பரேட் Saudi Aramco! Saudi Aramco-க்கு முட்டு கட்டை போடுமா Reliance.!

கிங்க் பிஷருக்கு போட்டியே ஜெட் ஏர்வேஸ் தான்

விமானத்துறையிக் கிங்க் பிஷர் நிறுவனத்திற்கு முதல் போட்டியாளரே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்தான் என கூறியுள்ளார் மல்லையா. மேலும் ஜெட் ஏர்வேஸ்-க்கு ஒரு நியாயம் தனியார் விமான நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்றே அரசு செயல்படுகிறது. என நாட்டை விட்டே தப்பியோடிய விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் தொடர்ந்து பல ட்வீட்டுகள் மூலம் தான் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பவதாகவும், ஆனால் இந்திய பொதுத்துறை வங்கிகள் அவற்றை ஏன் ஏற்க மறுக்கின்றன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நரேஷ் & நீட்டாவுக்கு அனுதாபம்

நரேஷ் & நீட்டாவுக்கு அனுதாபம்

மேலும் இன்னொரு ட்விட்டரில் மற்றொரு ட்வீட்டில், "கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு மிகப்பெரும் போட்டியாக இருந்த நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். அவ்வாறு நாடே பெருமைகொள்ளும் விதமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்த நரேஷ் மற்றும் நீடா கோயலுக்கு எனது அனுதாபங்கள். முக்கிய நகரங்களுக்கான தொடர்பு வசதி, நல்ல சேவை. பாவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

முழுக் கடனையும் செலுத்த தயார்

மற்றொரு பதிவில், நான் 100 சதவிகித கடனையும் திருப்பிச் செலுத்தத் தயார் என்று கூறும்போதெல்லாம் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு நான் நாடு கடத்தப்படுவது குறித்து பயந்து, மிரண்டு போயுள்ளதாக செய்திகள் வெளியிடுகின்றன. இந்திய ஊடகங்கள். லண்டன் சிறையோ இந்தியச் சிறையோ நான் பணத்தை செலுத்திவிடுகிறேன். முதலில் நான் தருவதாக சொன்னாலும் வங்கிகள் ஏன் வாங்க மறுக்கின்றன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மல்லையாவுக்கு அனுதாபத்தின் தேடலா?

ஆக மொத்தத்தில் அனுதாபத்தையும் தேடிக் கொண்டார், தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார்.எப்படியோ அரசுக்கு கடன் அடைய வேண்டும். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தற்போதைய பிரச்சனைகள் தீர நிதி ஒதுக்கீடு சேர வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே ஜெட் ஏர்வேஸ் பிரச்சனையிலிருந்து வெளியேறும். இதில் மல்லையா ட்விட்ட் செய்தாலும் சரி இல்லை கோயல் ட்விட் செய்தாலும் சரிஎதுவும் நடக்க போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vijay mallaya feels sorry for jet airways

Extending the sympathy for jet founder naresh goyal and his wife neeta, mallaya said that india should be extremely to proud of the airline for providing vital connectivity and class service
Story first published: Wednesday, April 17, 2019, 21:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X