நீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்..! பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வங்கிகளை ஏமாற்றி, கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தை நடத்துகிறேன் என, சுமார் 10,000 கோடி ரூபாயை கடன் வாங்கி திருப்பி அடைக்காமல் ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்.

 

வங்கிகளை ஏமாற்றி நூதனமாக பணமே கொடுக்காமல் Letter of Undertaking முறையில் சுமார் 13,000 கோடி ரூபாய் ஊழல் செய்த நீரவ் மோடியை இந்தியா அழைத்து வந்து தண்டிக்க வேண்டும் என எல்லா வெகுஜனங்களுக்குமே ஒரு கோபம் இருக்கிறது.

அந்த கோபத்தை முதல் நபராக இருந்து இயக்கிக் கொண்டிருப்பவர் அமலாக்கடத் துறையில் இணை இயக்குநராக (Joint Director) இருக்கும் சத்யப்பிரதா குமார்.

அட என்ன ஆச்சரியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே அட என்ன ஆச்சரியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே

பணிமாறுதல்

பணிமாறுதல்

சத்யப் பிரதா குமார். இவர் தான் சூடாக ஊடகங்கள் செய்தி வந்து கொண்டிருக்கும் நீரவ் மோடி வழக்கை லண்டனில் இருந்து கொண்டு வேலைகளைச் செய்து வருகிறார். கடந்த மார்ச் 29, 2019 அன்று நீரவ் மோடியின் வழக்குக்காக இவர் லண்டனில் இருந்தார். அப்போது இரவோடு இரவாக அமலாக்கத் துறையில் சிறப்பு இயக்குநராக இருக்கும் வினித் அகர்வால், அவருக்கு உத்தரவு பிறக்கும் அடுத்த உயர் அதிகாரி, மும்பை அமலாக்கத் துறையின் தலைவர் என அனைவரும் சேர்ந்து சத்யப்பிரதாவை பணிமாற்றல் (Transfer)செய்திருக்கிறார்கள்.

பணிமாற்றம் ரத்து

பணிமாற்றம் ரத்து

இந்திய அமலாக்கத் துறையின் இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இந்த விஷயம் தெரிய வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே டெல்லி உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி சத்யப்பிரதாவுக்கு வினித் அகர்வால் கொடுத்த பணிமாற்றல் செல்லாது என உத்தரவே பிறப்பித்துவிட்டார். அதோடு வினித் அகர்வாலையும் அமலாக்கத் துறையில் இருந்தே நீக்கி இருக்கிறார்கள்.

பதவிக் காலம் குறைப்பு
 

பதவிக் காலம் குறைப்பு

கடந்த ஜனவரி 2017-ம் ஆண்டில் தான் ஐந்து ஆண்டு காலத்துக்கு அமலாக்கத் துறையில் பணி நியமனம் கொடுத்தார்கள். இப்போது ஏற்பட்ட பிரச்னையால் பணிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்து மீண்டும் மகாராஷ்டிர கேடருக்கே அனுப்பி இருக்கிறார்கள். வினித் அகர்வால் 1994-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. மகாராஷ்டிர கேடரைச் சேர்ந்தவர்.

2ஜி வழக்கு

2ஜி வழக்கு

வினித் அகர்வாலும் ஒரு வலுவான திறமையுள்ள அதிகாரி தான். இந்தியாவின் அலைக்கற்றைப் புகழ் 2ஜி வழக்கை முதலில் கையாண்டு தேவையான ஆவனங்கள் மற்றும் சாட்ட்சியங்களை எல்லாம் திரட்டியது நம் வினித் அகர்வால் தான். பணச் சலவைத் தடுப்பு அமைப்பில் இருக்கும் அதிகாரிகள் "வினித் அகர்வாலின் நடவடிக்கைகளை அரசு தவறாக புரிந்து கொண்டது என்றே நினைக்கிறோம். நீரவ் மோடி வழக்கில் வினித் அகர்வால் சம்பந்தபடுகிறார் என நினைத்துக் கொண்டார்கள் அது தான் இப்போது அவரை அமலாக்கத் துறையில் இருந்தே நீக்கி விட்டார்கள்" என வினித் அகர்வாலுக்கு ஆதவு கொடுக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vijay mallya, nirav modi case investigating officer transfer revoked and vineet agarwal removed from enforcement directorate

vijay mallya, nirav modi case investigating officer transfer revoked and vineet agarwal removed from enforcement directorate
Story first published: Wednesday, April 17, 2019, 12:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X