பரவாயில்லையே இப்பதான் புரிசிருக்கோ..வியாபார யுக்தியை கையாளும் ஐ.ஆர்.சி.டி.சி..என் ஜாய் த ஆஃபர்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கிம் : இமய மலைத் தொடரில் அமைந்த இந்திய மா நிலமே சிக்கிம் ஆகும். இது இந்தியாவின் வட கிழக்கு மா நிலமாகும். தனி நாடாக விளங்கிய சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவுடன் இணைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில், முழு இயற்கை விவசாய மாநிலம் என அறிவிக்கப்பட்டது. முழு இயற்கை விவசாயம் என உலகின் எந்தவொரு நாடோ, இந்தியாவின் எந்தவொரு மாநிலமோ எடுக்காத கொள்கை முடிவை சிக்கிம் மாநிலம் எடுத்துக் கொண்டு அதை செய்தும் காட்டியுள்ளது.

இதுமட்டுமா இங்கு சிறப்பு. இல்லை இல்லை இன்னும் இருக்கு ஐ.நா சபையின் ஓர் அங்கமான உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), சிக்கிம் மாநிலத்துக்கு வருங்காலக் கொள்கை விருது'அளித்துக் கௌரவித்துள்ளது. 25 நாடுகளிலிருந்து வந்த 51 கொள்கை முடிவுகளில் சிறந்ததாகச் சிக்கிம் மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கை தேர்வு பெற்று 'தங்க விருதை' வென்றுள்ளது.

சரி இதெல்லாம் ஏன் சொல்றோம்னு நினைக்கிறீங்களா? சிக்கிம் விவசாய நாடு மட்டுமல்ல, இது ஒரு சொர்க்க பூமிங்க. பனி பிரதேசம், வண்ண வண்ண கலாச்சாரங்கள், கலாசாரத்தை விடாத அழகான மக்கள், இதெல்லாம் விட அழகான கோவில்கள், பூர்வ பழங்குடியினரின் மரபுகள் என ஏராளாமா? இருக்குங்க. அப்படி ஒரு இடத்துக்கு போக ஐ.ஆர்.சி.டி.சி ஆஃபர் கொடுத்திருக்குங்க.

5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா..! 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..! 5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா..! 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..!

IRCTC Offers 5N 6D Package to North East

IRCTC Offers 5N 6D Package to North East

அதென்ன ஆஃபர் கேட்கிறீங்க்களா ? IRCTC Offers 5N 6D Package to North East இது தாங்க அது. சிக்கிம் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது இயற்கை விவசாயம் தான். இந்தியாவில் உள்ள மாநிலத்தில் 100% இயற்கை உணவுகளுக்கு தங்களையும் தங்களின் விவசாயத்தையும் பழக்கிக் கொண்ட மாநிலம் இது மட்டும் தான். இதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை ரசிக்க ஆயிரக்கணக்கில் இங்கு சுற்றுலாவினர் குவிவது வழக்கமான ஒரு விஷயமாக இருந்தாலும் இனி கூட்டம் இன்னும் அதிகரிக்கும் இல்லா.

எழில் கொஞ்சும் அழகை  ரசிக்க ஆஃபர்

எழில் கொஞ்சும் அழகை ரசிக்க ஆஃபர்

பசுமையான மழை முகடுகள், பனிச்சிகரங்கள், பசுமை போத்திய புல்வெளிகள் எங்கு திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் தான் சிக்கிம். குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து இங்கு சுற்றுலா செல்ல விரும்பும் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாகவே இருக்கும். ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த பேக்கேஜ். ஜூன் 1ம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா 6 பகல்களையும் 5 இரவுகளையும் கொண்டது. நபர் ஒன்றுக்கு 24,700 ரூபாய் கட்டணமாகும்.

: க்ரீன் சிக்கிம் ஏர் பேக்கேஜ்

: க்ரீன் சிக்கிம் ஏர் பேக்கேஜ்

IRCTC North East Package : க்ரீன் சிக்கிம் ஏர் பேக்கேஜ் என்று சொல்லப்படும் அந்த பேக்கேஜ் பற்றிய முழு விபரங்கள் : சுற்றுலா தளங்கள் - கேங்க்டாக் 2 இரவுகள், பெல்லிங் - 2 இரவுகள், சிலிகுரி - 1 இரவு
உணவு - காலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு
தங்குமிடங்கள் - கேங்க்டாக் - ஹோட்டல் கஜ்ராஜ்
பெல்லிங் - ஹோட்டல் பெமாலிங்
சிலிகுரி - வெங்கடேஷ் ரெசிடென்ஸி

IRCTC North East Package - கட்டணம்
இருவர் பேக்கேஜில் - ரூ. 26,340 (ஒருவருக்கு)
மூவர் பேக்கேஜில் - ரூ.24,700 ( ஒருவருக்கு )
குழந்தைகளுக்கு - 5 -11 வயதுக்குட்பட்டவர்களுக்கு (ரூ. 21,425)
பெங்களூரு - பக்த்ஹோரா - பெங்களரூ என்று ஒரு ரவுண்ட் சுற்றாக இருக்கும்.

 

அசுர வளர்ச்சியாக இருக்கும்

அசுர வளர்ச்சியாக இருக்கும்

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஐ.ஆர்.சி.டி.சியின் இது போன்ற ஆஃபர்கள் இதுவே முதல் முறை. தனியார் துறைகள் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி இது போன்ற அறிக்கைகளை விட்டிருப்பது அவற்றை சமாளிக்கவே என்பதில் சந்தேகமில்லை. மேலும் அரசு சார்ந்த இந்த துறைகள் மேலும் இதன் மூலம் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் இது போன்ற சுற்றுலா தளங்களுக்கு போக்குவரத்தை தடையில்லாமல் இது போன்ற சேவைகளிய வழங்குவதன் மூலம் இதன் வளர்ச்சி மாபெரும் வளர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC Offer green sikkim air package for 5D/6N

IRCTC has devised a special tour package for passengers to visit Sikkim and its capital, Gangtok. The Green Sikkim Air Package spanning 5 nights and 6 days covers destinations including Gangtok, Pelling and Siliguri.
Story first published: Friday, April 19, 2019, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X