பிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 120.5 கோடியை எட்டியுள்ளது. இது குறித்து இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி மாத்த்தில் 89.39 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. அதே நேரத்தில் 69.93 லட்சம் பேர் இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து வெளியேறினர்.

குறிப்பாக வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் இணைப்புகள் அதிகளவில் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 120.37 கோடியாக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பிப்ரவரில் 120.54 கோடியாக அதிகரித்துள்ளது துவண்டு போன நிறுவனங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளன.

டெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ் டெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்

அதிகம் பயன்படுத்தப்படும் வைபை

அதிகம் பயன்படுத்தப்படும் வைபை

அதிலும் ஃவைபை இணைப்புகள் அதிகளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் படி ஜனவரி மாதத்தில் மொபைல் மூலம் இணைக்கப்படும் ஃவைபை சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 118.36 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜனவரியில் 118.19 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜியோவுக்கு  மாறிய வாடிக்கையாளர்கள்

ஜியோவுக்கு மாறிய வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோ கடந்த பிப்ரவரி மாதத்தில் 77.93 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. இதன் படி கடந்த பிப்ரவரி இறுதி நிலவரப்படி ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்களின் என்ணிக்கை 29.7 கோடியைத் தொட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்லில்  9 லட்சம் பேர் இணைப்பு
 

பி.எஸ்.என்.எல்லில் 9 லட்சம் பேர் இணைப்பு

இதேபோல் பி.எஸ்.என்.எல் 9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், கடந்த பிப்ரவரியோடு மொத்தம் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ணிக்கை 11.62 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு துவண்டு போன நிறுவனத்திற்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்றும், இன்னும் பல வகைகளில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சொல்கின்றனர் ஆர்வலர்கள்.

ஐடியா- வோடாபோன் வேண்டாம்

ஐடியா- வோடாபோன் வேண்டாம்

இதே சமயம் வோடபோன் ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 57.87 லட்சம் பேர் வெளியேறியதை யடுத்து அந்த நிறுவங்களின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 40.93 கோடியாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து டாடா டெலி சர்வீசஸ் 11.47 மொபைல் சர்வீசஸ் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 49,896 வாடிக்கையாளர்களையும், எம்.டி.என்.எல் 4652 வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3611 வாடிக்கையாளர்களையும் இதுவரை இழந்துள்ளனர்,

தரைவழி சேவை முடக்கம்

தரைவழி சேவை முடக்கம்

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தரைவழி தொலைப் பேசியில் மட்டும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். ஆனால் அதேசமயம் இந்த சேவையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முறையே 42456 மற்றும் 17,563 வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டுள்ளன.

அதிகரித்த பிராட்பேண்ட் சேவை

அதிகரித்த பிராட்பேண்ட் சேவை

இதனால் பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 54 கோடியிலிருந்து 1.89 சதவிகிதம் அதிகரித்து 55 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய காலத்தில் கேட்டவுடன் கொடுக்கப்படும் சலுகைகள், அதிலும் துரிதமான சேவையே மக்கள் விரும்புகின்றனர்.ஆகவே மக்கள் இதுபோன்ற சேவையை விட்டு விலகி தனியார் துறையில் இணைந்து வருகின்றனர். ஆக தற்போது ஒருகாலத்தில் பிராட்பேண்ட் சேவையில் கொடி கட்டி பறந்த பி.எஸ்.என்.எல் தற்போது அதை மற்ற நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தொடங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio, BSNL drive telecom subscriber growth to 120.5cr

The country's telecom subscriber base grew marginally to 120.5 crore on account of a net addition of customers by Reliance Jio and state-owned BSNL, according to data published by telecom regulator.
Story first published: Friday, April 19, 2019, 9:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X