ஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதால் வேலையிழந்து தவிக்கும் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களை காப்பாற்றும் விதமாக அந்நிறுவனத்தில் உள்ள 400 ஊழியர்களையும் 100 பைலட்களையும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக மற்றொரு விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.

 

வேலையிழந்து தவிப்பதால் மாதாந்திர செலவுகள் மற்றும் இஎம்ஐ போன்றவற்றுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணியமர்த்துவது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் கூறும்போது, எங்களின் முதல் சாய்ஸ் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை பணியமர்த்துவதுதான் என்றார்.

தற்காலிக நிறுத்தம்

தற்காலிக நிறுத்தம்

கடன் சுமையில் சிக்கி சின்னாபின்னமாகி கடனை திரும்ப செலுத்துவதற்காக வங்கிகளிடமும் மத்திய அரசிடமும் கையேந்திய நிலையில் அவர்களும் கைவிட்டு விட்டதால் வேறு வழியே இல்லை என்ற நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயங்குவதற்கு தேவையான ஓடுதளம் முற்றுப் பெற்றதால் கடைசியில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.

ரீஃபண்ட் கிடையாது

ரீஃபண்ட் கிடையாது

விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் இதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளும் செய்வதறியாது தவித்து பின்னர் வேறு விமானங்களை நாடத்தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் தொகையையும் இப்போதைக்கு தர முடியாது என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா
 

எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா

பயணிகளின் நிலை இப்படி இருக்க, இன்னொரு பக்கம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், மேலாளர்கள், பைலட்கள் மற்றும் பயணிகளின் உதவியாளர்கள் (cabin crew) என அத்தனை பேரும் தாங்கள் நட்டாற்றில் விடப்பட்டதை அடுத்து தங்களின் நிலுவை சம்பளத்தை பெற்றுத் தருமாற பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் என அனைவருக்கும் கடிதம் எழுதினர்.

கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட்

கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட்

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களின் நிலையை நன்கு உணர்ந்து கொண்ட போட்டி நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களில் 400 பேரையும் பைலட்களில் 100 பேரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளதாக தெரிகிறது.

அண்ணனுக்கு 27 விமானங்கள் பார்சேல்

அண்ணனுக்கு 27 விமானங்கள் பார்சேல்

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளின் அடுத்த சாய்ஸாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமாக உள்ளதால் பயணிகளை கவர்வதற்காகவே கூடுதலாக 22 போயிங்737 விமானங்களையும் 5 டர்போப்ராப் பாம்பார்டிர் க்யூ (Turboprob Bombardier Q400) ரக விமானங்களையும் வாங்கப்போவதாக அறிவித்துள்ளது.

தகுதியான ஆட்கள் தேவை

தகுதியான ஆட்கள் தேவை

கூடுதலாக விமானங்களை வாங்குவதால் அதற்கான ஊழியர்கள் மற்றும் பைலட்கள், பயணிகளின் உதவும் பணியாளர்கள் என தேவையான அனைவரையும் பணியமர்த்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதற்கான தகுதியான ஆட்களையும தேர்ந்தெடுக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

எங்கள் முதல் சாய்ஸ்

எங்கள் முதல் சாய்ஸ்

புதிதாக ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணியமர்த்துவது தொடர்பாக பேசிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவரான அஜய் சிங், எங்களின் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளோம். ஆகவே, எங்களின் முதல் சாய்ஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பைலட்கள் தான். அவர்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம் என்றார்.

மனிதாபிமான முயற்சிதான்

மனிதாபிமான முயற்சிதான்

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களுக்கு நாங்கள் முன்னுரிமை தருவதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே வேலையிழந்து தவித்து வருகின்றனர். எனவே அவர்களை காப்பாற்றுவது எங்களின் கடமை மற்றும் மனிதாபிமானமும கூட, என்று மேலும் அவர் கூறினார்.

கூடுதல் விமானங்கள்

கூடுதல் விமானங்கள்

எங்கள் நிறுவனம் ஏற்கனவே 100 பைலட்களையும், பயணிகளின் உதவியாளர்கள் (Cabin crew) 200 பேரையும், பொறியாளர்கள் 200 பேரையும் பணியமர்த்தி உள்ளோம். இன்னும் கூடுதலாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காகவே கூடுதலாக விமானங்களையும் வாங்க முடிவெடுத்துள்ளோம் என்றும் அஜய் சிங் கூறினார்.

இடையில் நிற்காது

இடையில் நிற்காது

கடந்த 18ஆம் தேதியன்று 24 புதிய விமானங்களை வாங்குவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானங்களின் சேவை வரும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே மாதம் 2ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இயக்கப்படும் விமானங்கள் மும்பையில் இருந்து இடையில் எங்கும் நிற்காமல் ஹாங்காங், ஜெட்டா, துபாய், கொழும்பு, டாக்கா, ரியாத், காத்மண்டு மற்றும் பாங்காக் போன்ற நகரங்களுக்கு விமான சேவையை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

சிரமங்களை போக்க முயற்சி

சிரமங்களை போக்க முயற்சி

புதிதாக வாங்கியுள்ள சர்வதேச போக்குவரத்துக்கான விமானங்கள் வரும் மே மாத இறுதி வாக்கில் சேவையை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பயணிகள் விமான டிக்கெட் வாங்குவது மிகக்கடினமாக உள்ளது. இதை உணர்ந்துதான் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் விமான பயணிகளின் அனைத்து சிரமங்களையும் போக்க தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துவருகிறது என்றார் அஜய் சிங்.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spice Jet take 400 employees and 100 pilots from Jet Airways

Spice Jet has provided jobs to more than 100 pilots, over 200 cabin crew and 200-plus technical and airport staff of Jet Airways. Spice Jet is giving
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X