ஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிகர லாபம் 22.63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான் காவது காலாண்டில் நிகர லாபம் 5885.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 4799.28 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து சராசரி சொத்து மதிப்பு 19.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் வருவாய் ஹெச்.டி.எஃப்.சி வங்கி 31,204.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2017 - 2018 ஆம் நிதியாண்டில் 25,549.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 22.1 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த மார்ச் 2019-வுடன் முடிவடைந்த காலாண்டில் வாராக்கடன் 1.36 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 1.38 சதவிகிதமாகும். இதுவே டிசம்பர் மாத காலாண்டில் 1.38 சதவிகிதமாகும். இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.30 சதவிகிதமாக இருந்தது. இதுவே நிகர வாராக்கடன் 0.40 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி

நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு

நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் நிகர வட்டி வருவாய் 22.8 சதவிகிதம் அதிகரித்து 13,089.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வங்கியின் நிகர லாபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் நிகர லாபம் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இது வரை இல்லா  நிகரலாபம்

இது வரை இல்லா நிகரலாபம்

ஹெச்.டி.எஃப்.சி வங்கி கடந்த காலாண்டில் 5885.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் காலாண்டில் 5005.70 ஜ்கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகர லாபம் இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்
 

பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்

இதையடுத்து இந்த லாபத்தினை பங்குதாரர்களுடன் பகிந்து கொள்ளும் வகையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கி 15 ரூபாயை டிவிடெண்டாக கொடுக்க தீர்மானித்துள்ளது. இது அடுத்து வரும் பொதுக்கூட்டங்களில் பங்கு தாரர்களின் ஒப்புதல் பெற்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிதிதிரட்ட அனுமதி

நிதிதிரட்ட அனுமதி

இது தவிர கடன் பத்திரங்கள் மூலமாக அடுத்த 12 மாதங்களில் 50,000 கோடியை நிதியாக திரட்டிக் கொள்ளவும் இந்த வங்கி குழு அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிதி திரட்டல் மூலம் வங்கியின் கட்டமைப்புகள், நிதியாண்மையை விரிவு படுத்த உள்ளதாகவும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Bank Q4 profit beats 23% to Rs 5,885 cr

HDFC Bank net profit rises 22.63 per cent year-on-year, same time jump in March quarter net profit at Rs 5,885.12 crore, same last year last quarter profit Rs 4,799.28 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X