இந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் சீனாவின் மிக பிரபலமான ஆப் ஆன டிக் டாக்-ஐ இந்தியா தடை செய்துள்ளது. இதன் மூலம் தினசரி 5 லடசம் டாலர்கள் நஷ்டமாவாதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் 250- க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளன என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

 

Tik tok நிறுவனம் பல குறுகிய வீடியோகளை ஸ்பெஷல் எப்பெக்டுடன் இந்த டிக் டாக் இணையதளத்தில் வெளியிட அனுமதித்துள்ளது. உலகளாவிய அளவில் பயன் படுத்தப்படும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும். உலகளாவிய அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களில், இந்தியாவில் மட்டும் சுமார் 300 மில்லியன் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்துள்ளன.

இந்தியாவில் டிக் டாக் மட்டும் அல்லாது சமூக வலைதளங்களும் இந்திய நீதி மன்றங்களால் கவலையில் ஆழ்ந்துள்ளன. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் காரணமாக பல விதமான சர்சைகள் காரணமாக சில நாட்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைதளங்கள் சில மணி நேரங்கள் முடக்கப்பட்டு பின் செயல்பாட்டுக்கு வந்தன. இந்த நிலையில் இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் கவலையில் உள்ளன.

வரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு

ஐ.டி துறைக்கு தடையை ரத்து செய்ய அறிவுறுத்தல்

ஐ.டி துறைக்கு தடையை ரத்து செய்ய அறிவுறுத்தல்

கடந்த சனிக்கிழமையன்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தடையை ரத்து செய்ய நீதி மன்றம் அறிவுறுத்தியது. கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தங்கள் பிளார்ட்பார்மில் மீண்டும் பயன்பாட்டை அனுமதிக்குமாறு ஐடி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

பெர் டே $5 லட்சம் டாலர் வரை நஷ்டம்

பெர் டே $5 லட்சம் டாலர் வரை நஷ்டம்

ஒவ்வொரு நாளும் 5,00,000 டாலர்களை நிதி இழப்புகளை சந்திப்பதோடு, முதலீடுகளின் மதிப்பு மற்றும் வருவாய் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தடை நீக்கப்பட்டதையடுத்து முதலீடிட்டு தாரர்களும் விளம்பர தாரர்களுக்கும் வெற்றியாக எடுத்துக் கொண்டது.

ஒரு நாளைக்கு 1 மில்லியன் பயனாளர்களை இழந்துள்ளது
 

ஒரு நாளைக்கு 1 மில்லியன் பயனாளர்களை இழந்துள்ளது

தடை செய்யப்பட்ட பின்பு இந்த டிக் டாக் ஆப் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் பயனாளர்களை இழந்துள்ளது. இது தடை விதிக்கப்பட்டதிலிருந்து சுமார் 6 மில்லியன் பயனாளர்களை இழந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழகத்திற்கே வந்த வழக்கு

மீண்டும் தமிழகத்திற்கே வந்த வழக்கு

உச்ச நீதி மன்றம் இதுவரை எந்த அறிக்கையும் அளிக்காததோடு மீண்டும், தமிழக நீதிமன்றங்களுக்கே மாற்றியுள்ளது. இந்த நிலையில் வரும் புதன் கிழமையன்று இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வருகிறது.

இளைஞர் மத்தியில் பிரபலம்

இளைஞர் மத்தியில் பிரபலம்

டிக் டாக்கில் சில இளைஞர்களின் நடனம் பாடிற்கு ஏற்றவாறு உதட்டசைவு உள்ளிட்டவற்ரை மிகப் பிரபலமடைந்து வருகிறது. அதோடு சொந்தமாக வீடியோக்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் டிக் டாக் செயலியில் இருக்கு பிற நபர் செய்யும் வினோதமான, நகைச்சுவையான வீடியோக்களை பார்க்கலாம்

பிற சமூக வலைதளங்களில்  காணலாம்

பிற சமூக வலைதளங்களில் காணலாம்

அதேசமயம் அந்த வீடியோக்களை நீங்கள் பிற சமூக வலைதளங்களிலும் காண முடியும். அதற்காக தனியாக கணக்கு இருக்க தேவையில்லை.இதனால் இன்றளவில் இளைஞர் மத்தியில் மிக பிரபல மடைந்து வந்த இந்த ஆப் தற்போது பலரின் குறும்புத் தனமான சேட்டைகளையும் குறைத்துள்ளது.

ஆண்டிராய்டு போன் களில் டிக் டாக் பர்ஸ்ட்

ஆண்டிராய்டு போன் களில் டிக் டாக் பர்ஸ்ட்

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த டிக் டாக் ஆப் சீனாவில், அங்குள்ள நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட்போன் களில் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான செயலிகளில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த ஆப் முதல் இடத்தில் உள்ளது.

இதுவரை 100 கோடி பேர் பதிவிறக்கம்

இதுவரை 100 கோடி பேர் பதிவிறக்கம்

இது வரை 100 கோடி பேர் இந்த டிக் டாக் ஆப் பதிவிறக்கம் செய்துள்ளனர். சீனாவில் இந்த டிக் டாக் டூயூன் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இது குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் மிக பிரபலமாக உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் டிக் டாக்கை பதிவிறக்கும் செய்யும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர் ஆகும்.இந்த டிக் டாக் ஆப் பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு ஆப் ஆகும்.

என்ன தான் பிரச்சனை?

என்ன தான் பிரச்சனை?

இந்த டிக் டாக் செயலியில் பல ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகளும் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் தமிழ்நாட்டிலும் இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறிவந்த நிலையில் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கம்

இந்த மாதிரியான பல எதிர்ப்புகளுக்கு பின் டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடையை எதிர்த்து டிக் டாக் தரப்பில் உச்ச நிதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த நிலையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் அந்த ஆப் நீக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் தடைக்கு பின்னர் நீக்கம்

இந்தோனேசியாவில் தடைக்கு பின்னர் நீக்கம்

குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதற்கு இது வித்திடலாம் என்பதால் இந்த செயலில் முதலில் இந்தோ நேசியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் இது குறித்து சிறப்பு கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று டிக் டாக் தரப்பில் கூறப்பட்டதையடுத்து அந்த தடை நீக்கப்பட்டது.

வங்க தேசத்திலும் தடை

வங்க தேசத்திலும் தடை

இதேபோன்று வங்கதேசத்திலும் டிக் டாக்கிற்கு தடை உள்ளது. 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இம்மாதிரியான செயலியை பயன்படுத்தக் கூடாது என்னும் சட்டத்தை இது மீறுவதால் இந்த ஆப்க்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்பட்டது

இந்திய சட்டங்களை மதிக்கிறோம்

இந்திய சட்டங்களை மதிக்கிறோம்

இது குறித்து டிக் டாக் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகம் தொடர்பான இந்திய சட்ட திட்டங்களை மதிக்கிறோம். இதைத் தொடர்ந்து கண்காணிப்பு நடைமுறைகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய பயானாளிகளை உருவாக்கிய 60 லட்சம் காணொளிகளை நாங்கள் நீக்கி உள்ளோம் என்றும் டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tiktok டிக்டாக்
English summary

TikTok ban causing $500,000 daily loss, risks 250 jobs

india's ban on popular Chinese video app TikTok is resulting in financial losses of up to $500,000 a day for its developer. and has put more than 250 jobs at risk, the company said in a court filing seen.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X