அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பொதுத்துறையை வங்கியான அலாகாபாத் வங்கிக்கு அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் மூலதனமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

இதுகுறித்து அலாகாபாத் வங்கி செபிக்கு அளித்துள்ள அறிக்கையில், அலாகாபாத் வங்கியில் மத்திய அரசு அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 3000 கோடி ரூபாய் இருந்தது. இதையடுத்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நடத்திய ஆலோசனையில் அடிப்படை மூலதனத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்தது.

இந்த நிலையில் அலாகாபாத் வங்கிக்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 5000 கோடி ரூபாயை அளித்துள்ளது. இதையடுத்து வங்கியின் மூலதனம் ஏற்கனவே இருந்த 3000 கோடி ரூபாயுடன் மொத்தம் 8000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது

நிதி திரட்டி கொள்ளும் உச்ச வரம்பு அதிகரிக்கும்

மேலும் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் அதிகரிக்கப்பட்ட பின்னர், வங்கி நிதி திரட்டி கொள்ளும் உச்ச வரம்பும் 8000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வங்கிகளின் காலாண்டு முடிவுகள் குறித்து ஒரு அலசலை பார்க்கலாம்.

டிசம்பர் காலாண்டில் நஷ்டம்

இந்த நிலையில் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த 2018 டிசம்பருடன் முடிவடைந்த 3-வது காலாண்டில் இதன் நிகர லாபம் குறைந்து - 732.81 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதாவது நஷ்டத்தில் இருந்தது. இதுவே செப்படம்பர் 2018, அதாவது இரண்டாவது காலாண்டில் இதன் நிகர லாபம் - 1822.71 கோடி ரூபாயாகவும் குறைந்திருந்தது. இதுவே ஜீன் காலாண்டில் - 1944.37 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் அதிகபட்ச தொகையான -3509.63 கோடி ரூபாயாகவும் லாபம் நஷ்டமடைந்துள்ளது.

செயல்படாத சொத்தின் மதிப்பும் தொடர்ந்து அதிகரிப்பு

இந்த நிலையில் செயற்படாத சொத்துகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2018ல் மட்டும் மொத்த செயல்படாத சொத்தின் மதிப்பு 28,218.79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் இந்த சொத்தின் மதிப்பு 27,236. 19 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: allahabad bank
English summary

Govt raises authorised capital of Allahabad Bank to Rs 8,000 cr

state- owned allahabad bank said tuesday the goverment has incresed its authorised capital by Rs.5000 crore to Rs.8000 crore
Story first published: Thursday, April 25, 2019, 8:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X