பிட்காயினால் 900 கோடி நஷ்டமா..? கதறிய பணக்காரர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மசயோசி சன் (Masayoshi son). நாம் அதிகம் கேள்விப்பட்ட அல்லது அதிகம் பயன்படுத்தும் பிரண்டுகளுக்கே வியாபாரம் செய்ய காசு கொடுக்கும் (முதலீடு செய்யும்) பெரும் பணக்காரர்.

 

இவர் கொடுத்த பணத்தில் தான் Uber, Ola, Flipkart, Oyo என பலரும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்து லாபம் பார்த்து வருபவர்.

இவரின் இலக்குப் படி இன்னும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும் எனக் காத்திருந்த போது தான் பிட்காயின் கண்ணில் படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவில் ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீடு: ஜேபி மார்கன் தகவல்

டிசம்பர் 2017

டிசம்பர் 2017

டிசம்பர் 2017 வாக்கில் பிட்காயின் தன் வாழ்நாள் உச்சமான 19,500 டாலர் மதிப்பில் வர்த்தகமாகி வருகிறது. அந்த நேரத்தில் தான் நம் மசயோசி சன்னின் சாஃப்ட் பேங்க் நிறுவனம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து Fortress Investment Group என்கிற நிறுவனத்தை வாங்குகிறார்கள். இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பீட்டர் ப்ரிஜெருக்கு க்ரிப்டோகரன்ஸிகள் என்றால் உயிர். எப்படியோ மசயோசி சென்னின் மனதை மாற்றி, மண்டையைக் கழுவி பிட்காயினில் முதலீடு செய்ய வைத்துவிட்டார். மசயோசி சன் பிட்காயினில் முதலீடு செய்ய பலரும் காரணமாக இருந்தார்கள். ஆனால் ஒரு பெரிய காரணம் என்றால் அது பீட்டர் ப்ரிஜெர் தான்.

முதலீடு

முதலீடு

மசயோசி சன்னும் கொஞ்சம் பணத்தை பிட்காயினில் முதலீடு செய்திருக்கிறார் (எவ்வளவு முதலீடு செய்தார் எனத் தெரியவில்லை). அப்போது பிட்காயினி மதிப்பு சுமார் 19,600 டாலருக்கு நெருக்கமாக வர்த்தகமாகி வந்தது. அதன் பின் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளளில் பிட்காயின் செல்லாது என அறிவிக்கத் தொடங்கினார்கள். அப்படியே பிகாயினின் மதிப்பும் பாதிக்கு பாதியாக சரிந்தது.

பிட்காயின் போக்கு
 

பிட்காயின் போக்கு

கடந்த டிசம்பர் 2017 ஒரு பிட்காயினின் மதிப்பு சுமார் 19650 டாலராக இருந்தது. அதன் பின் தொடங்கிய சரிவில் மார்ச் 2018-ல் சுமார் 11,500 டாலர் தொட்டது. அதன் பின் இன்று வரை தன் 10,000 டாலர் மதிப்பைத் தொடவே இல்லை. தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 5,426 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பிட்காயின் 41 சதவிகிதம் விலை இறங்கி இருக்கிறது.

50% நஷ்டம்

50% நஷ்டம்

மசயோசி சன் முதலீடு செய்யும் போது பிட்காயினின் மதிப்பு தன் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அப்போது முதலீடு செய்தவருக்கு போட்ட காசைக் கூட மீண்டும் ஒழுங்காக திருப்பி எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகும் பிட்காயினின் தொடர் நஷ்டத்தை பொருக்க முடியாமல் கடந்த 2018-லேயே விற்றுவிட்டாராம். எப்போது என்ன விலைக்கு முதலீடுகளை விற்றார் என்கிற விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த ஒரு டீலில் மட்டும் மசயோசி சன்னுக்கு சுமார் 130 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மட்டும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உறுதி செய்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 900 கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

masayoshi sen a billionaire lost his 130 million dollar wealth in bitcoin

masayoshi sen a billionaire lost his 130 million dollar wealth in bitcoin
Story first published: Thursday, April 25, 2019, 15:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X