நிரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் .. Rolls Royce Ghost உள்ளிட்ட கார்கள் ஏலம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி, மெகல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். இதையடுத்து தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை அமலாக்க துறை முடக்கி வைத்து ஏலம் விட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இவரின் ரூபாய் 6000 கோடி மதிப்பிழான சொத்துக்களை அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக நிரவ் மோடியிடம் உள்ள 11 சொகுசு கார்களும், மெகல் சோக்சி பேரில் 2 கார்களும் மொத்தம் 13 கார்களை ஏலம் விட மும்பை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது.

இதனால் நிரவ்மோடி வைத்திருந்த Rolls Royce Ghost, Porsche Panamera , Mercedes Benz , Honda Cars , Toyoto Fortuner , Toyoto Innova , Honda Brios உள்ளிட்ட 13 கார்களை ஏலம் விட எடுத்துக் கொண்டது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் வங்கிகள் எடுத்துக் கொள்ளும் என்றும் அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம் அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்

Metal Scrap Trade இணையதளம் வெளியீடு

Metal Scrap Trade இணையதளம் வெளியீடு

இதனைத் தொடர்ந்து 13 கார்களின் புகைப்படங்கள் மற்றும் காரின் தொடக்க விலைகள் , கார்களின் எண்கள் உள்ளிட்டவை "Metal Scrap Trade Corporation Limited" என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிறுவனம் கார்களை விற்று பெறப்பட்ட தொகையை சமந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அளிக்கும், இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறைக்கு அனுப்பவும் , இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ராய்ஸ் காரின் தொடக்க விலையாக ரூ.1.3 கோடி

ராய்ஸ் காரின் தொடக்க விலையாக ரூ.1.3 கோடி

நிரவ் மோடியிடம் இருந்த ரோல் ராய்ஸ் காரின் விலை 5 கோடி ரூபாய் ஆகும். ஆனால் நிரவ்மோடியின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தொடக்க விலையாக 1.3 கோடி ரூபாயாக் நிர்ணயித்து ஏலம் விடப்பட்டது.  இத்தகைய ஏலம் விடப்பட்ட தொகையை சமந்தப்பட்ட வங்கிகள் பெற்றுக் கொள்ளும். இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவியங்களும் ஏலம்
 

ஒவியங்களும் ஏலம்

இதோடு மும்பையில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில்  நிரவ் மோடியிடம் இருந்த 173 ஓவியங்களும் வருமான வரித்துறையால் ஏலம் விடப்பட்டுள்ளது கவனிக்கதக்கது. அதேசமயம் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 68 ஒவியங்களையும் ஏலம் விட அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே ஜாமீன் தள்ளுபடி

ஏற்கனவே ஜாமீன் தள்ளுபடி

இந்த நிலையில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் நிரவ்மோடி பெற்ற கடன் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் , நிரவ்மோடி பண மோசடி செய்தது நிரூப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனை அளித்தது. ஆனால் அதேசமயம் மீண்டும் ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி மனுவை தாக்கல் செய்தார். ஆனால் இவரின் மனுவை தள்ளுபடி செய்தது. கடந்த மார்ச் 29 -ம் தேதி நிரவுக்கு இரண்டாவது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில். இன்னும் குறைந்த பட்சம் ஆறு வாரங்களுக்கு சிறையில் இருப்பார் என்றும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirav Modi, Mehul Choksi's 11 luxury cars on auction

Government-owned Metal Scrap Trading Corporation auctioned 13 cars belonging to fugitive diamond traders Nirav Modi and his uncle Mehul Choksi .
Story first published: Friday, April 26, 2019, 9:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X