வேதாந்தாவிற்கு அனுமதி.. ராஜஸ்தானில் ஆயில் & எரிவாயு உற்பத்தி விரிவாக்கம்.. ரூ,12,000கோடி முதலீடு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ராஜஸ்தானில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஆலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த விரிவாக்க பணிக்காக வேதாந்தா நிறுவனம் 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

 

இந்த விரிவாக்கம், பார்மர், ஜலோர் மாவட்டங்களில் உள்ள இதன் ஆலைகளில் நடைபெற உள்ளது. தற்போது உள்ள 3,00,000 BOPD (Barrels oil per day) இருந்து 4,00,000 BOPD யாகவும், மற்றும் 165 mmscfd (நாள் ஒன்றுக்கு மில்லியன் நிலையான கனநீர் ஊட்டம்) இருந்து 750 mmscfd க்கும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

வேதாந்தாவிற்கு அனுமதி.. ராஜஸ்தானில் ஆயில் & எரிவாயு உற்பத்தி விரிவாக்கம்.. ரூ,12,000கோடி முதலீடு

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், உள்துறை நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், முன்மொழியப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்திற்கு இறுதியாக அனுமதி அளித்ததுள்ளது. எனினும் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி

இதையடுத்து 3111 சதுர கி.மீ பரப்பளவில் இந்த வேதாந்தா நிறுவனம் அமைந்துள்ளது. இதில் 1500 ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் தற்போது எண்ணெய் உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் பீப்பாய் என்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

விரிவாக்க திட்டம் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

இதை ஒரு நாளைக்கு 4 லட்சம் பீப்பாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மேலும் 150 ஹெக்டேர் பரப்பளவு விரிவு படுத்தப்படுகிறது. மேலும் இந்த விரிவாக்க திட்டம் 12,000 கோடி ரூபாயில் 7 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vedanta gets green signal for oil & gas expansion project in Rajasthan 

Vedanta has received environment clearance for the expansion of its oil and gas operation in Rajasthan that would entail an investment of Rs 12,000 crore.
Story first published: Friday, April 26, 2019, 21:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X