பயணிகளின் கோபத்துக்கு ஆளான Air India.! இரவு 8.30 மணி வரை அனைத்து விமானங்களும் 2 மணி நேரம் தாமதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது தனியார் நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ போட்டி போட்டுக் கொண்டு ஜெட் ஏர்வேஸ் பயணிகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நம் அரசு விமான சேவை நிறுவனமான Air India... இன்னமும் அதே சோம்பேறித் தனத்துடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை 3.30 மணி முதல் Air India நிறுவனத்தின் பயணிகள் சேவை மென்பொருள் (Passenger Service system) வேலை செய்யவில்லையாம்.

Air India நிறுவனத்தின் விமான பயணச் சீட்டுக்களை புக் செய்திருக்கும் விமானிகளின் செக் இன் தொடங்கி, லக்கேஜ் மற்றும் உடைமைகளை பேக் செய்வது, கவுண்ட்ரில் முன் பதிவுகளை மேற்கொள்வது என எல்லா விஷயமும் இந்த பயணிகள் மென்பொருளை நம்பித் தான் இருக்கிறதாம். அத்தனை முக்கியமான மென்பொருள் தான் இன்று காலை 3.30 மணி முதல் சொதப்பித் தள்ளிக் கொண்டிருக்கிறதாம்.

என்னிடமே ரூ.1 கோடி தராம ஏமாத்திட்டாய்ங்க..! Modi-ஜியோட கோட் சூட்டயே 4.3 கோடிக்கு வாங்குனவன் நான்..! என்னிடமே ரூ.1 கோடி தராம ஏமாத்திட்டாய்ங்க..! Modi-ஜியோட கோட் சூட்டயே 4.3 கோடிக்கு வாங்குனவன் நான்..!

பயணிகள் வெறுப்பு

பயணிகள் வெறுப்பு

உள்நாட்டு விமானம் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் என 155 Air India நிறுவன விமானங்களும் சராசரியாக 2 மணி நேரங்கள் தாமதமாக புறப்படும் என Air India நிறுவனமே அனைத்து விமான நிலையங்களிலும் அறிவிக்கச் சொல்லி இருக்கிறதாம். இந்த தாமதம், தோராயமாக இன்று இரவு 8.30 மணி வரை நீடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்களாம்.

ஏர் இந்தியா தரப்பு

ஏர் இந்தியா தரப்பு

Air India நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் அஸ்வினி லொஹானி இன்று இரவுக்குள் அனைத்து Air India விமானங்களும் சீராக இயங்கத் தொடங்கும் எனச் சொல்லி இருக்கிறார். ஒரு நாளில் சுமார் 670 விமானங்களை Air India நிறுவனம் (அனைத்து துணை நிறுவனங்களையும் சேர்த்து) இயக்குகிறதாம். அதில் 155 விமானங்களுக்கு மட்டுமே இந்த கால தாமதம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் தனியார் நிறுவனங்களோ தட்டி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இண்டிகோ

இண்டிகோ

இந்திய விமானப் பயணிகளை அதிகம் தன் கைவசம் வைத்திருக்கும் நிறுவனமாக இண்டிகோ முதலிடத்தில் இருக்கிறது. மார்ச் 2019-ல் இண்டிகோ நிறுவனம் 54 லட்சம் விமான பயணிகளுக்கு தன் சேவையை வழங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய விமானப் பயணிகள் சந்தையில், இது 46.9 சதவிகிதம். மார்ச் 2019-ல் இரண்டாவது இடத்தில் ஸ்பைஸ் ஜெட் 15.7 லட்சம் பேருக்கு தன் சேவையை வழங்கி 13.6 சதவிகித இந்திய விமானப் பயணிகள் சந்தையை தன் கைவசம் வைத்திருக்கிறது.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

ஒரு விமானத்தில் 100 இருக்கைகள் இருக்கிறது என்றால் அதில் எத்தனை இருக்கைகள் நிரம்புகிறது என ஒரு கணக்கு பார்ப்பார்கள். அதை ஆங்கிலத்தில் seat occupancy என்பார்கள். இந்த seat occupancy கணக்கில் இந்திய விமான நிறுவனங்களில், ஸ்பைஸ் ஜெட் முதலிடத்தைப் பிடித்திருக்கிறதாம். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் எப்போதும் 100-க்கு 91 இருக்கைகள் நிரம்பி விடுகிறதாம்.

GoAir விமான சேவை நிறுவனம்

GoAir விமான சேவை நிறுவனம்

இந்திய விமான சேவை நிறுவனங்களிலேயே ஒழுங்காக நேரத்துக்கு (Punctuality) விமானங்களை இயக்குவது மற்றும் விமானங்களை ரத்து செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்களில், Go Air முதலிடம் பிடித்திருக்கிறது. இவர்கள் 100 விமானங்களை இயக்குகிறார்கள் என்றால் 95 விமானங்களை சொன்ன நேரத்தில் ஒரு நொடி கூட தாமதிக்காமல் இயக்குகிறார்களாம்.

Air India

Air India

இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தனியார் நிறுவனமான Go Air, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்றவைகளுக்கு அப்படியே ரிவர்ஸ். ஒழுங்கீனமான நிறுவனங்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதாவது அதிக விமானங்களை ரத்து செய்வது, சொன்ன நேரத்தில் விமானங்களை இயக்காமல் இருப்பதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறதாம். இதையும் அரசு அமைப்பான பயணிகள் விமான சேவை இயக்குநரகமே (Director General of Civil Aviation) தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. பயணிகள் விமான சேவை இயக்குநரகம் சொல்வது உண்மை தான். ஒரே நாளில் 155 விமானங்கள் 2 மணி நேரம் தாமதம் என்றால் யார் தான் விரும்புவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

air passengers are angry on air india due to 2 hour flight delay for 155 flights

air passengers are angry on air india due to 2 hour flight delay for 155 flights
Story first published: Saturday, April 27, 2019, 16:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X