ரூ.5000 கோடி நஷ்டத்தில் Tesla..! என்ன இப்ப அடுத்த ஜூனில் 4000 கோடியாக குறைப்போம்..! அப்ப லாபம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் Tesla நிறுவனம், கடந்த மார்ச் 2019 காலாண்டில் 702 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு, இது டெஸ்லாவின் மோசமான காலாண்டு முடிவுகளில், மார்ச் 2019-க்கு நான்காம் இடமாம். இதை விட கொடுமையான விஷயம் என்னவென்றால், அடுத்த ஜூன் 2019 காலாண்டிலும் நஷ்டம் வரும், ஆனால் குறைவக வரும் என Tesla நிறுவனத்தினர்களே சொல்கிறார்களாம்.

ஆக அடுத்து வரும் ஜூன் 2019 காலாண்டிலும், Tesla நிறுவனம் லாபம் பார்க்காது என்பதை மறைமுகமாகச் சொல்கிறார்கள். கடந்த செப்டம்பர் 2018 மற்றும் டிசம்பர் 2018 ஆகிய இரண்டு காலாண்டுகளில் தான் Tesla நிறுவனம் தொடர்ந்து லாபம் பார்த்தது. இப்போது மார்ச் 2019-ல் Tesla மீண்டும் நிகர நஷ்டம் கண்டிருக்கிறது.

பயணிகளின் கோபத்துக்கு ஆளான Air India.! இரவு 8.30 மணி வரை அனைத்து விமானங்களும் 2 மணி நேரம் தாமதம்..! பயணிகளின் கோபத்துக்கு ஆளான Air India.! இரவு 8.30 மணி வரை அனைத்து விமானங்களும் 2 மணி நேரம் தாமதம்..!

வரலாற்று உச்சம்

வரலாற்று உச்சம்

Tesla-வின் வரலாற்றிலேயே கடந்த டிசம்பர் 2018-ல் தான் இந்த நிறுவனத்தின் வருவாய் 7.20 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது. Tesla வரலாற்றிலேயே உச்சபட்ச வருவாய். அந்த காலாண்டில் நிகர லாபம் மட்டும் 140 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது தான் Tesla கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. மார்ச் 2019 காலாண்டில் விற்பனை சரிந்துவிட்டது.

விற்பனை எண்ணிக்கை

விற்பனை எண்ணிக்கை

Tesla நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை மார்ச் 2019 காலாண்டில் வெறும் 63,000 ஆக சரிந்திருக்கிறது. ஆனால் டிசம்பர் 2018-ல் Tesla-வின் விற்பனை 90,000 ஆக இருந்தது. இப்போது வரும் காலாண்டிலும் Tesla-வின் கார்கள் விற்பனை எண்ணிக்கை 90,000 - 1,00,000 யூனிட்களாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.

கஷ்டமா இருக்கு
 

கஷ்டமா இருக்கு

Tesla நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார்களை போக்குவரத்து செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கிறதாம். அதனால் தான் இந்த மார்ச் 2019 காலாண்டில் இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம். இதை வரும் காலாண்டுகளில் நிச்சயம் சரி செய்துவிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் Tesla நிறுவனத்தினர்.

உற்பத்தி & போக்குவரத்து

உற்பத்தி & போக்குவரத்து

இன்றைய தேதிக்கு உலகிலேயே அதிகம் விற்பனை ஆகும் மின்சார கார் என்றால் அது Tesla-வின் மாடல் 3 ரக கார்கள் தான். கடந்த 2017-ம் ஆண்டில் வெறும் 1,550 மாடல் 3 ரக கார்கள் விற்பனை ஆனதாம். ஆனால் 2018-ல் அதே மாடல் 3 ரக கார்கள் 1,40,000 எண்ணிக்கை விற்பனை ஆகி இருக்கிறதாம். இந்த விற்பனை அதிகரிப்பின் போதே தேவையான கார்களை உற்பத்தி செய்யமுடியாமலும், உற்பத்தி செய்த கார்களை ஒழுங்காக போக்குவரத்து செய்து, சந்தைகளில் விற்க முடியாமலும் தவித்திருக்கிறது Tesla.

வரிக் கழிவு

வரிக் கழிவு

அமெரிக்காவில் ஒரு மின்சார வாகன தயாரிப்பாளர், விற்கும் முதல் 2,00,000 கார்களுக்கு 7,500 டாலர் தொகையை வரிக்கழிவாக பெறலாம். அதாவது கார்களை வாங்குபவர்கள், அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் இந்த 7,500 டாலரை கழித்துக் கொள்ளலாம். இந்த 2,00,001-வது காரை வாங்குபவரில் இருந்து இந்த வரிக் கழிவு 7500 டாலரில் இருந்து வெறும் 3,750 டாலராக குறைந்துவிடும். டெஸ்லா நிறுவனத்தின் 2,00,000 யூனிட்கள் ஜனவரி 2019-க்கு முன்பே முடிந்துவிட்டதாம்.

அவுட் லேட்டுகளுக்கு பூட்டு

அவுட் லேட்டுகளுக்கு பூட்டு

இந்த விலைப் பிரச்னையையும் Tesla சமாளிக்க வேண்டி இருக்கிறதாம். இதனால் கடந்த பிப்ரவரி 28, 2019 அன்று தன் கார்களுக்கான விலையை 2,000 டாலர் வரை குறைத்து விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறது. இப்படி காருக்கு 2,000 டாலரை விலையைக் குறைத்து கொடுக்க, ஏகப்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்களாம். அதோடு ஏகப்பட்ட அவுட் லெட்டுகளுக்கும் பூட்டு போட்டிருக்கிறார்களாம்.

இத்தனை சிரமங்களுக்கு இடையில் எப்படி Tesla லாபம் பார்க்கப் போகிறது எனத்தெரியவில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tesla டெஸ்லா
English summary

tesla march 2019 quarterly loss rupees 5000 crores

tesla march 2019 quarterly loss rupees 5000 crores
Story first published: Saturday, April 27, 2019, 16:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X