என்னாது தங்க வாரமா.. அப்படின்னா லீவா... கதிகலங்கி நிற்கும் ஜப்பானியர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ : ஜப்பான் மக்களுக்கு இப்படியும் ஒரு கவலையா? அது என்னனு கேட்கிறிங்களா? அட நம்ம ஜப்பான் மக்களுக்கு லீவா நினைச்சு தான் கவலையாம். ஆமாங்க தொடங்கியிருக்கிற தங்க வாரத்த நினைச்சுதானாம்.

 

தொடங்கியிருக்கும் தங்க வாரத்தில் (27 ஏப்ரல் 2019) சனிக்கிழமை முதல் அடுத்து வரவிருக்கும் 10 நாட்கள் விடுமுறை என்பதே அவர்களின் பெரிய கவலையே. இந்த 10 நாட்கல் விடுமுறை, அதாவது தங்க விடுமுறை, ஜப்பானில் தங்க வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக விமான நிலையங்களிலும், ஏடிஎம் மையங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு தினம், பசுமை தினம், குழந்தைகள் தினம் உள்ளிட்ட பல விடுமுறை நாட்களும், அதைத் தொடர்ந்து இரண்டு விடுமுறை நாட்களுக்கு மத்தியில் விடுமுறை நாள் வந்தால், அந்த இடைப்பட்ட ஒரு நாளும் விடுமுறையாக அளிக்க வேண்டும் என்ற ஜப்பானின் விதி முறைகளின் அடிப்படையில், மே முதல் வாரத்தில் தொடர் விடுமுறை நாட்களாக மாற்றியுள்ளது ஜப்பான் அரசு.

ஏடிஎம்களில் நிரம்பி வழியும் கூட்டம்

ஏடிஎம்களில் நிரம்பி வழியும் கூட்டம்

இதில் மே 6-ம் தேதி வரை வங்கிகளும் மூடப்பட்டிருக்கும் என்பதால் அங்கங்கு ஏடிஎம்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறதாம். அதே சமயம் விமான நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறாதாம். இது தான் ஜப்பான் மக்களின் இப்போதைய கவலையாம். மேலும் மற்ற நாடுகளைப் போல் ஜப்பானில் கிரெடிட் கார்டு உபயோகம் அதிகளவு புழக்கத்தில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என்ற கருத்தும் னிலவி வருகிறது.

அலை மோதும் கூட்டம்

அலை மோதும் கூட்டம்

மேலும் 10 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் வெளியூர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் செல்லும் பயணிகள் கூட்டம் விமான நிலையங்களில் நிரம்பி வழிகின்றனவாம். அதோடு புல்லட் ரயில் நிலையங்களிலும், எக்ஸ்பிரஸ் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலை மோதுகிறதாம்.

முதல் முறையாக புல்லட் இருக்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம்
 

முதல் முறையாக புல்லட் இருக்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம்

இந்த விடுமுறையில் உள்நாட்டு பயணங்களுக்கு மத்தியில், ஹொக்கிடோ ஷிங்கன்சென் புல்லட் ரயில் நிலையம் , கடந்த 2016- ஆம் ஆண்டில் சேவையை தனது சேவையை துவங்குகியது என்றும், இது தொடங்கியது இன்று வரை தனது இருக்கிய இட ஒதுக்கீட்டில் மாற்ரம் செய்தது இல்லை என்றும், தற்போது முதல் முறையாக இந்த தங்க வார விடுமுறையில் தனது இருக்கை இட ஒதுக்கீட்டில் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

லக்கேஜ்க்கு கியூவில் நின்ற கூட்டம்

லக்கேஜ்க்கு கியூவில் நின்ற கூட்டம்

இங்கு தான் இப்படி எனில் டோக்கியோவின் ஹனீடா விமான நிலையத்தில் காலையிலிருந்தே வெளியேறும் பயணிகள், நீண்ட வரிசையில் நின்று லாகேஜ் வாங்கவும், கவுண்டர்களிலும் நின்றிருந்தனராம்.

24.67 மில்லியன் மக்கள்- பயணிக்க உள்ளனர்

24.67 மில்லியன் மக்கள்- பயணிக்க உள்ளனர்

மேலும் இது குறித்து ஜப்பானில் உள்ள ஒரு தனியார் பயண நிறுவனம் கூறியதில், சுமார் 24.67 மில்லியன் மக்கள் ஏப்ரல் 25 முதல் மே 5 வரை பயணிக்க உள்ளதாகவும், ஜப்பானிய தனியார் பயண நிறுவனம் JTB Corp தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டுடோடு ஒப்பிடும் போது 1.2 சதவிகிதம் அதிகமாகும். அதோடு உள்நாட்டு பயணங்கள் செய்ய 24.01 மில்லியனாகவும், வெளிநாடுகளுக்கு செல்ல 6,62,000 பேரும் பதிவு செய்துள்ளனர் என்றும் அந்த பயண நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: japan ஜப்பான்
English summary

No of travellers to reach high as golden week holiday begins

An unprecedented 10-day golden holiday started in japan ahead of the imperial succession, with buller train stations, airports and expressways crowded with travelares.
Story first published: Sunday, April 28, 2019, 9:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X