மழையும் இல்லை. கடனும் இல்லை.. விவசாயிகளுக்கு கடனளிக்க மறுத்த மகாராஷ்டிரா வங்கி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மகாராஷ்டிரா உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு பகுதி விவசாயிகளுக்கு கடன் இல்லை என மகாராஷ்டிரா வங்கி மறுத்துள்ளதாம்.

மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மா நிலங்களில் மழையின்மை காரனமாக வறட்சி தலை விரித்தாடுகிறது. இந்த நிலையில் அவுரங்காபாத், லாதூர், அகோலம், அமாராவதி சோலாப்பூர், ஜல்கான் போபால் மற்றும் ஜபல்பூர் போன்ற எட்டு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் இந்த பகுதி மக்கள் அரசு வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் (பேங்க் ஆப் மகாராஷ்டிரா) கடன் உதவி பெற திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதேசமயம் மகாராஷ்டிரா வங்கி இந்த பகுதி மக்களுக்கு கடன் வழங்க கூடாது என்று முடிவெடுத்திருப்பதாகவும், இது குறித்து தலைமை நிர்வாகம், மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளூக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.

இரண்டு வருடங்களில் இரண்டு MD-க்கள் பதவி விலகல்..! Mothers Dairy நிறுவனத்தில் நடக்கும் கூத்து..! இரண்டு வருடங்களில் இரண்டு MD-க்கள் பதவி விலகல்..! Mothers Dairy நிறுவனத்தில் நடக்கும் கூத்து..!

ரூ.1300 கோடிக்கு கடன் விண்ணப்பம்

ரூ.1300 கோடிக்கு கடன் விண்ணப்பம்

இந்த சுற்றறிக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள எட்டு பகுதிகளில் உள்ள இந்த வங்கியின் எந்த கிளையும் விவசாயிகளுக்கு கடன் அளிக்க கூடாது என்பது தானாம். அந்த சுற்றறிகையில் வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயக் கடனாக 1300 கோடி ரூபாய்க்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பகுதிகளில் வாராக்கடன் அதிகம்

இந்த பகுதிகளில் வாராக்கடன் அதிகம்

ஏற்கனவே இந்த பகுதிகளில் வாராக்கடன் 18.36 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளன. இந்த நிலையில் ஒரு வங்கி 15 சதவிகிதத்திற்கும் மேல் வாராக்கடன் சென்றால், அந்த வங்கி மேற்கொண்டு எந்த கடனையும் அளிக்க கூடாது என்பது வங்கிகளின் சட்ட விதி. இந்த நிலையில் ஏற்கனவே 18 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள இந்த பகுதிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

போபால் இரண்டாவது இடம்
 

போபால் இரண்டாவது இடம்

அதிலும் அவுரங்காபாத் பகுதிகளில் மட்டும் 25 சதவிகிதம் வாராக்கடன் உள்ளதாம். இதற்கு அடுத்தாற்போல் போபால் 21 சதவிகிதமும், சோலாப்பூர் 19 சதவிகித வாராக் கடன் களும், அகோலா 16. சதவிகித வாராக்கடனிலும் உள்ளதாக மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகின்றன.

 முன்னுரிமை பெயரளவில் மட்டும்

முன்னுரிமை பெயரளவில் மட்டும்

இந்த நிலையில் வங்கிகள் விவசாய கடனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தாலும், இந்த கடன் மறுப்பு விவாசாயிகள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No bank loans for drought – hit farmers

in an unusual move, a state- run leader, Bank of Maharashtra, has decided not to extend loans in eight zones in maharastra and Madhya Pradesh that include Aurangabad, latur, akola and amaravati, which are hit by drought.
Story first published: Monday, April 29, 2019, 19:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X