டெல்லி: இந்திய அரசு உள் நாட்டு உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் இறக்குமதி வரியை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்த இந்த அறிவிப்பால், திறந்த சந்தையில் கோதுமை வினியோகம் அதிகரிக்கும், இதன் மூலம் அதிகப்படியான தானியங்கள் சந்தையில் புழங்கும். இதோடு அதிகப்படியான தானியத்தையும் சேமிக்க முடியும். இதோடு இந்திய மற்றும் மாநில அரசுகளின் சேமிப்புகளையும் உயர்த்த முடியும் என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்த வட்டாரத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கோதுமை இறக்குமதி செய்யப்படும் நாடுகளில், குறிப்பாக ரஷ்யாவிலிருந்து மிக மலிவான விலையில் கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த கோதுமை மாவு மில்களுக்கு ஏற்கதக்கது அல்ல. இது மிக தகுதியற்ற ஒரு பொருளே.
வாங்குன கடன கொடு இல்ல உன் சொத்து பத்த எல்லாம் வித்துருவேன்..? Essar நிறுவனத்தை கதிகளங்க வைத்த SBI..!

மலிவு விலையால் இறக்குமதி அதிகரிப்பு
இவ்வாறு மிக குறைந்த விலையாவதால் மாவு மில்கள் பல லட்சம் டன் இறக்குமதி செய்து கொள்கின்றன. இதனால் இந்த மாவு மில்கள் உள் நாட்டு விவசாயிகளிடமும் விலை குறைவாகவே கேட்கின்றன. நாளடைவில் விலை குறைவதும் மட்டும் அல்ல. உற்பத்தியையும் குறைக்கின்றன.

உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன்
கடந்த ஆண்டு திறந்தவெளி சந்தையில் மூலம் 7 மில்லியன் டன் கோதுமை விற்பனை செய்ய முடிந்தது. ஆக இது நடப்பு ஆண்டிலும் கூட இந்த விற்பனையை விட அதிகமாக விற்பனை செய்ய முடியும். ஏனெனில் இந்த இறக்குமதி வரி அதிகரிப்பின் மூலம் வியாபாரிகளின் இறக்குமதி குறையும். ஆக அவர்கள் உள் நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்தியை வாங்க முடியும். இதனால் உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு கொள்முதல் இலக்கு
இதே நேரம் அரசு திறந்தவெளி கொள்முதல் மூலம் கோதுமை 10 மில்லியன் டன் ஆகாவும், இதுவே நெல் கொள்முதல் 2 மில்லியன் டன் ஆகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

வறட்சியால் உற்பத்தி குறைவு
கடந்த ஆண்டு நிலவிய வறட்சியின் காரணமாக கோதுமை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கோதுமையின் விலையேற்றத்திற்கும் இதுவே காரணமாகவும் அமைந்தது. ஆக நடப்பு ஆண்டில் இதோடு இந்த வரி அதிகரிப்பும் சேர்ந்துள்ளது. இதனால் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது. மேலும் நடப்பாண்டில் இந்தியாவில் தானிய உற்பத்தி 99.12 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் வரி அதிகரிப்பு
கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு கோதுமை இறக்குமதி வரி 10 சதவிகிதம் அதிகரித்தது. மேலும் இதே ஆண்டில் நவம்பர் மாதத்திலும் இதேபோல் 10 சதவிகிதம் அதிகரித்து இந்த ஒரு வருடத்தில் மட்டும் இரு மடங்காகியது. இது 2018-ம் ஆண்டு மே மாதத்தில் 30 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடப்பு ஆண்டில் தற்போது 10 சதவிகிதம் அதிகரித்து 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு பயனே
இந்த இறக்குமதி வரி அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் லாபம், அதே சமயம் வியாபாரிகளும் உள் நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆக உற்பத்தி விலையும், கொள்முதல் விலையும் சேர்ந்து நாட்டின் பொருளாத நிலையும் கொஞ்சமேனும் மாற்றலாம் என்பதில் சந்தேகமில்லை.